ஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் யுவராஜ் சிங் இடம்பெறுவாரா?

Yuvraj Singh
Yuvraj Singh

2019 ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 26 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்னை சிதம்பரம் மைதானத்தில் இரண்டாவது முறையாக பலபரிட்சை நடத்த இருக்கின்றன.

பொதுவாக மும்பை-சென்னை போட்டிகள் விறுவிருப்பாக இருக்கும். இதுபோல் கடந்த காலங்களில் இருந்தது இல்லை. கடைசியாக 2 ஐபிஎல் தொடர்களில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி இரு நாடுகளுக்கு இடையே மோதும் போட்டி போல் ரசிகர்கள் பாரக்க தொடங்கிவிட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 11 போட்டிகளில் பங்கேற்று 8ல் வெற்றி பெற்று புள்ளி அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 10 போட்டிகளில் பங்கேற்று 6ல் வெற்றி பெற்று புள்ளி அட்டவணையில் 2வது இடத்தில் உள்ளது.

சென்னை அணி இரண்டு தொடர் தோல்விகளுக்கு பிறகு இந்த வாரத்தின் தொடக்கத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. இந்த போட்டியில் ஷேன் வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்களை விளாசி சென்னை அணிக்கு பக்கபலமாக இருந்தார்.

மறுமுனையில் மும்பை இந்தியன்ஸ் கடந்த வாரத்தின் இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தடுமாறி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மும்பை அணி இந்த ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. ஆனால் பேட்டிங்கில் மட்டும் இந்த அணி அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மும்பை அணியின் இரண்டு சீரான பேட்ஸ்மேன்கள் என்றால், சிறப்பான தொடக்கத்தை அளித்து வரும் குவின்டன் டிகாக் மற்றும் டெத் ஓவரில் அசத்தும் ஹர்திக் பாண்டியா. டிகாக் இந்த ஐபிஎல் சீசனில் 10 போட்டிகளில் பங்கேற்று 378 ரன்களை குவித்துள்ளார். ஹர்திக் பாண்டியா 190 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 241 ரன்களை இந்த சீசனில் விளாசியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி மிடில் ஆர்டர் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த சமயத்தில் யுவராஜ் சிங்கை, தடுமாறி வரும் சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக ஆடும் XI-ல் சேர்ப்பது சரியான முடிவாக மும்பை அணிக்கு அமையும். கடந்த 4 போட்டிகளில் சூர்ய குமார் யாதவின் ஆட்டத்திறன் பின்வருமாறு:

1) 25 பந்துகளுக்கு 21 ரன்கள் (சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக)

2) 29 பந்துகளுக்கு 29 ரன்கள்(ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக)

3) 21 பந்துகளுக்கு 25 ரன்கள்(சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக)

4) 11 பந்துகளுக்கு 5 ரன்கள்(கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணிக்கு எதிராக)

மேற்கண்ட ரன் குவிப்பு ரேட் வைத்து பார்க்கும் போது சூர்ய குமார் யாதவ் தடுமாறி வருவது தெள்ளத்தெளிவாக நமக்கு தெரிகிறது.

யுவராஜ் சிங்கின் பங்களிப்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது தேவைப்படுகிறது. சென்னை அணியின் மிகப்பெரிய வலிமையே அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் தான். அத்துடன் சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முழுவதும் சாதகமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வந்துள்ளது. சுழற்பந்து வீச்சாளை கையாள்வதில் சூர்ய குமார் யாதவை விட யுவராஜ் சிங் கைத்தேர்ந்தவராக திகழ்கிறார். 2019 ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் யுஜ்வேந்திர சகாலின் பௌலிங்கில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் யுவராஜ் சிங் தற்போது வரை தான் சுழற்பந்து வீச்சாளை சிறப்பாக கையாண்டு வருகிறேன் என அனைவருக்கும் புரிய வைத்துள்ளார். எனவே இவருக்கு மும்பை இந்தியன்ஸ் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாகும்.

உத்தேச XI - மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா (கேப்டன்), டிகாக்(விக்கெட் கீப்பர்), யுவராஜ் சிங், கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, க்ருநல் பாண்டியா, பென் கட்டிங், ராகுல் சகார், மயன்க் மார்கண்டே, லாசித் மலிங்கா, ஜாஸ்பிரிட் பூம்ரா.

Quick Links

Edited by Fambeat Tamil