ஐபிஎல் 2019: ஆண்ட்ரே ரஸ்ஸல் – கொல்கத்தா அணியின் புயல்

ஆண்ட்ரே ரஸல்
ஆண்ட்ரே ரஸல்

2019-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஆட்டமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி ஒரு சிறப்பு வாய்ந்த ஆட்டமாக மாறி வருகிறது. அதிரடி பேட்டிங், மிரட்டும் பவுலிங், கலக்கும் பீல்டிங் என எல்லா வகையிலும் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் அனைத்து சீசன்களிலும் இந்திய வீரர்கள் மட்டுமல்ல, பல வெளிநாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல், பல புதுமுக வீரர்களும் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் இரண்டு வாரம் முடிந்து மூன்றாவது வாரத்தில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து கொண்டே வருகிறது. இருப்பினும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸலின் "வெறித்தனமான" பேட்டிங் நம்பமுடியாத வகையில் வியப்புக்குரியது.

ரஸ்ஸல் பேட்டிங்கில் கொல்கத்தா அணிக்கு மிகவும் சக்திவாய்ந்த வீரராக இருந்து வருகிறார். பல ஆண்டுகளாக அதிரடியாக விளையாடிய நிலையிலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எல்லா பந்துகளையும் அடித்து நொறுக்குகிறார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பொதுவாக அதிரடியாக விளையாடும் தன்மை கொண்டவர்கள்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறந்த ஃபார்மில் உள்ள ரஸ்ஸல்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறந்த ஃபார்மில் உள்ள ரஸ்ஸல்.

முதல் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்ட ஹைதராபாத் அணிக்கு எதிராக 19 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 49* ரன்கள். இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 17 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உட்பட 48 ரன்கள். டெல்லி அணியுடன் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 62 ரன்கள். பெங்களூர் அணியுடன் 13 பந்துகளில் 1 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 48 ரன்கள். ஒவ்வொரு போட்டியிலும் சிக்ஸர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது.

இந்த ஆண்டு இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் மூன்று ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். கொல்கத்தா அணி விளையாடிய முதல் நான்கு போட்டிகளில் மூன்று போட்டியில் ரஸ்ஸல் மூலமே அணி வெற்றி பெற்றது.

முதல் நான்கு போட்டிகளில் ரஸ்ஸலின் ஸ்ட்ரைக் ரேட் 257, 282, 221 மற்றும் 369 என இருந்தது. சென்னை அணியோடு தவிர்த்து மற்ற் போட்டிகளில் இவர் 30 பந்துகளுக்கு மேல் சந்திக்கவில்லை. ரஸ்ஸலின் இரக்கமற்ற இந்த ஆட்டம் உண்மையிலேயே நம்பமுடியாத அளவில் உள்ளது. மற்றொரு கிரகத்தில் இருந்து வந்துள்ளார் என்றும் என்னும் அளவிற்கு மிரட்டும் வகையில் விளையாடி வருகிறார்.

முதல் வெற்றியை பெற்றுவிட்டோம் என்று எண்ணிய பெங்களூர் அணி வீரர்களுக்கு கடைசி இரண்டு ஓவரில் அதிர்ச்சி தந்தார் ரஸ்ஸல். 205 என்ற பெரும் இலக்கை வைத்தது பெங்களூர் அணி. கடைசி மூன்று ஓவரில் 50+ ரன்கள் எடுக்க வேண்டிய கடின இலக்கை சுலபமாக அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார் ரஸ்ஸல்.

முதல் 4 போட்டிகளில் 207 ரன்கள் குவித்துள்ளார். வியக்கத்தக்க வகையில் 268 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறார்.

ரஸ்ஸலின் இந்த ஃபார்ம் உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். இந்த ஐபிஎல் தொடர் வெஸ்ட் இண்டிஸ் வீரர்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

எழுத்து- நிரஞ்சன் தியோடர்

மொழிபெயர்ப்பு- சுதாகரன் ஈஸ்வரன்

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now