இந்த ஐபிஎல் தொடரில் ‘பிளே ஆஃப்’ சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புடைய முதல் 4 அணிகள் எது?.

Defending Champions - Chennai Super Kings.
Defending Champions - Chennai Super Kings.

‘ஐபிஎல் 2019’ கிரிக்கெட் திருவிழா தனது இரண்டாவது பாதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த முதல் இரண்டு வாரங்களில் பல்வேறு சுவாரஸ்யமான கிரிக்கெட் போட்டிகளை இந்த வருட ஐபிஎல் நமக்கு அளித்து இருக்கிறது.

இந்த ஐபிஎல் தொடரில் முதல் நான்கு இடங்களை பிடித்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு அனைத்து அணிகளும் சிறப்பான ஆட்டத்தை அளித்து வருகின்றன. இதில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’, ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணிகள் இந்த ஐபிஎல்-லில் சிறப்பான தொடக்கத்தை கண்டிருக்கிறது.

அதேநேரம் ‘பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்’, ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ ஆகிய அணிகள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து புள்ளிப் பட்டியலில் மோசமான இடத்தில் இருக்கிறது.

இந்தக் கட்டுரையில் இந்த ஐபிஎல் தொடரில் ‘ப்ளே ஆஃப்’ சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ள அணிகளை பற்றி காணலாம்.

4 ) டெல்லி கேப்பிட்டல்ஸ்.

Team 'Delhi Cappitals'.
Team 'Delhi Cappitals'.

இளம் வீரர்களை அதிகமாக உள்ளடக்கிய ‘டெல்லி கேப்பிட்டல்ஸ்’ அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு தகுதியான ஒரு அணியாகும்.

இதுவரை 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ‘காகிசோ ரபாடா’வின் பந்துவீச்சு டெல்லி அணிக்கு மிகப்பெரிய பலமாகும்.

மேலும் ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர், மற்றும் ரிஷாப் பான்ட் போன்ற அபாயகரமான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை உள்ளடக்கியது டெல்லி அணியின் மற்றொரு மிகப்பெரிய பலமாகும். எனவே டெல்லி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

3 ) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

Team 'KKR'.
Team 'KKR'.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணி ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ‘ஆண்ட்ரே ரசல்’-இன் ருத்ரதாண்டவ ஆட்டம் தான். பல ஆட்டங்களில் கொல்கத்தா அணியை தனிநபராக வெற்றி பெற வைத்துள்ளார் ரசல்.

இவரோடு சேர்ந்து ராபின் உத்தப்பா, நித்திஷ் ராணா ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் சுனில் நரேன், குல்தீப் யாதவ் மற்றும் பியூஸ் சாவ்லா போன்ற தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பலமாகும்.

தற்போது ஆடியுள்ள 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

2 ) மும்பை இந்தியன்ஸ்.

Team 'Mumbai Indians'.
Team 'Mumbai Indians'.

வழக்கமாக ஆரம்பகட்ட போட்டிகளில் தடுமாறி அதன் பின்னர் எழுச்சி பெறுவது தான் ‘மும்பை இந்தியன்ஸ்’ அணிக்கு வழக்கம். ஆனால் இந்த முறை ஆரம்பத்திலேயே வெற்றிகளைக் குவித்து வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

கேப்டன் ‘ரோகித் சர்மா’ இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது மும்பை அணிக்கு சற்று கவலை தரும் விஷயமாகும். ஆனால் ‘பாண்டியா’ பிரதர்ஸின் அபார ஆட்டம் மும்பை வெற்றிக்கு கை கொடுக்கிறது. மேலும் அதிரடி வீரர் ‘பொல்லார்ட்’ சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பி இருப்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப் பெரும் பலமாக அமைந்துள்ளது.

பும்ரா, மலிங்கா போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களை உள்ளடக்கிய மும்பை அணிக்கு புதுமுக பந்துவீச்சாளர் ‘அல்சாரி ஜோசப்’ மேலும் நம்பிக்கை அளித்துள்ளார். எனவே மும்பை அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு மிக பிரகாசமாக அமைந்துள்ளது.

1 ) சென்னை சூப்பர் கிங்ஸ்.

Team 'CSK'.
Team 'CSK'.

இந்த பட்டியலில் மிக அதிக வாய்ப்புள்ள அணியாக இருப்பது தோனி தலைமையிலான ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி. நடப்புச் சாம்பியனான சென்னை அணி வழக்கம் போல இந்த ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

சென்னை அணியின் வெற்றிக்கு கேப்டன் தோனியின் சிறப்பான கேப்டன்ஷிப் மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும் இம்ரான் தாஹீர், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங் போன்ற தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் சென்னை அணிக்கு மேலும் பலம் சேர்க்கிறார்கள்.

வேகப்பந்து வீச்சாளர் ‘தீபக் சஹார்’ தனது சிறப்பான பந்து வீச்சில் நம்பிக்கை அளிக்கிறார். இதுவரை சிறப்பான பந்துவீச்சால் மட்டுமே சென்னை அணி இந்த ஐபிஎல் தொடரில் வெற்றிகளை பெற்று வருகிறது. சென்னை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி மீண்டும் ஒரு முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்பதில் சந்தேகமில்லை.

Quick Links