ஆர்சிபி அணியால் விராட் கோஹ்லிக்கு கிடைத்த மோசமான சாதனை

Vir
Virat Kohli

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதியிலிருந்து தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் அனைத்து அணிகளும் தலா 4 போட்டிகள் ஆடியுள்ளன. ஆர் சி பி எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும் இந்திய அணியின் தலைவருமான விராத் கோஹ்லி வழி நடத்தி வருகிறார். இந்த வருட ஐபிஎல் தொடர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கடினமான காலம் எனவே சொல்லலாம். ஏனெனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆடிய 6 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது, இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ரசிகர்களையும், பெங்களூர் மக்களையும் மற்றும் அணித்தலைவர் விராட் கோஹ்லியையும் மிகுந்த வேதனைக்கு தள்ளியுள்ளது. இதனால் பெங்களூர் அணி ஐபிஎல் போட்டிகளில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கடுமையாக குறைந்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இந்த மோசமான விளையாட்டால், இந்திய அணியில் பல சாதனைகளை புரிந்த சச்சினின் பல சாதனைகளை உடைத்த நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோஹ்லியை ஒரு மோசமான சாதனையில் சிக்க வைத்துள்ளது. அச்சாதனை என்னவெனில் விராட் கோஹ்லி ஐபிஎல்லில் மிக அதிக தோல்வி போட்டிகளை கண்ட வீரர் எனும் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். விராட் கோஹ்லி இதுவரை 87 தோல்வி போட்டிகளில் பங்குபெற்று முதலிடம் வகிக்கிறார். இது அவர் படைத்த மிக மோசமான சாதனை ஆகும்.

Virat Kohli

இதனிடையே பெங்களூரு அணி தனது 5வது போட்டியில் கொல்கத்தா அணியுடன் ஆடியது. அப்போட்டியில் விராட் கோஹ்லியும் ஏபி டி வில்லியர்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 205 ரன்களை இலக்காக வைத்தனர். இருப்பினும் பந்து வீச்சாளர்களின் பரிதாபமான ஆட்டத்தினால் பெங்களூர் அணி தோற்க நேர்ந்தது. போட்டி முடிந்தவுடன் மிகவும் கோபமடைந்த விராட் கோஹ்லி தனது பந்துவீச்சாளர்களை சாடினார். இதனைப்பற்றி அவர் பேட்டியளிக்கையில் "எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை, நாங்கள் எந்த இடத்தில் தோற்றோம் என்பதை நன்கு அறிவேன். நாங்கள் வீசிய கடைசி 4 ஓவர்கள் ஏற்றுக்கொள்ளப்படாத வகையில் இருந்தன. நாங்கள் இன்னும் சாதுர்யமாக செயல்பட்டு இருக்க வேண்டும், நாங்கள் நிதானத்தை இழந்து விட்டோம். இது போன்ற நிலைமைதான் எங்களுக்கு முதல் போட்டியில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த 2019 ஐபிஎல் கற்றுக்கொடுத்தது என்னவெனில், கடைசி டெத் ஓவர்களில் நாங்கள் சாதுரியமாக துல்லியமாக பந்து வீச இல்லையெனில் ரஸ்ஸூல் போன்ற வீரர்களை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம் ஆகும்." என தெரிவித்துள்ளார்

அவர் கூறியதாவது "கடைசி 4 ஓவர்களில் 75 ரன்களை காப்பாற்ற முடியாமல் போனது மிகவும் வேதனைக்குரியது. இப்படி பந்து வீசினால் 100 ரன்களை கூட காப்பாற்ற இயலாது" என விரக்தியோடு தெரிவித்தார்.

இதனிடையே நேற்று நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியிலும் பெங்களூர் அணி தோற்றது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணி தனக்கிருக்கும் மிச்சமுள்ள 8 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now