"ஐபிஎல் போட்டிகளைக் கொண்டு உலகக்கோப்பை அணி தேர்வு செய்ய முடியாது." ரோஹித் சர்மா கருத்து.

Australia v India: Carlton Mid ODI Tri Series - Game 2
Australia v India: Carlton Mid ODI Tri Series - Game 2

இந்த வருடத்தின் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்தின் பக்கங்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்காக எழுதிவைக்கப்பட்டவை. இந்த மாதங்களில் இரு பெரும் கிரிக்கெட் திருவிழக்களான ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும். ஐபிஎல் போட்டிகளில் ஏற்கனவே சென்ற மார்ச் 23ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக உள்ளார் என்பதை அறிவோம்.

இருப்பினும் அனைவரின் கவனமும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள உலகக்கோப்பை போட்டிகளையே உற்று நோக்கி உள்ளது. இந்நிலையில் கிரிக்கெட்டின் மிகப் பெரிய திருவிழாவாக கருதப்படும் உலகக்கோப்பை தொடங்க இன்னும் 50க்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் இந்திய அணியின் துணைத் தலைவருமான ரோஹித் சர்மா இந்திய அணியின் உலகக்கோப்பை அணித்தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் அணித்தலைவர் விராட் கோலியும் உலகக்கோப்பை அணியை முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதைப் பற்றி அவர் கூறுகையில் "நாங்கள் ஒரு அணியாக தயார் நிலையில் உள்ளோம். மேலும் சுழற்பந்து வீச்சாளர், வேகப்பந்து வீச்சாளர், நடுநிலை ஆட்டக்காரர் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் தேர்வு பற்றி சூழலுக்கேற்ப இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் அணித்தலைவர் விராட் கோலியும் முடிவு செய்ய வேண்டும். சென்ற முறை நாங்கள் இங்கிலாந்தில் ஆடியபோது வறண்ட சூழல் நிலவியது. இங்கிலாந்தின் தற்போதய சூழ்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில் தற்போது உள்ள சூழலுக்கேற்ப பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

மேலும் ஐபிஎல் போட்டிகளை குறித்து தெரிவித்ததாவது "ஐபிஎல் என்பது 20 ஓவர்கள் ஆட்டமாகும், இதை வைத்து 50 ஓவர்கள் ஆடூம் உலகக்கோப்பை அணி தெர்வு செய்ய தகுந்ததல்ல. சென்ற ஆண்டு ஆடிய ஒருநாள் போட்டிகளை நோக்கினால் தகுதியான வீரர்கள் யாரென்று புலப்படும்" என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் இந்திய அணியின் துணைத் தலைவருமான ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் 4ஆம் ஆட்டக்காரர் இடம் வெற்றிடமாக உள்ள நிலையில் அந்த இடத்திற்கான போட்டி கடுமையாக உள்ளது. இந்த இடத்திற்கு அம்பத்தி ராயுடு, ரஹானே, ரிஷப் பன்ட் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களான விஜய் சங்கர் மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளோர் பரிசீலனை பட்டியலில் உள்ளனர். சுரெஷ் ரெய்னாவும் யுவராஜ் சிங்கும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடினால் அணிக்கு திரும்பலாம் என நினைத்த நிலையில் ரோஹித் சர்மாவின் இந்த கருத்து ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் உலகக்கோப்பை ஆட உள்ள அணியை தேர்வு செய்ய மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில் உலகக்கோப்பை அணிகளை‌ அறிவிக்க வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஐசிசி கெடு விதித்துள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து தன் உலகக்கோப்பை அணியை அறிவித்துள்ள நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதி உலகக்கோப்பை இந்திய அணி அறிவிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Quick Links

Edited by Fambeat Tamil