இன்றைய போட்டியில் கலக்குவாரா ரஷித் கான்

ரஷித் கான்
ரஷித் கான்

இந்த வருட ஐபிஎல் போட்டிகள் ஆப்கானிஸ்தானின் ரஷித் கானுக்கு சுமாரான தொடராகவே அமைந்துள்ளது. கடந்த வருடம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஸ்டார் பந்து வீச்சாளர் இந்த தொடர் முழுவதும் சுமாராகவே பந்து வீசியுள்ளார். கடந்த வருடம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிக விக்கெட் விழ்த்தியவர்களில் 21 விக்கெட் விழ்த்தி முதலிடத்தில் இருந்தார்.

ஒன் மேன் ஆர்மி ரஷித்

கடந்த வருடம் ரஷித் கான் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிராக தனது நான்கு ஓவர்களில் 55 ரன்கள் விட்டுக் கொடுத்தார், மற்றும் அடுத்த ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது பந்துவீச்சில் 49 ரன்கள் எதிரணிக்கு கொடுத்தார். எனவே நாம் அனைவரும் அவரது பந்து வீச்சு முறை எதிர் அணிகளுக்கு பழக்கமாகிவிட்டது என நினைத்தோம்.

இந்நிலையில் குவாலிபையர் ஒன்றில் தோல்வியடைந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக இரண்டாவது குவாலிபையரில் ஒரு முழுமையான ஆட்டத்திறனை (பிளாக்பஸ்டர் பேர்பார்மன்ஸ்) வெளிப்படுத்தினார். அவர் பேட்டிங்கில் 10 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார், பந்து வீச்சை பொருத்தவரை 19 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார், அது மட்டுமில்லாமல் நிதிஸ் ராணாவை ரன் அவுட் செய்தார். இதனால் சன்ரைசர்ஸ் இறுதிப் போட்டியில் தகுதி பெற்றது.

புதன்கிழமை (இன்று) சன் ரைஸர்ஸ் எலிமினேட்டரில் டெல்லி அணியை எதிர் கொள்கிறது. மீண்டும் ஒருமுறை, ரஷித் கானிடமிருந்து ஒரு முழுமையான ஆட்டத்தை ரசிகர்கள் எதிர் பார்க்கின்றனர். இதுவரை ரஷித் 14 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளர், சராசரியாக ஆவரேஜ் 24 ஆக உள்ளது. அவர் கடைசி ஆட்டத்தில் 44 ரன்களை விட்டு கொடுத்த போதிலும் எகனாமி 6.56 ஆக உள்ளது.

சன்ரைஸர்ஸ் அணியின் வலுவான பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக எதிரணிகள் ஒரு திட்டத்தை இந்த வருடம் கையாண்டனர். இந்த ஆண்டு சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோரை டார்கெட் செய்து எதிரணி பேட்ஸ்மேன்கள் பதம் பார்த்தனர். கடந்த ஆண்டு ரஷித்க்கு பக்க பலமாக இருந்தவர்கள் இந்த ஆண்டு அணியில் இடம் பெறவே தடுமாறுகின்றனர்.

சாதிப்பார்களா சன் ரைஸர்ஸ்

புவனேஷ்வர் குமாருக்கும் சுமாரன ஐபிஎல் தொடராக தான் இந்த தொடர் அமைந்தது, ஆனால், கலீல் அஹ்மத் ஆறு போட்டிகளுக்குப் பின் அணியில் இடம் பிடித்து எட்டு போட்டிகளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி சன் ரைஸர்ஸ் அணியின் அதிக விக்கெட் எடுத்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவ்விருவருடன் ரஷித் கானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் டெல்லி அணி வெற்றி பெறுவது கடினமே. 14 ஆட்டங்களில் 12 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் க்கு முன்னேறிய சன் ரைஸர்ஸ் அணி வெற்றி பெறுமா என பொருத்திருந்து பார்ப்போம். சன் ரைஸர்ஸ் அணிக்கு விசாக பட்டிணம் மைதானமும் சொந்த மைதானம் போன்றதே ரசிகர்களின் ஆதரவும் அதிகமாக இருக்கும், எனவே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

Quick Links

App download animated image Get the free App now