ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் 12வது சீசனில் முதல் கால்பாதி லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த ஐபிஎல் சீசன் 15 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்பொழுது தான் ஐபிஎல் போட்டிகள் சூடுபிடிக்க தொடங்கிவுள்ளது. இதுவரை நடந்துள்ள 15 லீக் போட்டிகளில் 3 வீரர்கள் சதம் வீளாசி உள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில் ஒரு முறை சூப்பர் ஓவர் போட்டி நடைபெற்றுள்ளது. இதுவரை ஒவ்வோரு அணியும் மூன்று மற்றும் நான்கு போட்டிகள் விளையாடி உள்ளனர். இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளை பொருத்து இந்த ஐபிஎல் தொடரில் சிறந்த தொடக்க ஜோடி யார் என்பதை பற்றி இங்கு பார்போம்.
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள லீக் போட்டிகளை வைத்து பார்க்கும் பொழுது ஐத்ராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ இருவரும் 12வது சீசன் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர். இதுவரை ஐத்ராபாத் அணி மூன்று போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் பெங்களுரு அணி எளிதில் வீழ்த்தி ஆபார வெற்றி பெற்றது. இந்த மூன்று போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது ஐத்ராபாத் அணியின் தொடக்க வீரர்கள் தான்.
டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ இருவரும் கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 118 ரன்களை குவித்தது. ஆனால் இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் சிறப்பான ஆட்டத்தால் ஐத்ராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ராஜஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 110 ரன்களை குவித்தது. அதே போல் பெங்களுரு அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய ஐத்ராபாத் அணியின் இந்த தொடக்க ஜோடி 185 ரன்களை குவித்தது இருவரும் சதம் அடித்து அசத்தினர்.
இந்த மூன்று போட்டியிலும் ஐத்ராபாத் அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னரின் பங்களிப்பு குறிப்பிடதக்கது. ஒரு வருட தடை பின்னர் ஐபிஎல் தொடரில் விளையாடும் டேவிட் வார்னர் வந்த முதல் போட்டியிலேயே 85 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார். அதே போல் இரண்டாவது போட்டியில் அதிரடியாக 69 ரன்கள் குவித்தார். பெங்களுரு அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 100 ரன்கள் வீளாசினார். மூன்று போட்டிகளையும் சேர்த்து 254 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
அதே போல் மற்றோரு தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோ இந்த சீசனில் தான் ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனார். தனது முதல் ஐபிஎல் போட்டியில் 39 ரன்கள் அடித்தார். இரண்டாவது போட்டியில் அதிரடியாக 45 ரன்கள் அடித்து அசத்தினார். மூன்றாவது போட்டியில் 114 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை வீளாசினார். இருவரும் நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளிலும் 100+ ரன்கள் பாட்னர்ஷிப் சேர்ந்து அடித்துள்ளனர்.