நடந்தது என்ன?
பாகிஸ்தானிற்கு எதிராக டக் வொர்த் லுயிஸ் விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அதிக நம்பிக்கையுடன் திகழும் இந்திய அணி அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானிற்கு எதிராக சனிக்கிழமையன்று (ஜீன் - 22) சவுத்தாம்டனில் உள்ள ஏஜஸ் பௌல் மைதானத்தில் மோத உள்ளது. இப்போட்டியில் காலநிலைப்படி மேகமூட்டமோ, மழையோ பொழிய வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு தெரியுமா...
ஐசிசி உலகக்கோப்பை தொடரின் வரலாற்றில் மழையினால் அதிகம் பாதிக்கப்பட்ட தொடராக இவ்வருட உலகக்கோப்பை அமைந்துள்ளது. ஏற்கனவே மோசமான வானிலையால் 4 போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மழையினால் பாதிக்கப்பட்ட போட்டிகளுக்கு மாற்று நாட்களை அறிவிக்காமல் புள்ளிகளை பகிர்ந்து அளித்து வருகிறது. மோசமான வானிலை இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டிகளிலும் இருந்து வந்தது. அதனால் பாகிஸ்தான் இன்னிங்ஸ் டக் வொர்த் லுயிஸ் விதிப்படி 40 ஓவர்களுடன் முடித்து கொள்ளப்பட்டது.
கதைக்கரு
ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியை போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது இல்லை. எனவே விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நான்காவது வெற்றியை பெற அதிக வாய்ப்புள்ளது. இதற்கு மழை குறுக்கிடக் கூடாது. வானிலை அறிக்கையின் படி சவுத்தாம்டனில் நடைபெறவுள்ள போட்டியில் 100 ஓவர்களும் தங்குதடையின்றி வீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே - 2019 உலகக்கோப்பையில் அடுத்த 5 போட்டிகளுக்குப் (மேட்ச் 25-29) பிறகு புள்ளிபட்டியலில் அணிகளின் உத்தேச இடம்
போட்டியன்று காலையில் 4 சதவீத மழை பொழிய வாய்ப்புள்ளது. எனவே போட்டி நாளன்று சூரியன் உதிக்கும், குறிப்பிடப்பட்ட நேரத்திலிருந்தே போட்டி துவங்கும். இப்போட்டி முடிந்து அடுத்த நாள் சவுத்தாம்டனில் மழை பொழிய அதிக வாய்ப்புள்ளது. ஆனால் ஆட்ட நேரத்தில் மழை குறுக்கிட வாய்ப்பில்லை.
இந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ள முன்னணி அணியாக உள்ளது. இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் சிறந்த அணியாக வலம் வருகிறது. மறுமுனையில் ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் பங்கேற்று 5லிலும் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சனிக்கிழமையன்று நடைபெற உள்ள போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி சாதரணமாக எடுத்துக் கொள்ளாது. கடந்த வருடத்தில் நடந்த ஆசியக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் மோதிய போட்டி சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அப்போது இருந்த வலிமையான ஆப்கானிஸ்தான் அணியைப் போல் தற்போது இல்லை. பல அரசியல் சூல்நிலைகள் அந்த அணியை பெரிதும் சீர்குலைத்து மோசமான நிலையில் ஆப்கானிஸ்தான் தற்போது உள்ளது.
அடுத்தது என்ன?
வானிலை எந்த வித இடற்பாடு ஏற்படுத்த வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வந்துள்ள நிலையில் இந்திய அணி சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் இரு புள்ளிகளை பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணி இனி வரும் போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெறுவதற்காவது போராடும்.