பன்னிரண்டாவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் அதன் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. லீக் போட்டிகள் முடிவுற்று அதன் அடுத்த கட்டமான பிளே ஆப் சுற்று தொடங்க உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், தில்லி கேப்பிட்டல் மற்றும் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணிகள் தகுதி பெற்றுள்ளன. பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இதில் நான்காவது இடத்திற்கு மிகப்பெரிய குழப்பமும் போட்டியும் ஏற்பட்டது. பல போட்டிகள் மற்றும் ஆச்சரியங்களை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நான்காவதாக தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெறும் 12 புள்ளிகள் பெற்று தகுதி பெற்றதை எல்லோரும் அறிந்திருக்க முடியும்.
இத்தொடரில் வழக்கம்போல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பலம் நிறைந்ததாக இருப்பினும் தனது மோசமான ஆட்டத்தினால் 11 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இந்த வருடத்தை முடிந்தது. எனினும் ஒரு சிறிய ஆட்ட நடுவரின் தவறின் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது பிளே ஆப் வாய்ப்பினை இழந்ததை யாரும் நம்ப முடியாது. ஆம், இதனை உற்று நோக்க நீங்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் 7வது ஆட்டத்தினை சரி நினைவு கூற வேண்டும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இத்தொடரில் முதல் ஆறு ஆட்டங்களை தோற்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை இன்னும் ஒரே ஒரு ஆட்டம் தோற்றால் தனது நிலை கேள்விக்குறி என அறிந்து தனது ஏழாவது ஆட்டத்தினை மும்பை இந்தியன்ஸ் உடன் களம் கண்டது. இந்த போட்டியில் 188 ரன்கள் எனும் இலக்குடன் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பாக ஆடியது. தனது கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர் மலிங்காவை எதிர்கொண்டது. தனது கடைசி பந்தில் 7 ரன் வேண்டும் என்ற நிலையில் ஏபி டிவில்லியர்ஸ் 70 ரன்னில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் தனது கடைசி பந்தினை மலிங்கா நோ பால் ஆக வீச அதனை ஆட்ட நடுவர் உற்றுநோக்க வில்லை. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பரிதாபமாக தோற்றது. ஒருவேளை அந்தப் பந்தினை ஆட்ட நடுவர் நோ பால் கொடுத்திருந்தால் அடுத்த பால் ஃப்ரீ ஹிட் ஆகி இருக்கும். சிறப்பான ஆட்டத்தை ஆடி கொண்டிருந்த ஏபி டிவில்லியர்ஸ் அந்த பந்தினை சிக்ஸரை நோக்கி விளாசி இருப்பார். ஆனால் நடுவரின் தவறினால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோற்றது. ஒருவேளை அப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றிருந்தால் 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கும். நான்காவது இடத்திற்கு முன்னேறி இந்நேரம் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும்.
இப் போட்டி முடிந்த பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மிகவும் கோபமாக தனது கண்டனத்தை தெரிவித்ததை நினைவிருக்கலாம். இந்த தொடரின் முதல் கட்டத்தில் இருந்தே நடுவர்கள் மிக மோசமான வெளிப்பாட்டினால் அனைவரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.