"ஹிட்மேன்" என்ற தனது புனைப்பெயர்  பற்றி பேசியுள்ள ரோகித் சர்மா

Rohit Sharma reveals the origin of his nickname 'Hitman'
Rohit Sharma reveals the origin of his nickname 'Hitman'

நடந்தது என்ன?

"ஹிட்மேன்" என்ற புனைபெயர் தனக்கு எவ்வாறு வந்தது என்பதைப் பற்றி தெரிவித்துள்ளார் ரோகித் சர்மா. இந்த புனைப்பெயரை சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக தொலைக்காட்சி தயாரிப்பு உறுப்பினர் குழுவினரால் கூறப்பட்டு வந்ததாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு தெரியுமா...

ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க ஆரம்பித்ததிலிருந்து தனது இயல்பான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். வலது கை பேட்ஸ்மேனான இவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்ஸர்களாக விளாசும் திறமை உடையவராக திகழ்கிறார். ரோகித் சர்மாவின் மிகப்பெரிய ஹிட்டிங் ஷாட்களால் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் மற்றும் ரசிகர்களாளும் "ஹிட்மேன்" என்ற புனைபெயருடன் அழைக்கப்பட்டார்.

கடந்த காலங்களில் இவரது புனைப்பெயர் "மேகிமேன்", அவர் அக்காலங்களில் பெரும்பாலும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நிலைத்து நின்று விளையாடததே இப்பெயருக்கான காரணமாகும்.

கதைக்கரு

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். அணி நிர்வாகத்தினால் சிறிய நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ரோகித் சர்மா பங்கேற்று, சமூக வலைத்தளங்களில் அதிகம் கேட்கப்பட்டுள்ள சில கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அதன்படி ஒருவர் ரோகித் சர்மாவின் புனைப்பெயருக்கு பின்னால உள்ள காரணம் என்ன? என்று யாரும் எதிர்பாராத வகையில் கேட்டிருந்தார். வலது கை பேட்ஸ்மேன் ரோகித் சர்மா இந்தக் கேள்வியை ஏற்கனவே எதிர்பாரத்திருந்தது போல் உடனே இந்த கேள்விக்கான விடையை கூற ஆரம்பித்தார்.

இந்த புனைப்பெயர் தன்னை பிகவும் பிரதிபலிப்பதாக உள்ளதாகவும், தனக்காகவே உருவாக்கப்பட்டதாகவும் உள்ளதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் அவருடைய ஆங்கில வார்த்தையில் அவரது பெயரின் கடைசி மூன்று எழுத்து "ஹிட்" மற்றும் மேன் ஆகும். மேலும் இந்த விவாதத்தில் ரோகித் சர்மா 'பிடி' என்பவரை பற்றியும் கூற ஆரம்பித்தார். 'பிடி' என்பவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகத்தில் பணிபுரிபவர் ஆவார்.

2013 அன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரோகித் சர்மா தனது முதல் இரட்டை சதம் விளாசிய போது "ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் 'ஹிட்மேன்'"என்று உறுப்பினர் குழுவினரால் அழைக்கப்பட்டார்.

ரோகித் சர்மா மேலும் கூறியதாவது, ஹிட்மேன் என்ற புனைபெயரை 'பிடி' என்பவர் தனக்கு அழித்தார். நாளடைவில் கிரிக்கெட் விமர்சகர்களால் பரப்பப்பட்டு ரசிகர்கள் அனைவருக்கும் பரவி தற்போது உலகம் முழுவதும் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த கானொளியில் ரோகித் சர்மா தன்னை பற்றி சில விவரங்களை தெரிவித்திருந்தார். தனக்கு பிடித்த கால்பந்து வீரர் ஜீனேடின் ஜீன்டன் மற்றும் பிடித்தமான உணவு, சாதரண காலங்களில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவு மற்றும் வெளி பயணங்களின் போது சைனீஸ் உணவு.

அடுத்தது என்ன?

ரோகித் சர்மா தற்போது 2019 உலகக் கோப்பை தொடருக்காக தனது சக இந்திய வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இங்கிலாந்தில் ரோகித் சர்மா சில பெரிய சதங்களை விளாசுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் உலகக் கோப்பையை இந்தியாவின் வசம் கொண்டு வர தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

Quick Links

App download animated image Get the free App now