நடந்தது என்ன
இளம் இந்திய நட்சத்திர வீரர் பிரித்து ஷா, விஜய் சங்கர், மயான்க் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் பிசிசிஐ வெளியிட்டுள்ள மத்திய ஒப்பந்த பட்டியலில் எந்த கிரேடிலும் இடம் பெறவில்லை. இந்திய கிரிக்கெட் வாரியம் 2018/19 ற்கான மத்திய ஒப்பந்த வீரர்களின் பட்டியலை இன்று(மார்ச் 8) வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்கவும்: 2018/19 ஆண்டிற்கான மத்திய ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது பிசிசிஐ
மாற்று வீரர்கள் கலீல் அகமது, ஹனுமா விகாரி போன்றோர் கிரேடு-C ல் இடம் பிடித்துள்ளனர். பிசிசிஐ ஓப்பந்ததில் சேருவதற்கு குறைந்தது 3 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் அல்லது 8 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலாவது பங்கேற்று இருக்க வேண்டும். ஆனால் விஜய் சங்கர் 8 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், பிரித்வி ஷா 2 சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். இவர்கள் இருவரும் இடம்பெறாததற்கு இதுவும் ஒரு காரணமாகும். இவர்களுடன் சமீபத்தில் ஆஸ்திரேலிய தொடரில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி அசத்திய மயான்க் அகர்வாலும் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. இவர் 2 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
பிண்ணனி
பிசிசிஐ வீரர்களின் ஆட்டத்திறனை பொறுத்து மூன்று பிரிவுகளாக பிரித்து மத்திய ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது. A+ பிரிவு மிக உயர்ந்த பிரிவாகவும், C பிரிவு கடைசி பிரிவாகவும் உள்ளது. A+ பிரிவில் டெஸ்ட், ஓடிஐ, டி20 என 3 கிரிக்கெட்டிலும் சிறந்த விளங்கும் வீரர்கள் இடம் பெற்றிருப்பர்.
பெரும்பாலும் வருங்கால நட்சத்திர வீரர்கள் கடைசி பிரிவான C பிரிவில் இடம்பெறுவர். ஆனால் தற்போது பிசிசிஐ மத்திய ஒப்பந்த்தில் இடம்பெற ஒவ்வொரு வீரர்களும் குறிப்பிட்ட சில போட்டிகளில் பங்கேற்றால் மட்டுமே ஒப்பந்தத்தில் இடம்பெற முடியும் என நிபந்தனை விதித்துள்ளது. அதாவது பிரிவு-C ல் இடம்பெறுவதற்கு முன் ஒரு வீரர் குறைந்தது 3 டெஸ்ட் போட்டிகளிலோ அல்லது 8 ஒருநாள் போட்டிகளிலோ விளையாடிருக்க வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கதைக்கரு
உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் விஜய் சங்கர் மற்றும் பிரித்வி ஷா சர்வதேச அணியில் விளையாடும் வாய்ப்பை 2018ல் பெற்றனர். கடந்த ஆண்டில் 6 ஒருநாள் போட்டிகளில் விஜய் சங்கரும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் பிரித்வி ஷா-வும் இந்திய அணிக்காக விளையாடினர்.
இரண்டு சிறப்பான பேட்ஸ்மேன்களுமே பிசிசிஐ-யின் சர்வதேச ஒப்பந்த்திற்கு தகுதி பெறவில்லை. இதனால் பிசிசிஐ-யுடனான தங்களது முதல் ஒப்பந்தத்தில் இருவரும் இடம்பெறவில்லை.
அடுத்தது என்ன?
பிரித்வி ஷா ஆஸ்திரேலிய தொடரில் காயம் காரணமாக விலகினார். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு அளித்த பயிற்சியினால் காயத்திலிருந்து மீண்டுள்ளார். 2019 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். விஜய் சங்கர் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே 2019/2020 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருவரும் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
