ஐபிஎல் வரலாற்றில் 2019 ஐபிஎல் சீசனில்தான் மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பம் முதலே தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ஸ்லோ ஸ்டார்டர் என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் 10 போட்டிகளில் பங்கேற்று 6 வெற்றிகளை குவித்துள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் தகுதி பெற சில படிகளே உள்ளது.
மும்பை அணியின் ஹீட்டர்கள் 2019 ஐபிஎல் தொடரில் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்கின்றனர். மும்பை இந்தியன்ஸ் ஏப்ரல் 26 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியின் தொடர் வெற்றிக்கு முதன் முதலாக முற்றுப்புள்ளி வைத்த அணி மும்பை இந்தியன்ஸ். அந்தப் போட்டியில் வான்கடே மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை அளித்தது.
ஆரம்பத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை அளித்தது. ஆனால் தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியை வைத்து பார்க்கும் போது விளையாடும் இரு அணிகளும் ரன் குவிப்பில் ஈடுபட நல்ல பேட்டிங் மைதானமாக இருக்கும் என தெரிகிறது.
மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தால், சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குவின்டன் டிகாக், ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் பயங்கரமாக தடுமாறுவார்கள்.
இந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு சுழற்பந்து சரியாக அமையவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் தூண்களாக உள்ளனர்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மனிஷ் பாண்டே திடீரென அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது போல ரோகித் சர்மா வெளிபடுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி தொடக்கத்தை அளித்தால் ஹார்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, கீரன் பொல்லார்ட் ஆகியோர் டெத் ஓவரில் சிறப்பாக விளையாடி ஒரு பெரிய இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கும்.
ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் ராகுல் சகார் ஆகியோர் இந்த ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் சென்னை அணிக்கு எதிராக விக்கெட்டுகளை வீழ்த்துவதில் லாசித் மலிங்கா வல்லவராக ஐபிஎல் தொடரில் திகழ்ந்துள்ளார்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் மீண்டும் தங்களது இயல்பான ஆட்டத்திறன் திரும்பியுள்ளனர். எனவே மும்பை இந்தியன்ஸ் தனது பௌலிங்கை மிகவும் வலுபடுத்தும். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சுரேஷ் ரெய்னா மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோரது விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்துவது மும்பை பௌலர்களின் முக்கிய நோக்கமாக இருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த போட்டியில் கிடைக்கும் இரு புள்ளிகள் மிக முக்கியமானது ஆகும். அத்துடன் சென்னை அணியை முதன் முதலாக அதன் சொந்த மண்ணில் வீழத்த மும்பை இந்தியன்ஸ் முயற்சி செய்யும்.