பந்துவீச்சாளர்களை மாற்றினால் மட்டுமே ஹைதராபாத் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இயலும்

Sun Risers Hyderabad
Sun Risers Hyderabad

2019 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் பிளே ஆஃப் சுற்றுக்காக காத்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் கிட்டத்தட்ட தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் உள்ளனர். 4வது இடத்திற்கு 3 அணிகள் தற்போது போட்டி போட்டுக்கொண்டு உள்ளனர்.

10 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 புள்ளிகளுடன் தற்போது புள்ளி அட்டவனையில் 4வது இடத்தில் உள்ளது. கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் 10 போட்டிகளில் பங்கேற்று 5ல் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இருப்பினும் நெட் ரன் ரேட் ஹைதராபாத் அணிக்கு அருமையாக உள்ளதால் அந்த அணி 4வது இடத்தில் உள்ளது.

மும்பை, பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர் தோல்விகளுக்கு பிறகு சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான இரு போட்டிகளிலும் இரண்டு தொடர் வெற்றிகளை குவித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத். சமீபத்தில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ஹைதராபாத். இது அந்த அணிக்கு கடும் நெருக்கடியை அளித்துள்ளது.

சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவ் உலகக் கோப்பைக்கு பயிற்சி எடுப்பதற்காக இங்கிலாந்து சென்று விட்டார். இது அந்த அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு ஆகும்.

ஹைதராபாத் அணி சந்தீப் சர்மா-விற்கு பதிலாக பாசில் தம்பியை இனிவரும் போட்டிகளில் பயன்படுத்த வேண்டும். கடைசி 4 போட்டிகளில் சந்தீப் சர்மா-வின் பந்துவீச்சு: 3.5-0-54-1(சென்னை அணிக்கு எதிராக), 4-0-37-1(கொல்கத்தா அணிக்கு எதிராக), 4-0-33-0(சென்னை அணிக்கு எதிரான குறைவான இலக்கு), 4-0-30-0(டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக). இதனை பார்க்கும் போது சந்தீப் சர்மா தனது சிறப்பான பௌலிங் திறனை சரியாக பயன்படுத்தவில்லை என தெரிகிறது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 4 லீக் போட்டிகளே மீதம் உள்ளன. இந்த போட்டிகளில் ஆட்டத்திறன் இல்லாமல் இருக்கும் பந்துவீச்சாளர்களை ஆடும் XI-ல் ஹைதராபாத் எடுத்து சென்றால் கண்டிப்பாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு பறிபோக வாய்ப்புள்ளது. சந்தீப் சர்மாவின் மோசமான பௌலிங் அணியின் வெற்றியை வெகுவாக பாதிக்கிறது.

இளம் கேரள வேகப்பந்து வீச்சாளர் பாசில் தம்பி 2017 ஐபிஎல் தொடரில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி எமர்ஜீங் பிளேயர் என்ற விருதை வாங்கினார். இவர் சில பௌலிங் நுணுக்கங்களை நன்கு அறிந்து விளையாடும் திறமை உடையவர். அத்துடன் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசுவார். விராட் கோலி, கிறிஸ் கெய்ல், எம் எஸ் தோனி, ஹாசிம் அம்லா ஆகிய டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை ஐபிஎல் தொடரில் வீழ்த்தியுள்ளார்.

சந்தீப் சர்மா-விற்கு பதிலாக பாசில் தம்பியை களமிறக்கினால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

உத்தேச XI - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

மார்டின் கப்தில், டேவிட் வார்னர், கானே வில்லியம்சன் (கேப்டன்), விஜய் சங்கர், மனிஷ் பாண்டே, விருத்திமான் சாகா(விக்கெட் கீப்பர்), முகமது நபி, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், பாசில் தம்பி, கலீல் அகமது.

Quick Links

App download animated image Get the free App now