தோனி இல்லாத சென்னை அணியால் வெற்றி பெற முடியவில்லை 

Pravin
டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் பாதி லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று 33வது லீக் போட்டி ஐத்ராபாத் ராஜிவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் இந்த தொடரில் முதல் முறையாக மோதிகொள்ளும் போட்டி என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்பட்டார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் பாப் டு ப்ளஸிஸ் மற்றும் ஷேன் வாட்சன் இருவரும் களம் இறங்கினர். இருவரும் சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 79 ரன்களை எடுத்தது. ஷேன் வாட்சன் 31 ரன்னில் நதீம் பந்தில் அவுட் ஆக அவரை தொடர்ந்து ப்ளஸிஸ் 45 ரன்னில் விஜய் சங்கர் பந்தில் அவுட் ஆகினார்.

பாப் டுப் ப்ளாஸிஸ்
பாப் டுப் ப்ளாஸிஸ்

இதை அடுத்து வந்த கேப்டன் ரெய்னா 13 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆக பின்னர் அதே ஓவரில் கேதர் ஜாதவும் 1 ரன்னில் அவுட் ஆகினார். புதியதாக சென்னை அணியில் களம் இறங்கிய பில்லீங் டக்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் களம் இறங்கிய ஜடேஜா மற்றும் ராய்டு இருவரும் கடைசி வரை ரன் எடுக்க தடுமாறிய நிலையில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 132-5 ரன்களை எடுத்தது. இந்த போட்டியில் கேப்டன் தோனி விளையாடததால் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியது.

பேர்ஸ்டோ
பேர்ஸ்டோ

இதை அடுத்து விளையாடிய ஐத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் ஜேனி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் இருவரும் களம் இறங்கினர். இருவரும் வழக்கம் போல் முதல் பவர்ப்ளே ஓவர்களுக்குள் 68 ரன்களை குவித்தனர். இருவரும் இந்த தொடரில் ஆறாவது முறையாக முதல் பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இதை தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய டேவிட் வார்னர் 24 பந்தில் அரைசதம் வீளாசி 50 ரன்னில் தீபக் சாஹர் பந்தில் அவுட் ஆகினார்.

இம்ரான் தாஹிர்
இம்ரான் தாஹிர்

இவரை அடுத்து களம் இறங்கிய கேப்டன் கேம் வில்லியம்சன் 3 ரன்னில் இம்ரான் தாஹிர் பந்தில் அவுட் ஆக அடுத்து வந்த விஜய் சங்கர் 7 ரன்னில் அதே இம்ரான் தாஹிர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்தாக நிலைத்து விளையாடிய பேர்ஸ்டோ அரைசதம் வீளாச சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வார்னர் ஆட்ட நாயகன் விருதுதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஐத்ராபாத் அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Quick Links