தொடர்ந்து ஆறு போட்டிகள் தோல்வி அடைந்த பெங்களுரு அணி

Pravin
வீராட் கோலி
வீராட் கோலி

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டி பெங்களுரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்று பெங்களுரு அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய பெங்களுரு அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் பார்த்திவ் படேல் மற்றும் கேப்டன் வீராட் கோலி இருவரும் களம் இறங்கினர். பார்த்திவ் படேல் 9 ரன்னில் கிரிஸ் மோரிஸ் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் களம் இறங்கிய டி வில்லியர்ஸ் கோலியுடன் சேர்ந்து பாட்னர்ஷிட் கொடுத்தார். ஆனால் டி வில்லியர்ஸ் 17 ரன்னில் ரபாடா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் 15 ரன்னில் அக்ஷார் படேல் பந்தில் அவுட் ஆகினார்.

ராபாடா
ராபாடா

அதன் பின்னர் வந்த மோயின் அலி 32 ரன்னில் லமிச்சானே பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய கேப்டன் வீராட் கோலி 41 ரன்னில் ரபாடா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த அக்ஷ்தீப் நாத் 19 ரன்னில் ரபாடா பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து வந்த பவண் நெகி ரபாடா பந்தில் டக் அவுட் ஆக பெங்களுரு அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்களை எடுத்தது.

அதன் பின்னர் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரித்திவ் ஷா மற்றும் ஷிகார் தவண் இருவரும் களம் இறங்கினர். ஷிகார் தவண் ரன் எடுக்காமல் டிம் சௌவுதி ஓவரில் டக் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் பிரித்திவ் ஷா உடன் இணைந்து சிறப்பான பாட்னர்ஷிப் கொடுத்தார். நிலைத்து விளையாடிய பிரித்திவ் ஷா 28 ரன்னில் பவண் நெகி பந்தில் அவுட் ஆகினார்.

ஷ்ரேயஸ் ஐயர்
ஷ்ரேயஸ் ஐயர்

அதன் பின்னர் களம் இறங்கிய கோலின் இங்ரம் 22 ரன்னில் மோயின் அலி பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் வீளாசினார். அதை தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் 67 ரன்னில் நந்தீப் சைனி பந்தில் அவுட் ஆகினார். அடுத்தாக வந்த கிரிஸ் மோரிஸ் அதே ஓவரில் டக் அவுட் ஆகினார். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய ரிஷப் பன்ட் 18 ரன்னில் முகமத் சீராஜ் பந்தில் அவுட் ஆகினார்.

அதன் பின்னர் டெல்லி அணி 18.5 ஓவரில் 152-6 ரன்கள் எடுத்து டெல்லி அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகானாக சிறப்பாக பந்து வீசிய ரபாடா தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links