உலகக்கோப்பை என்பது உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடராகும். இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்களது சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்துவார்கள். கடைகுட்டி அணிகளுக்கு இத்தொடரின் மூலமே உலகின் மிகப்பெரிய அணிகளுக்கு எதிராக போராடும் வாய்ப்புகள் கிடைக்கும்.
கடந்த கால உலகக்கோப்பை தொடர்களில் சர்வதேச தரவரிசையில் இடம்பெறாத மற்றும் அசோசியேஷன் அணிகள் உலகின் வலிமையாக திகழும் அணிகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு தனி பெயரை தன்வசம் வைத்துள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தற்போது ஓடிஐ கிரிக்கெட் தரவரிசையில் முதலாவதாக திகழும் இங்கிலாந்தை வீழ்த்தி தனது ஆட்டத்திறனை வெளிகொணர்ந்துள்ளது. இங்கிலாந்து 2019 உலகக்கோப்பை தொடர் தொடங்கும் முன் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் தன்னால் முடிந்த வரை போராடி இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை அளித்தது. அப்போட்டியில் இந்தியா கடைசி ஓவரில் வென்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பல அதிர்ச்சி தரும் விதத்தில் போட்டி முடிவுகள் வெளிவந்துள்ளன. நாம் இங்கு அவ்வாறு நடந்த 3 போட்டிகளைப் பற்றி காண்போம்.
#3 அயர்லாந்து vs இங்கிலாந்து, 2011
இப்போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 327 ரன்களை குவித்தது. அந்த சமயத்தில் பார்க்கும்போது இங்கிலாந்து வழக்கமாக வென்று விடும் என்பது போல் தான் அனைவரும் நினைத்திருந்தனர். அயர்லாந்தும் இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பின் படியே 111 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அயர்லாந்து மீள முடியாது என அனைவரும் நினைத்திருந்த சமயத்தில், கெவின் ஓ பிரைன் அனைவரையும் சற்று மாற்றி யோசிக்க வைக்கும் வகையில் தனது அதிரடி பயணத்தை தொடங்கினார். ஆல்-ரவுண்டரான இவர் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேக சதத்தை குவித்து அயர்லாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கினார். வலதுகை பேட்ஸ்மேனான இவர் 63 பந்துகளை எதிர்கொண்டு 113 ரன்களை குவித்ததுடன் அலெக்ஸ் குசாக்-வுடன் 162 ரன்களை பார்டனர்ஷீப் செய்து விளையாடினார்.
கெவின் ஓ பிரைன் சதம் விளாசிதற்கு பின் தனது பார்டனர் அலெக்ஸ் குசாக்கை இழந்தார். இருப்பினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அயர்லாந்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் விளையாடிக் கொண்டிருந்தார். இவர் இறுதி வரை நிலைத்து விளையாட தவறிவிட்டாலும் இப்போட்டியில் அயர்லாந்து மீள்வதற்கு தனது சிறந்த ஆட்டத்திறனை அழித்தார். அயர்லாந்து இப்போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கெவின் ஓ பிரைனின் இன்னிங்ஸ் ஒரு பெரும் ஆட்டமாக உலகக்கோப்பையில் பார்க்கப்பட்டது.
#2 வங்கதேசம் vs பாகிஸ்தான், 1999
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிற்கு எதிரான போட்டி டேவிட் மற்றும் கோலியாத் ஆகியோருக்கு எதிரான யுத்தம் போல் அமைந்தது. பாகிஸ்தான் சிறந்த ஆட்டத்திறனுடன் அந்த உலகக்கோப்பை தொடரில் திகழ்ந்தது. வங்கதேசம் தனது முதல் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றது. இந்த அணி 1999 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய முதல் 4 போட்டிகளிலும் 200 ரன்களை கடக்க தவறியது.
இருப்பினும் பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் 200 ரன்களை முதல் முறையாக கடந்தது வங்கதேசம். ஆனால் இது பாகிஸ்தானை பெரிதும் பாதிக்காது என அனைவரும் நினைத்திருந்தனர். 1992 வருட உலகக்கோப்பை சேம்பியனான பாகிஸ்தான் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி 42 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனவே வங்கதேசம் தன் முதல் வெற்றியை உலகக்கோப்பையில் பதிவு செய்யும் நோக்கில் விளையாடிக் கொண்டிருந்தது.
பின்னர் அசார் முகமது மற்றும் வாஸிம் அக்ரமின் சிறப்பான பேட்டிங் பங்களிப்பால் 50 ரன்கள் பார்டனர் ஷீப் செய்யப்பட்டு பாகிஸ்தான் சற்று மீண்டெழுந்தது. ஆனால் வங்கதேசம் தடுமாறமல் மீண்டும் தனது அதிரடி பௌலிங்கை தொடர்ந்தது. பாகிஸ்தானின் தடுமாறிய ரன் ஓட்டம் மற்றும் மோசமான ஷாட் தேர்வு அந்த அணிக்கு சாதகமாக அமையவில்லை. எதிர்பார விதமாக வங்கதேசம் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அந்த தொடரின் மிகப்பெரிய வெற்றியை குவித்தது வங்கதேசம். கலீட் மேக்மூத் 3 விக்கெட்டுகளை இப்போட்டியில் வீழ்த்தினார்.
#1 பாகிஸ்தான் vs அயர்லாந்து, 2007
மார்ச் 17 அயர்லாந்து அணிக்கு மிகச் சிறப்பான நாளாகும். ஏனெனில் அன்று ஸ்டே.பேட்ரிக் என்ற தினம் அந்த நாட்டு மக்கள் கொண்டாடுவார்கள். 2007ம் வருடத்தில் அந்த தினம் மேலும் சிறப்பாக அயர்லாந்திற்கு அமைந்தது. அந்த நாளில் அயர்லாந்து கிரிக்கெட் அணி யார் என்பது உலகிற்கு புரிய வைக்கப்பட்ட நாளாகவும் அமைந்தது.
அயர்லாந்து ஆச்சரியமளிக்கும் விதத்தில் ஜீம்பாப்வேவிற்கு எதிரான தனது முதல் போட்டியில் வெற்றி பெற்று புள்ளிகளை பெற்றது. ஒரு மற்றொரு பெரும் ஆச்சரியத்தை அயர்லாந்து அளிக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அயர்லாந்து சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்தி பாகிஸ்தானின் ஆரம்ப விக்கெட்டுகளை வீழ்த்தியது. பாகிஸ்தான் அணிக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தது. இதனால் 132 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பாய்ட் ரன்கின் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படிக்கலாமே: உலகக் கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இடம்பிடிக்க உள்ள மூன்று இளம் வீரர்கள்
மழை பெய்த காரணத்தால் அயர்லாந்திற்கு 47 ஓவர்களுக்கு 128 ரன்களை இலக்காக அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் இப்போட்டியில் தோல்வியை தழுவினால் வெளியறிவிடும் என்ற காரணத்தால் அதிரடி பௌலிங்கை வெளிபடுத்த திட்டமிட்டது. பாகிஸ்தான் பௌலர்கள் சிறு கால இடைவெளியில் அயர்லாந்தின் விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனால் நீல்-ஓ-பிரைனின் பொறுப்பான 72 ரன்கள் மூலம் அயர்லாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியே தற்போது வரை அயர்லாந்தின் மிகப்பெரிய வெற்றியாக உள்ளது. இது கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சியை பாகிஸ்தானிற்கு ஏற்படுத்தியது.