கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் வீரர்களுக்கிடையே கருத்து மோதல் வருவது இயல்பே. ஆனால் அது ஒரே அணியில் இருக்கும் வீரர்களுக்கிடையே வரும் பட்சத்தால் அந்த இழப்பானது அந்த அணியையே பாதிக்கும். இந்திய அணியை பொறுத்தவரையில் இதுவரை பல வீரர்கள் இப்படி இந்திய அணிக்குள்ளேயே மோதிக்கொண்ட சம்பவங்கள் பலமுறை அரங்கேறியுள்ளன. அந்தவகையில் தற்போது இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா இருவருக்குமிடையே யார் கேப்டன் பதவி வகிப்பது என்பதில் மோதல் ஏற்பட்டு வருவதாக சமீபத்தில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை நிரூபிக்கும் விதமாக பல சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அதனை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
இந்திய அணிக்கு தோணி கேப்டனாக இருந்தவரை அணியில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. அவர் பதவி விலகி பின் விராட் கேப்டன் பதவிக்கு வந்து சில காலங்களுக்கு கேப்டன் பற்றி எந்த விமர்சனங்களும் வரவில்லை. 2017 சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரை இழந்தது அவரின் கேப்டன் பதவியை பெருமளவில் பாதித்தது. இருந்தாலும் அதன் பின் நடைபெற்ற தொடர்களில் இவர் நன்றாக செயல்பட்டதால் அந்த பிரச்னை பெரிதாகவில்லை. இந்திய அணி நிர்வாகமும் சில தொடர்களில் விராட் கோலிக்கு ஓய்வளித்து அவருக்கு பதிலாக ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமித்தது. ரோஹித் தான் கேப்டனாக செயல்பட்ட அனைத்து தொடர்களையும் வென்று அசத்தினார். 2018 நிதாஸ் ட்ரோபி மற்றும் கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை ஆகிய தொடர்களில் இந்தியாவின் கேப்டனாக இருந்த ரோஹித் அணியை திறமையாக வழிநடத்தி இந்திய அணிக்கு கோப்பைகளை வென்று தந்தார்.
அதைவிட ஐபிஎல் தொடரில் ஒரு கேப்டனாக விராட் கோலி அணியை சரியாக வழிநடத்தாதது , அதேசமயம் ரோஹித் சர்மா தனது திறமையான கேப்டனிஷியால் மூன்றுமுறை கோப்பைகளை வென்றது ஆகியவை இந்திய அணியில் விராட் கோலிக்கு பதிலாக ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கருத்துக்களை ரசிகர்கள் சார்பில் பலமுறை முன்வைக்கப்பட்டது.
அந்தவகையில் தற்போது நடைபெற்று முடிந்த உலககோப்பை தொடரில் இவர்கள் இருவருக்கும் இடையே இந்த மோதல் பெரிதானதாக பல தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இதனை விராட் கோலி மறுத்து வந்தார். தனக்கு ரோஹித்க்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என தெரிவித்தார். அந்த உலகக்கோப்பை தொடர் நிறவைடைந்ததன் பின்னர் கேப்டன் பதவிலிருந்தது லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் ரோஹித் சர்மா செயல்படுவார் அதன் அறிவிப்பினை இந்திய அணி நிர்வாகம் அறிவிக்கும் எனவும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் விராட் கோலியே இதன் பின்னர் நடைபெறவிருக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் கேப்டனாக செயல்படுவார் என தேர்வுக்குழு தெரிவித்தது. இதுமட்டுமல்லாமல் விராட் கோலியிடம் ரோஹித் ஷர்மாவுக்கும் தனக்கும் இடையே இருக்கும் மோதலை பெற்றி செய்தியாளர்கள் கேட்டபோது அதற்க்கு பதிலளித்த விராட் தனக்கும் ரோஹித்க்கும் இடையே எந்த மோதலும் இல்லை. அப்படி எதாவது இருந்தால் எனது முகத்தின் மூலமே நீங்கள் கண்டறியலாம் என சாமத்தியமாக பதிலளித்தார்.
சரி இவர்களுக்கிடையே எந்த மோதலும் இல்லை என நாம் நினைக்கும் போதுதான் மீண்டும் துவங்கியது சர்ச்சை. இந்த முறை ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா ஷர்மாவை பின்தொடர்ந்ததை திடீரென நிறுத்தினார். இது ரசிகர்கள் மத்தியில் இவர்களில் கருத்து வேறுபாடை உறுதி செய்தது.
இதுமட்டுமட்டுமல்லாமல் தற்போது இதனை விராட் கோலியும் உறுதி செய்யும் விதமாக தனது டுவிட்டேர் பக்கத்தில் இந்திய அணி வீரர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை. அதே போல வெளியான மற்றொரு புகைப்படத்தில் ரோஹித் சர்மா மற்ற வீரர்களுடன் இருக்கும் புகைப்படமும் வெளியானது. இதன் மூலம் இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பது உறுதியாகிவிட்டது என பலர் கருதுகின்றனர்.
இந்நிலையில் விரைவில் இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வருவதே இந்திய அணிக்கு நல்லது.