கடைசி ஓவரில் தோனியை கோவபடுத்திய நடுவர்கள் சென்னை அணி திரில் வெற்றி

Pravin
தோனி
தோனி

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 25 வது லீக் போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த சீசனில் எற்கனவே இந்த இரு அணிகளும் சென்னையில் விளையாடிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் ராஜஸ்தான் அணி விளையாடிய நிலையில் டாஸில் வெற்றி பெற்று சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர் மற்றும் கேப்டன் ரஹானே இருவரும் களம் இறங்கினர்.

ஜடேஜா
ஜடேஜா

தொடர்ந்து கடந்த சில போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்திய கேப்டன் ரஹானே இந்த போட்டியிலும் 14 ரன்னில் தீபக் சஹார் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 6 ரன்னில் சான்ட்னர் பந்தில் அவுட் ஆகினார். அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் மோசமான ஷாட் அடித்து தாக்கூர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ஸ்டிவ் ஸ்மித் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் அடுத்தடுத்து ரவிந்திர ஜடேஜாவின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினர். இந்த இரண்டு விக்கெட்கள் மூலம் ஐபிஎல் தொடர்களில் 100 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். அடுத்து களம் இறங்கிய இளம் வீரர் ரியாண் பாராக் 16 ரன்னில் தாக்கூர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த ஆர்ச்சர் அதிரடி காட்ட நிலைத்து விளையாடிய ஸ்டோக்ஸ் 28 ரன்னில் தீபக் சஹார் பந்தில் அவுட் ஆகினார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்களை எடுத்தது.

அதன் பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டுப் ப்ளாஸிஸ் இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். வாட்சன் குல்கர்னி பந்தில் டக்அவுட் ஆக அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 4 ரன்னில் ரன்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் பாப் டுப் ப்ளாஸிஸ் 7 ரன்னில் நடையை கட்ட சென்னை அணி 15-3 என்ற நிலைக்கு சென்றது. அடுத்து களம் இறங்கிய கேதர் ஜாதவ் 1 ரன்னில் ஆர்ச்சர் ஓவரில் ஸ்டோக்ஸிடம் சிறப்பான கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார்.

தோனி
தோனி

அடுத்து ஜோடி சேர்ந்த ராய்டு மற்றும் கேப்டன் மகேந்திர சிங் தோனி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இருவரும் ஆட்டத்தின் போக்கினை சென்னை அணியின் பக்கம் திருப்பினர். நிலைத்து விளையாடிய ராய்டு 57 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து சென்னை அணி 1 ஓவர்களுக்கு 18 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஜடேஜா மற்றும் சான்ட்னர்
ஜடேஜா மற்றும் சான்ட்னர்

ஜடேஜா முதல் பந்தில் தரையில் படுத்து சிறப்பான சிக்ஸர் அடிக்க இரண்டாவது பந்தை ஸ்டோகஸ் நோ-பால் ஆக வீசினார். அதை அடுத்து கடைசி ஓவரில் 3 வது பந்தில் தோனி அவுட் ஆக ஆட்டத்தின் போக்கு மாறியது. இதை அடுத்து கடைசி பந்தில் சான்ட்னர் சிக்ஸர் அடித்து திரில் வெற்றி பெற்றது சென்னை அணி. இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தோனி தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now