கூல் ரபாடாவால் டெல்லி அணிக்கு ஏறுமுகம்

ககிஸோ ரபாடா
ககிஸோ ரபாடா

கடந்த பல வருடங்களாக தோல்வி முகத்தில் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வெற்றி பாதைக்கு திருப்பியவர் ரபாடா. ரபாடாவின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக திகழ்வது கடினமான நேரத்தில் அவரின் துல்லியமான யார்க்கர்கள் மற்றும் பவுண்சர்கள்.

தென் ஆப்ரிக்க சூப்பர் ஸ்டார் ககிஸோ ரபாடாவுக்கு இந்த ஐபிஎல் தொடர் சிறப்பானதாகவும் தனது முழு திறமையை நிரூபிக்கும் களமாகவும் அமைந்துள்ளது. ஹை பிரஷர் தருணங்களை கையாளக்கூடிய திறமையும், எதிரணி வீரர்களை திணறடிக்கும் வேகமும் இவரின் சிறப்பு.

ரபாடா தான் இந்த ஐபிஎல் 2019 ஆம் ஆண்டின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர். பங்கேற்ற 10 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரியாக 1.5 ஒவருக்கு ஒரு முறை ஒரு விக்கெட் எடுத்துள்ளார். இந்தத் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், தென்ஆப்பிரிக்காவின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவை கடினமான நேரத்தில் தனது துருப்புச் சீட்டாக பயன்படுத்தி உள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் 23 வயதான ககிஸோ ரபாடா டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஐசிசி தரவரிசை பட்டியலில் டாப் 10 இடங்களில் உள்ளார். ஆனால் டி20 தர வரிசையில் அவரின் சிறந்த இடமாக 18 ஆக தான் உள்ளது. தொழில்முறை போட்டியான ஐபிஎல்லில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸை பொருத்தவரை இந்த சீசனில் அவர் ஒரு தூணாக அமைந்துள்ளார். இந்த தொடரில் அவர் இரண்டு முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மற்றும் சூப்பர் ஒவரில் தனது அசாத்திய திறமையின் மூலம் ரசலை யார்க்கர் பந்துகளால் அடிக்க விடாமல் திணறடித்து விட்டார். இதனால் அப்போட்டியில் டெல்லி அணி வென்றது.

ரபாடா
ரபாடா

செய்தியாளர் சந்திப்பில் ரபாடா கூறுகையில்,

நான் வலைப்பயிற்சியில் அதிக ஈடுபாட்டுடன் வெவ்வேறு விதமான பந்துவீச்சு முறைகளை தயார் செய்து கொண்டிருக்கின்றேன். ஐபிஎல் மற்றும் உலக கோப்பைக்காக அதிகமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு ஓய்வில்லாமல் விளையாடுவது ரொம்ப பிடிக்கும். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர்களான ரிக்கி பாண்டிங் மற்றும் சவுரவ் கங்குலியிடம் இருந்து அதிகமாக கிரிக்கெட் விளையாட்டை அறிந்து கொள்வதும் கற்றுக் கொள்வதும் பிடித்திருக்கிறது. அதிகமாக கற்றுக் கொள்வதன் மூலமாக தான் சிறந்த வீரராக முடியும் என நம்புகிறேன். யாருக்கு எந்த பந்தை போட வேண்டும், எந்த கோணங்களில் பந்து வீச வேண்டும் என்பதை பயிற்சி செய்து வருகிறேன்.

ரபாடாவின் வெற்றிக்கு அவரின் அணுகுமுறையே காரணம். தேவைப்படும் சமயங்களில் ரன்களை கட்டுப்படுத்துவதும் விக்கெட்டுகளை விழ்த்தவும் செய்கிறார். டி20 போட்டிகளில் தனது முக்கியத்துவத்தை நிரூபித்துள்ளார்.

இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் தனது யார்க்கர்கள் மூலம் எதிரணி வீரர்களை திணறடித்தார். அதிலும் குறிப்பாக அதிரடி ஆட்டக்காரர் ரசலால் பந்துகளை தொட கூட முடியவில்லை.

தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பை அணியில் ககிஸோ ரபாடா இடம்பெற்றிருப்பதால் அவர் விரைவில் தென்ஆபிரிக்கா செல்லவுள்ளார். இவரின் இடத்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் நிரப்புவது சற்றே கடினம் தான்.

Quick Links

Edited by Fambeat Tamil