#1 பாகிஸ்தான் vs அயர்லாந்து, 2007
மார்ச் 17 அயர்லாந்து அணிக்கு மிகச் சிறப்பான நாளாகும். ஏனெனில் அன்று ஸ்டே.பேட்ரிக் என்ற தினம் அந்த நாட்டு மக்கள் கொண்டாடுவார்கள். 2007ம் வருடத்தில் அந்த தினம் மேலும் சிறப்பாக அயர்லாந்திற்கு அமைந்தது. அந்த நாளில் அயர்லாந்து கிரிக்கெட் அணி யார் என்பது உலகிற்கு புரிய வைக்கப்பட்ட நாளாகவும் அமைந்தது.
அயர்லாந்து ஆச்சரியமளிக்கும் விதத்தில் ஜீம்பாப்வேவிற்கு எதிரான தனது முதல் போட்டியில் வெற்றி பெற்று புள்ளிகளை பெற்றது. ஒரு மற்றொரு பெரும் ஆச்சரியத்தை அயர்லாந்து அளிக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அயர்லாந்து சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்தி பாகிஸ்தானின் ஆரம்ப விக்கெட்டுகளை வீழ்த்தியது. பாகிஸ்தான் அணிக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தது. இதனால் 132 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பாய்ட் ரன்கின் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படிக்கலாமே: உலகக் கோப்பை தொடருக்கு பின்னர், இந்திய அணியில் இடம்பிடிக்க உள்ள மூன்று இளம் வீரர்கள்
மழை பெய்த காரணத்தால் அயர்லாந்திற்கு 47 ஓவர்களுக்கு 128 ரன்களை இலக்காக அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் இப்போட்டியில் தோல்வியை தழுவினால் வெளியறிவிடும் என்ற காரணத்தால் அதிரடி பௌலிங்கை வெளிபடுத்த திட்டமிட்டது. பாகிஸ்தான் பௌலர்கள் சிறு கால இடைவெளியில் அயர்லாந்தின் விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனால் நீல்-ஓ-பிரைனின் பொறுப்பான 72 ரன்கள் மூலம் அயர்லாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியே தற்போது வரை அயர்லாந்தின் மிகப்பெரிய வெற்றியாக உள்ளது. இது கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சியை பாகிஸ்தானிற்கு ஏற்படுத்தியது.