ஐபிஎல் தொடரானது, கடந்த 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடமாக நமது இந்தியாவில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகளை பற்றி இங்கு காண்போம்.
#1) கிங்ஸ் லெவன் பஞ்சாப் Vs டெல்லி டேர்டெவில்ஸ் ( 2009 ஆம் ஆண்டு )
கிங்ஸ் லெவன் பஞ்சாப் – 104/7 ( 12 ஓவர்கள் )
டெல்லி டேர்டெவில்ஸ் - 58/0 ( 4.5/6 ஓவர்கள் ) D/L முறை
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. போட்டி தொடங்கும் போது மழை பெய்ய ஆரம்பித்தது. நீண்ட நேரம் விடாமல் மழை குறுக்கிட்டதால், போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரவி பொப்பாரா மற்றும் கரன் கோயல் ஆகிய இருவரும் களமிறங்கினர். 12 ஓவர்கள் என்பதால் தொடக்கத்தில் இருந்தே, இருவரும் அதிரடியாக விளையாடினர். கோயல் 21 பந்துகளில் 38 ரன்கள் அடித்தார். இதில் 3 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அங்கும். தொடக்க ஆட்டக்காரர்களைத் தவிர, மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் அடித்தது.
இந்த இலக்கை டெல்லி அணி சேஸ் செய்ய ஆரம்பிக்கும் பொழுது, மீண்டும் மழை குறுக்கிட்டது. எனவே டெல்லி அணிக்கு 6 ஓவர்களில் 54 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கௌதம் கம்பீர் மற்றும் சேவாக் ஆகிய இருவரும் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி 5 ஓவர்களில் இந்த இலக்கை அடித்து விட்டனர். அதிரடியாக 3 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை விளாசிய சேவாக், 16 பந்துகளில் 38 ரன்கள் விளாசினார்.
#2) மும்பை இந்தியன்ஸ் Vs டெக்கான் சார்ஜர்ஸ் ( 2008 ஆம் ஆண்டு )
மும்பை இந்தியன்ஸ் – 154/7 ( 20 ஓவர்கள் )
டெக்கான் சார்ஜர்ஸ் – 155/0 ( 12/20 ஓவர்கள் )
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சனத் ஜெயசூர்யா மற்றும் ராஞ்சி ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அதன் பின்பு வந்த ரகானேவும் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்பு பொல்லாக் மற்றும் டுவைன் பிராவோ ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து, அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது.
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெக்கான் சார்ஜர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் விவிஎஸ் லட்சுமண் ஆகிய இருவரும் களமிறங்கினர். இந்த இலக்கை, டெக்கான் சார்ஜர்ஸ் அணி, விக்கெட் இழப்பின்றி 12 ஓவர்களிலேயே அடித்து விட்டது. இறுதி வரை வெளுத்து வாங்கிய கில்கிறிஸ்ட், 47 பந்துகளில் 109 ரன்கள் விளாசினார். இதில் 10 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும்.