அடுத்த ஐபிஎல் சீசனில் ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணி கழட்டி விட வாய்ப்புள்ள 3 முக்கிய வீரர்கள்.

Team 'KKR'.
Team 'KKR'.

இந்த ஐபிஎல் சீசன் ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணிக்கு ஏற்ற இறக்கமான ஒரு சீசனாக அமைந்தது. தொடரின் ஆரம்பத்தில் முதல் 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று கெத்து காட்டிய கொல்கத்தா அணி பின்னர் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோல்வி அடைந்து மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

நேற்றைய ‘மும்பை இந்தியன்ஸ்’ அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் மிக மோசமாக விளையாடி தோல்வியடைந்து ‘பிளே-ஆஃப்’ சுற்றுக்கு முன்னேற முடியாமல் இந்த சீசனில் இருந்து வெளியேறியது கொல்கத்தா.

‘ஆண்ட்ரே ரசலை’ மட்டுமே முக்கியமாக நம்பியிருந்தது மற்றும் குல்தீப் யாதவ் போன்ற முன்னணி வீரர்களின் மோசமான செயல்பாடுகள் ‘நைட் ரைடர்ஸ்’ அணி இந்த ஐபிஎல் தொடரில் சொதப்பியதர்க்கு முக்கிய காரணமாகும்.

அடுத்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பல மாற்றங்களுடன் களமிறங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சீசனில் கொல்கத்தா அணியில் இருந்து கழட்டி விட அதிக வாய்ப்புள்ள 3 வீரர்களை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

3 ) பியூஷ் சாவ்லா. ( ஆட்டங்கள் - 13, விக்கெட்டுகள் - 10, எக்கானமி - 8.96)

Piyush Chawla.
Piyush Chawla.

கொல்கத்தா அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்தான் ‘பியூஷ் சாவ்லா’. ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரான இவர், இந்திய ஆடுகளங்களில் நல்ல அனுபவத்தைக் கொண்டு உள்ளார். கொல்கத்தா அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான ‘குல்தீப் யாதவ்’ மோசமான ஃபார்மில் இருந்ததால் இவரின் மீது அதிக எதிர்பார்ப்பு வைக்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இவரால் சிறப்பான பந்துவீச்சை வழங்க முடியவில்லை. 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர், 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். எதிரணி பேட்ஸ்மேன்கள் இவரது பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர். ஒரு ஓவருக்கு சராசரியாக 8.96 ரன்களை வாரி வழங்கினார் இவர்.

எனவே அடுத்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை கழட்டி விட அதிக வாய்ப்புள்ளது.

2) கார்லோஸ் பிராத்வைட். ( ஆட்டங்கள் - 2, ரன்கள் - 11, விக்கெட் - 0)

Carlos Braithwaite.
Carlos Braithwaite.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ‘கார்லோஸ் பிராத்வைட்’ இந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்காக ஒன்றுமே சாதிக்கவில்லை என்பதுதான் சோகம். கடந்த ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணி இவரை 4.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

ஆனால் இந்த சீசனில் இவர் கடுமையாக ஏமாற்றம் அளித்தார். 2 போட்டிகள் மட்டுமே ஆடிய இவர் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். பந்து வீச்சிலும் எந்த ஒரு விக்கெட்டையும் இவர் வீழ்த்தவில்லை. இவரது இந்த மோசமான செயல்பாட்டின் காரணமாக அடுத்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ‘பிராத்வைட்’ களம் இறங்க வாய்ப்புகள் குறைவே.

1 ) ராபின் உத்தப்பா. ( ஆட்டங்கள் - 12, ரன்கள் - 282, ஸ்டிரைக்-ரேட் : 115.10)

Robin Uthappa.
Robin Uthappa.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்பவர் தான் ‘ராபின் உத்தப்பா’. ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் இவர் மொத்தமாக சொதப்பினார். 12 ஆட்டங்களில் களமிறங்கிய இவர், 31.33 என்ற சராசரியில் 282 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் முக்கிய பிரச்சினை என்னவென்றால் இவரது ஸ்ட்ரைக் ரேட் வெறும் 115.10 தான்.

கடந்த சில சீசன்களாகவே உத்தப்பா துரிதமாக ரன்கள் சேர்ப்பதில் சொதப்புகிறார். குறிப்பாக நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் இவரது ‘டெஸ்ட் இன்னிங்ஸ்’ பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

கொல்கத்தா அணியில் ஏற்கனவே நித்திஷ் ராணா, சுப்மான் கில் போன்ற திறமையான இளம் வீரர்கள் இருப்பதால் ‘உத்தப்பா’வுக்கு அடுத்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியில் இடம் கிடைப்பது கடினம் தான்.

Quick Links