#2.ஆடம் ஜாம்பா (6/19):
ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் 6 விக்கெட் கைப்பற்றிய இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தவர், ஆடம் ஜாம்பா. இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர் ஜென்ஸ் அணிக்காக இடம் பெற்றிருந்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், இவரது பந்துவீச்சு எகானமி 4.75 என்ற வகையில் அமைந்தது. இவரது பந்துவீச்சில் கனே வில்லியம்சன், யுவராஜ் சிங், ஹென்றிக்ஸ், தீபக் ஹூடா, நமன் ஓஜா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தங்களது விக்கெட்களை இழந்தனர். என்னதான் இவர் எதிரணியை 137 ரன்களுக்கு கட்டுப்படுத்தினாலும் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை இவரால் தடுக்க இயலவில்லை.
இருப்பினும், இவரது அபார பந்து வீச்சால் இவருக்கே ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. 6 விக்கெட்களை கைப்பற்றிய இவரது பந்துவீச்சு தோல்வியுற்ற அணிகளின் வரிசையில் முன்னிலை வகிக்கிறது. மேலும், அந்த தொடரின் வெறும் 5 போட்டிகளில் விளையாடிய ஜாம்பா 12 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
#1.சோஹைல் தன்வீர் (6/14):
ஐபிஎல் வரலாற்றில் 6 விக்கெட்களை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஐபிஎல்லின் தொடக்க தொடரிலே படைத்திருந்தார், பாகிஸ்தானிய பந்துவீச்சாளர் சோஹைல் தன்வீர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனது அபார பந்துவீச்சு தாக்குதலால் நிலை குலைய வைத்தார். 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார், தன்வீர். பார்த்தீவ் பட்டேல், அல்பி மோர்கல், சிவராமகிருஷ்ணன், பிளம்பிங், முரளிதரன், மக்கையா நிட்டினி விக்கெட்டுகளை சாய்த்தார்.
இவரது சிறப்பான பவுலிங் தாக்கத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இவரது பந்துவீச்சு முக்கியமான காரணியாகும். மேலும், இவரே போட்டியின் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். 2008 ஐபிஎல் சீசனில் 22 விக்கெட்களைச் சாய்த்து தொடரின் அதிக விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.