முந்தைய பாகத்தில் ஹார்திக் பாண்டியாவின் முக்கிய ஆட்டங்களை பார்த்தோம்(முதல் பாகத்தை படிக்க இங்கே கிளிக்). இந்த பாகத்தில் அவர் கபில்தேவ் ஆவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயலாம்.
பௌலிங் மற்றும் பேட்டிங் ஒப்பீடு:
ஹார்திக் பாண்டியா:
1) ஹார்திக் பாண்டியா இதுவரை மொத்தம் 11 டெஸ்ட் போட்டிகளிலும், 42 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
2) டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 532 ரன்களையும் ஒரு நாள் போட்டிகளில் 670 ரன்களையும் அடித்துள்ளார்.
3) டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதமும் நான்கு அரைசதங்களும் அடங்கும்.
4) டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 108 ரன்களையும்,ஒரு நாள் போட்டியில் 83 ரன்களையும் எடுத்துள்ளார்.
5) டெஸ்ட் போட்டிகளின் சராசரி 31.29 ,ஒரு நாள் போட்டிகளில் சராசரி 29.13
6) டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 17 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.ஒரு நாள் போட்டிகளில் 40 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
கபில்தேவ்:
1) கபில்தேவ் இதுவரை மொத்தம் 131 டெஸ்ட் போட்டிகளிலும், 225 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
2) டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 5248 ரன்களையும் ஒரு நாள் போட்டிகளில் 3783 ரன்களையும் அடித்துள்ளார்.
3) டெஸ்ட் போட்டிகளில் 8 சதங்களும் 27 அரைசதங்களும் அடங்கும்.
4) டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 163 ரன்களையும்,ஒரு நாள் போட்டியில் 175 ரன்களையும் எடுத்துள்ளார்.
5) டெஸ்ட் போட்டிகளின் சராசரி 31.05 ,ஒரு நாள் போட்டிகளில் சராசரி 23.79.
6) டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 227 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 221 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
மேற்கூறிய புள்ளிவிவரத்தை படி பார்க்கையில் இவருடைய சராசரி, அணிக்கான பங்களிப்பு இரண்டுமே ஒன்று போல தோன்றினாலும் ஹார்திக் பாண்டியா தான் அடுத்த கபில்தேவ் என்பது சாத்தியமற்றது. ஏனெனில் இந்தியா அணிக்கான கபில்தேவ் அவர்களின் பங்கு அளப்பரியது. மேலும் இந்தியா அணி தடுமாறும் வேளையில் தனது அசாதாரண பேட்டிங் மற்றும் பந்துவீச்சினால் இந்தியா அணிக்கு பல்வேறு வெற்றிகளை ஒரு திறமைவாய்ந்த கேப்டனாகவும் சக வீரராகவும் பெற்றுத்தந்துள்ளார்..
அதே நேரத்தில் ஹார்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டங்களில் பெரும்பாலானவை அணி தோல்வியுறும் தருவாயிலும் அல்லது பயனற்ற வகையிலுமே முடிந்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.
குறிப்பிட்டு கூறவேண்டுமானால் ஹார்திக் பாண்டியா அணி தோல்வியுறும் சமயத்தில் பேட்டிங்கில் காட்டு முனைப்பை தொடக்கத்தில் இருந்து காட்டியிருந்தால் அந்த தோல்வியை தவிர்த்திருக்கலாம் அல்லவா... அதை தான் தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவது கபில்தேவ் செய்தார். குறிப்பாக 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமானவரே அவர்தான்.
மேலும் சமகாலத்தில் விளையாடும் இரண்டு வீரர்களை ஒப்பிட்டு கூறுவதில் தவறில்லை. ஆனால் இரு வேறு காலகட்டங்களில் விளையாடிய வீரர்களை ஒப்பிட்டு கூறுவது பொருத்தமாகாது. ஏனெனில் அவர்கள் விளையாடிய சூழல், ஆடுகளத்தில் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
உண்மையில் ஹார்திக் பாண்டியா, கபில்தேவ் அவர்களுக்கு பிறகு ஒரு அருமையான ஆல்ரவுண்டர் என்பதே பொருந்துமே தவிர அவர்தான் அடுத்த கபில்தேவ் என்பது சாத்தியமற்றது.
மேலும் இதுபோன்ற பல சுவாரசியமான கட்டுரைகளுக்கு எங்களை பின்தொடர்க...