ஐபிஎல் 2019: மேட்ச் 11, SRH vs RCB, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI

VK & Kane
VK & Kane

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் 2019 ஐபிஎல் தொடரின் 11 போட்டி ராஜீவ்காந்தி மைதானத்தில் மார்ச் 31 அன்று நடைபெற உள்ளது. இந்த சீசனில் இரு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை கூட ருசிக்காத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தனது வெற்றி கணக்கை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த நேருக்கு நேர்: இதுவரை 12 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ள போட்டியில் பெங்களூரு அணி 7 முறை வெற்றி பெற்றுள்ளது.

ராஜீவ்காந்தி மைதானத்தில் நேற்று நேர்: இந்த மைதானத்தில் 6 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் 1 போட்டியில் மட்டுமே பெங்களூரு வெற்றி பெற்றுள்ளது.

கள ரிப்போர்ட்: இந்த ஆடுகளம் தட்டையான மற்றும் சற்று கடினமாக நிலப்பரப்பு கொண்டு காணப்படுவதால் பேட்டிங் செய்ய சரியான ஆடுகளமாகும். கடந்த ஐபிஎல் போட்டியில் இந்த மைதானத்தில் பேட்டிங் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

Sun Risers Hyderabad
Sun Risers Hyderabad

ஹைதராபாத் அணி 2019 ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவியது. பின்னர் 2வது போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹைதராபாத் அணி இந்த களத்தில் விளையாடிய கடைசி 5 போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. எனவே இதே உத்வேகத்துடன் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், விஜய் சங்கர்

ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் சிறப்பான தொடக்கத்தை அளிக்கின்றனர். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் மற்றொரு 100 ரன்கள் பார்ட்னர் ஷிப் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டேவிட் வார்னர் முதல் போட்டியில் 85 ரன்களையும், இரண்டாவது போட்டியில் 69 ரன்களையும் விளாசியது குறிப்பிடத்தக்கது. எனவே பெங்களூரு அணியுடனான போட்டியிலும் டேவிட் வார்னர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என பார்க்கப்படுகிறது.

விஜய் சங்கர் கடந்த ஐபிஎல் போட்டியில் 15 பந்துகளில் 35 ரன்களை விளாசினர். ஹைதராபாத் அணிக்காக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் விஜய் சங்கர். அணியின் கேப்டன் கானே வில்லியம்சன் கடந்த போட்டியில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து திர்ப்பாதியிடம் கேட்ச் ஆனார். 2018 ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசிய இவர் இவ்வருட ஐபிஎல் தொடரிலும் பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாகும்.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், ரஷீத் கான்

ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் ரஷித் கான் 4 ஓவர்களை வீசி 24 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதே சிறப்பான பந்துவீச்சை பெங்களூரு அணிக்கு எதிராகவும் வெளிபடுத்துவார்.

புவனேஸ்வர் குமார் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களை வீசி 55 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே பெங்களூரு அணியுடனான போட்டியில் புவனேஸ்வர் குமார் மற்றும் சித்தார்த் கவுல் தாங்கள் இழந்த ஆட்டத்திறனை மீண்டும் வெளிக்கொண்டு வருவார்கள்

உத்தேச XI: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), கானே வில்லியம்சன் (கேப்டன்), விஜய் சங்கர், யுஸப் பதான், ஷபாஜ் நதீம், மனிஷ் பாண்டே, புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், ரஷீத் கான், சந்தீப் சர்மா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Royal challengers Bangalore
Royal challengers Bangalore

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் தோற்ற பெங்களூரு அணி ஹைதராபாத் அணியுடனான போட்டியில் வெற்றி பெற்று தனது வெற்றி கணக்கை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்

நட்சத்திர வீரர்கள்: விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், பார்தீவ் படேல்

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 32 பந்துகளில் 46 ரன்களையும், ஏபி டிவில்லியர்ஸ் 41 பந்துகளில் 70 ரன்களையும் விளாசினர். இந்த ஆட்டத்தை ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் பெங்களூரு அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

இவர்களுடன் பார்திவ் படேல் அதிவேக 31 ரன்களை விளாசினர். எனவே இதே தொடக்கத்தை ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் வெளிபடுத்துவார்கள்.

பௌலிங்

நட்சத்திர வீரர்கள்: உமேஷ் யாதவ், யுஜ்வேந்திர சகால், முகமது சிராஜ்

பௌலிங்கில் பெங்களூரு அணி சற்று வலிமையான அணியாக உள்ளது. உமேஷ் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் 4 ஓவர்களை வீசி 26 ரன்களை பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹைதராபாத் அணிக்கு எதிராக சிறந்த பந்துவீச்சாளராக செயல்படுவார். யுஜ்வேந்திர சகால் மும்பை அணியின் தூண்களான டிகாக், சூர்ய குமார் யாதவ், யுவராஜ் சிங், பொல்லார்ட் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர்களுடன் முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

உத்தேச XI: விராட் கோலி (கேப்டன்), பார்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), ஏபி டிவில்லியர்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், காலின் டி கிரான்ட் ஹோம், மொய்ன் அலி, சிவம் தூபே, நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ், யுஜ்வேந்திர சகால், முகமது சிராஜ்.

Quick Links