ஆர்சீபியை காக்கப்போகும் தூதுவனாக மாறுவாரா டேல் ஸ்டைன்

ஸ்டெய்ன்
ஸ்டெய்ன்

"தூதுவன் வருவான் மாரி பெய்யும் அவன் நம்மை தாய் பூமியை நோக்கி அழைத்துச் செல்வான்" இது போன்ற மனநிலையில்தான் இருக்கிறார்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரசிகர்கள். ஆம், அந்த தூதுவன் வேறு யாரும் அல்ல, தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்‌ டேல் ஸ்டைன். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பதைப்போல ஸ்டைனைக் கண்டால் பேட்ஸ்மேன் நடுங்குவானோ இல்லையோ அவன் பின்னால் இருக்கும் அந்த ஸ்டம்புக்கு பயம் வரும். இனிய ஏனெனில் தனது பந்துவீச்சினால் அத்துணை ஸ்டம்புகளை உடைத்தெறிந்திருக்கிறார் டேல் ஸ்டைன்.

அப்பேற்பட்ட திறமையான பந்துவீச்சாளரான டேல் ஸ்டைன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு வரும் போட்டிகளில் ஆட உள்ளார். இவர் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான நாதன் கோல்டெர் நைல்க்கு பதிலாக களமிறங்க இருக்கிறார். யுனைடெட் அரபு அமீரகம் அணிக்கு எதிராக சுற்றுப்பயணம் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் போட்டிகள் முடிந்தவுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆட இருந்தார் நாதன் கோல்டெர் நைல். இதனிடையே அவருக்கு காயம் ஏற்பட்டது, காயம் காரணமாக அவர் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இருந்து விலகவே கவலை தொற்றிக்கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்களுக்கு. ஏற்கனவே மோசமான பந்துவீச்சின் காரணமாக தனது 6 போட்டிகளிலும் படு தோல்வியை சந்தித்துள்ள பெங்களூர் அணி ரசிகர்கள் மேலும் துவண்டு போயினர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நிர்வாகம் செய்தியை வெளியிட்டது. அதாவது 2019ஆம் இந்தியன் பிரீமியர் லீக்கில் இதன் மேல் வரும் போட்டிகளில் நாதன் கோல்டெர் நைலுக்கு பதிலாக டேல் ஸ்டைன் பங்கு பெறுவார் என தெரிவித்துள்ளது. இந்த செய்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ரசிகர்களுக்கு காயத்திற்கு மருந்தாக அமைந்துள்ளது. இதற்கு முன்னே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆடியுள்ள டேல் ஸ்டைன், வரும் போட்டிகளில் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக ஆடுவார். தனது வேகப் பந்து வீச்சினால் துவண்டு போய் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு மீட்பு மருந்து தருவார் என நம்பலாம்.

ஸ்டெய்ன் மற்றும் கோஹ்லி
ஸ்டெய்ன் மற்றும் கோஹ்லி

36 வயதான இந்த வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டைன் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ஐபிஎல் போட்டியை டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக களமிறங்கினார். தனது கடைசி ஐபிஎல் போட்டி 2016 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி உள்ளார். டேல் ஸ்டைன் இதுவரை நடந்த இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் 90 போட்டிகளில் ஆடி 92 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மொத்தம் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பந்துகளை வீசி உள்ளார். இவரது சிறப்பான பந்து வீச்சு எட்டு ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் ஆகும் அதாவது 3/8. ஸ்டைனின் பந்துவீச்சு அதே வேகத்தில் உள்ளதா அவரது பந்து வீச்சு விராட் கோலியின் அத்திரி சிரிப்பை வரவழைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் "தூதுவன் வருவான் மாரி பெய்யும் அவன் நம்மை தஞ்சை நகரை நோக்கி அழைத்துச் செல்வான்"

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now