கடைசி லீக் போட்டியில் கெத்து காட்டிய ஆர்சிபி அணி 

Pravin
ஹெத்மயர்
ஹெத்மயர்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்ற வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் கடைசி வார லீக் போட்டிகளுடன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் 54வது லீக் போட்டி பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் விளையாடியது ஹைத்ராபாத் அணி. இந்த போட்டி இரு அணிகளும் கடைசி லீக் போட்டி என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களுரு அணி முதலில் பந்து விச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய ஹைத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் மற்றும் விர்திமான் சாஹா இருவரும் களம் இறங்கினர். சிறப்பான தொடக்கத்தை தந்தாலும் விர்திமான் சாஹா 20 ரன்னில் நந்திப் சைனி பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய மனிஷ் பான்டே கடந்த மூன்று போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் இந்த போட்டியில் வந்த வேகத்தில் 9 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய கேப்டன் வில்லியம்சன் நிலைத்து விளையாட மார்டின் கப்தில் 30 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் அவுட் ஆகினார்.

வில்லியம்சன்
வில்லியம்சன்

அடுத்த வந்த விஜய் சங்கர் மட்டும் அதிரடியாக 27 ரன்கள் அடித்து அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார் கேப்டன் வில்லியம்சன். உமேஷ் யாதவின் கடைசி 20வது ஓவரில் வில்லியம்சன் 6,4,6,4,nb,4 என 28 ரன்கள் குவித்தார். ஹைத்ராபாத் அணி இன்னிங்ஸ் முடிவில் 175 ரன்கள் அடித்தது.

ஹெத்மயர் மற்றும் குல்ஹிரித்
ஹெத்மயர் மற்றும் குல்ஹிரித்

அதன் பின்னர் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர்கள் வீராட் கோலி மற்றும் பார்த்திவ் படேல் இருவரும் களம் இறங்கினர். பார்த்திவ் படேல் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து அதிரடி காட்டிய கோலி 16 ரன்னில் அஹமத் பந்தில் அவுட் ஆக நிலைத்து விளையாடும் டி வில்லியர்ஸ் 1 ரன்னில் அவுட் ஆகி தொடர்ந்து அதிர்ச்சி அளித்தனர்.

பெங்களுரு அணி 20-3 என்ற மோசமான நிலையில் இருந்த போது ஜோடி சேர்ந்த சிம்ரோன் ஹெத்மயர் மற்றும் குல்ஹிரித் சிங் இருவரும் ஒரு சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர். 4வது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 144 ரன்கள் சேர்த்து அசத்தியது. ஹெத்மயர் இந்த சீசன் முழுவதும் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த நிலையில் கடைசி லீக் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

குல்ஹிரித் சிங்
குல்ஹிரித் சிங்

ஹெத்மயர் 75 ரன்னிலும் குல்ஹிரித் சிங் 65 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதன் பின்னர் கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உமேஷ் யாதவ் பவுண்டரிகள் அடிக்க பெங்களுரு அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக சிம்ரோன் ஹெத்மயர் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now