பிரீமியர் லீக் : கேம் வீக் 20 முடிவுகள்

ஹெல்டர் கோஸ்டா
ஹெல்டர் கோஸ்டா

2018/19 ஆம் ஆண்டிற்கான பிரீமியர் லீக் போட்டிகள் தற்பொழுது நடைபெற்றது வருகிறது. கேம் வீக் 20க்கு ஆன ஆட்டங்கள் இந்த வாரம் நடைபெற்றன.

சனிக்கிழமை ஆறு ஆட்டங்கள் நடைபெற்றன. டோட்டன்ஹாம் - வோல்வெர்ஹாம்டன் இடையே நடந்த ஆட்டத்தில் முதல் பாதியில் டோட்டன்ஹாம் அணியின் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடிய வோல்வெர்ஹாம்டன் அணி மூன்று கோல் அடித்து ஆட்டத்தை 1-3 என்ற கணக்கில் வென்றது. அந்த அணியின் போலி ,ஜிமீனேஸ் , ஹெல்டர் கோஸ்டா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

ஏதெரிட்ஜ்
ஏதெரிட்ஜ்

லெய்செஸ்டர் சிட்டி - கார்டிஃப் சிட்டி அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் கார்டிஃப் சிட்டி அணி 0-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. லெய்செஸ்டர் சிட்டி அணி வீரர் மேடிசன் அடித்த பெனால்டியை கார்டிஃப் சிட்டி அணியின் கோல் கீப்பர் ஏதெரிட்ஜ் அபாரமாக தடுத்தார். இன்ஜுரி நேரத்தில் கார்டிஃப் சிட்டி அணியின் காமரசா அணியின் வெற்றிக்கான கோலை அடித்தார்.

(மேலும் படிக்க: 2018இல் கால்பந்து: முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு)

பிரைட்டன் & ஹாவ் ஆல்பியன் எவர்டன் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் பிரைட்டன் & ஹாவ் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது . அந்த அணியின் லூக்காடியா ஆட்டத்தின் ஒரே கோலை அடித்தார்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட மிட்ரோவிச்- கமாரா
வாக்குவாதத்தில் ஈடுபட்ட மிட்ரோவிச்- கமாரா

புல்ஹாம் - ஹட்டர்ஸ்பீல்ட் அணிக்கு இடையே நடந்த ஆட்டத்தில் இன்ஜுரி நேரத்தில் புல்ஹாம் அணியின் மிட்ரோவிச் கோல் அடித்து அவரது அணியை 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற செய்தார். முன்னதாக புல்ஹாம் அணி வீரர் கமாரா அடித்த பெனால்டி ஷாட்டை அபாரமாக தடுத்தார் ஹட்டர்ஸ்பீல் அணியின் கோல் கீப்பர் லாஸ்ஸில். புல்ஹாம் அணியின் மேனேஜர் ரானியேரி, மிட்ரோவிச்சை பெனால்டி ஷாட் எடுக்க சொன்னார் அவரது விருப்பத்திற்கு மாறாக பெனால்டி ஷாட் எடுத்த கமாரா கோல் அடிக்க தவறினார். இதனால் சிறிதுநேரம் புல்ஹாம் அணியின் வீரர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது .

வாட்போர்ட் நியூகேஸ்டெல் யுனைடெட் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

பிர்மின்ஹோ
பிர்மின்ஹோ

இந்த வாரத்தின் 'கேம் ஆப் தி வீக்'என்று கருதப்பட்ட போட்டியில் லிவர்பூல் அணி ஆர்சென்ல் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் துவக்கத்தில் ஆர்சனல் அணி வீரர் மைய்ட்லாண்ட் நீல்ஸ் கோல் அடித்தார். பின்னர் இரு நிமிட இடைவெளியில் லிவர்பூல் வீரர் பிர்மின்ஹோ இரு கோல் அடித்தார். மானே மற்றும் சலாஹ் மேலும் கோல்கள் அடித்து ஆர்சனல் அணியை பந்தாடினர். இரண்டாவது பாதியில் பிர்மின்ஹோ மேலும் ஒரு கோல் அடித்து தனது ஹாட்ட்ரிகை நிறைவுசெய்தார். இதன் மூலம் பிரீமியர் லீக் போட்டிகளில் ஹாட்ட்ரிக் அடித்த மூன்றாவது பிரேசில் வீரர் என்ற பெருமையை பெற்றார் அவர். லிவர்பூல் அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பிரீமியர் லீக் போட்டி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்து 2019 ஆம் ஆண்டில் கால் எடுத்து வைக்கிறது லிவர்பூல் அணி.

கான்டே - டேவிட் லூயிஸ்
கான்டே - டேவிட் லூயிஸ்

ஞாயிற்றுக்கிழமை நான்கு ஆட்டங்கள் நடைபெற்றன. லண்டன் அணிகளான கிரிஸ்டல் பேலஸ்-செல்சி இடையே நடைபெற்ற 'லண்டன் டெர்பி'யில் செல்சி 0-1 அணி என்ற கணக்கில் வெற்றி பெற்றது. செல்சி வீரர் காலோ கான்டே ஆட்டத்தின் ஒரே கோலை அடித்தார்

பர்ன்லி - வெஸ்ட்ஹாம் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் பர்ன்லி அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது

சவுத்ஹாம்டன் -மான்செஸ்டர் சிட்டி அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 1-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது சவுத்ஹாம்டன் அணி சார்பாக ஹோய்பெர்க் ஒரு கோல் அடித்தார். மான்செஸ்டர் சிட்டி அணி சார்பாக டேவிட் சில்வா,செர்ஜியோ ஆக்வேரோ கோல் அடித்தனர்.சவுத்ஹாம்டன் வீரர் வார்ட் பிரௌஸ் ஓன் கோல் அடித்தார்

பால் போக்பா
பால் போக்பா

மான்செஸ்டர் யுனைடெட் - போர்ன்மௌத் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 4-1 கணக்கில் அபார வெற்றி பெற்றது அந்த அணியின் நட்சத்திர வீரர் பால் போக்பா சென்ற வாரத்தை போலவே இந்த வாரமும் கோல் அடித்தார். ராஷ்போர்ட் , லுகாக்கு தலா ஒரு கோல் அடித்தனர். போர்ன்மௌத் அணிக்காக நாதன் அகே ஆறுதல் கோலை அடித்தார்.

பிரீமியர் லீக் புள்ளிகள் பட்டியல்:

https://www.sportskeeda.com/go/epl/standings

ஆட்டங்களின் முடிவு சுருக்கமாக:

பிரைட்டன் & ஹாவ் ஆல்பியன் 1-0 எவர்டன்

புல்ஹாம் 1-0 ஹட்டர்ஸ்பீல்ட்

டோட்டன்ஹாம் 1-3 வோல்வெர்ஹாம்டன்

லெய்செஸ்டர் சிட்டி 0-1 கார்டிஃப் சிட்டி

வாட்போர்ட் 1-1 நியூகேஸ்டெல் யுனைடெட்

லிவர்பூல் 5-1 ஆர்சனல்

கிரிஸ்டல் பேலஸ் 0-1 செல்சி

சவுத்ஹாம்டன் 1-3 மான்செஸ்டர் சிட்டி

பர்ன்லி 2-0 வெஸ்ட்ஹாம்

மான்செஸ்டர் யுனைடெட் 4-1 போர்ன்மௌத்

App download animated image Get the free App now