ரஸலின் அதிரடி ஆட்டத்தால் ஐந்தாவது போட்டியிலும் பெங்களுரு அணி தோல்வி

Pravin
ரஸல்
ரஸல்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் எட்டு நகரங்களில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டி பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற கட்டயத்தில் பெங்களுரு அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியில் தொடக்க வீரர்கள் வீராட் கோலி மற்றும் பார்த்திவ் படேல் இருவரும் களம் இறங்கினர். இருவரும் பெங்களுரு அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

அதிரடியாக விளையாடிய பார்த்திவ் படேல் 25 ரன்னில் நிதீஸ் ராணா பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய டி வில்லியர்ஸ் வீராட் கோலியுடன் சேர்ந்து இருவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை நொருக்கினர். இருவரும் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக பறக்கவிட்டனர். அதிரடியாக விளையாடிய வீராட் கோலி அரைசதம் கடந்தார். இந்த போட்டியில் வீராட் கோலி புதிய சாதனையாக ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் ரெய்னாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.

வீராட் கோலி
வீராட் கோலி

மறுமுனையில் டி வில்லியர்ஸ் அதிரடியாக அரைசதம் வீளாசினார். நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய வீராட் கோலி 84 ரன்னில் குல்தீப் யாதவ் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் மார்கஸ் ஸ்டோனிஸ் நிலைத்து விளையாட மறுமுனையில் டி வில்லியர்ஸ் 63 ரன்னில் நரைன் பந்தில் அவுட் ஆகினார். ஸ்டோனிஸ் அதிரடியாக 28 ரன்கள் எடுக்க பெங்களுரு அணி 20 ஓவர்கள் 205 ரன்களை குவித்தது.

கிறிஸ் லிண்
கிறிஸ் லிண்

அதை தொடர்ந்து களம் இறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் கிறிஸ் லிண் மற்றும் சுனில் நரைன் இருவரும் விளையாடினர். வந்த வேகத்தில் சுனில் நரைன் 10 ரன்னில் சந்திப் சைனி பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ராபின் உத்தாப்பா அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். ராபின் உத்தாப்பா 33 ரன்னில் பவண் நெகி பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய கிறிஸ் லிண் 43 ரன்கள் அடித்து நெகி பந்தில் அவுட் ஆகினார்.

இதை தொடர்ந்து களம் இறங்கிய நிதிஸ் ராணா மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் விளையாடினர். ராணா 37 ரன்னில் சஹால் பந்தில் அவுட் ஆகினார். அடுத்தாக கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 ரன்னில் சைனி பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய அதிரடி வீரர் ரஸல் 18 பந்தில் 52 ரன்கள் தேவைபட்ட நிலையில் இரண்டு முறை ஹாட் ரிக் சிக்ஸர்களை வீளாசினார். ரஸல் 13 பந்தில் 48 ரன்களை எடுத்து கொல்கத்தா அணியை வெற்றி பெற செய்தார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஆன்ரே ரஸல் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links