பட்லரின் அதிரடியில் ராஜஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

Pravin
ஜாஸ் பட்லர்
ஜாஸ் பட்லர்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டி ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் விளையாடிய மூன்று லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்த புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளது. இந்த போட்டியில் எந்த அணி தங்களின் முதல் வெற்றியை அடையும் என்பதில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர்கள் பார்திவ் படேல் மற்றும் வீராட் கோலி இருவரும் களம் இறங்கினர். தொடங்கத்திலிருந்து அதிரடியாக விளையாடினார் பார்திவ் படேல். வீராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை கொடுக்க தவறினார். 23 ரன்னில் வீராட் கோலி ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவுட் ஆகினார். அதேபோல் அடுத்து களம் இறங்கிய டி வில்லியர்ஸ் 13 ரன்னில் ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஹெட்மயர் 1 ரன்னில் அதே ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவுட் ஆகினார்.

ஸ்ரேயஸ் கோபால்
ஸ்ரேயஸ் கோபால்

தொடர்ந்து விக்கெட்களை பெங்களுரு அணி இழந்து வந்த நிலையில் அடுத்து வந்த ஸ்டோனிஸ் நிலைத்து விளையாடினார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய பார்திவ் படேல் 67 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய ஸ்டோனிஸ் 31 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த மோயின் அலி 18 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் பெங்களுரு அணி 158-4 ரன்களை எடுத்தது.

பட்லர்
பட்லர்

அதன் பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல் அணியில் தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர் மற்றும் அஜிங்கா ரஹானே இருவரும் களம் இறங்கினர். இந்த ஜோடி தொடக்கத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. முதல் ஆறு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்களை எடுத்தனர். ரஹானே 22 ரன்னில் சாஹால் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களம் இறங்கிய ஸ்டிவ் ஸ்மித் நிலைத்து நின்று விளையாடினார். அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய ஜாஸ் பட்லர் அரைசதம் வீளாசினார். அதன் பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் 59 ரன்னில் சாஹால் பந்தில் அவுட் ஆகினார்.

ஸ்டிவ் ஸ்மித்
ஸ்டிவ் ஸ்மித்

அடுத்து களம் இறங்கிய ராகுல் திரிபாதி நிலைத்து விளையாடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஸ்டிவ் ஸ்மித் 38 ரன்னில் சிராஜ் பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய ராகுல் திரிபாதி கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து 34 ரன்னில் ராஜஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார். ராஜஸ்தான் ராயல் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றி மூலம் இந்த ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பெற்றது ராஜஸ்தான் அணி. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஷ்ரேயஸ் கோபால் தேர்வு செய்யப்பட்டார்.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now