இந்திய கபடி அணியின் மிகச்சிறந்த கேப்டன் அஜய் தாகூர் 2018, செப்டம்பரில் மிகவும் மதிப்புமிக்க அர்ஜீனா விருது வழங்கப்பட்டது. இந்த விருதானது விளையாட்டில் மிகப்பெரிய சாதனைகளை செய்தவர்களுக்கு இந்திய அரசின் விளையாட்டு அமைச்சகத்தால் வழங்கப்பட்டு கவுரவப்படுத்தப்படுகிறது.
இந்த விருதானது 1961 முதல் தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ₹ 500,000 தொகையும், வெங்கலத்தால் ஆன அர்ஜீனா சிலையுடன் சுருள் போன்று வழங்கப்படும்.
பிண்ணனி
துபாயில் நடந்த கபடி மான்ஸ்டர்ஸ் தொடரில் முன்னணி வீரராக இந்திய அணியில் அஜய் தாகூர் விளையாடினார். இவருக்கு ஏற்கனவே பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
அஜய் தாகூர் முழு நேர விளையாட்டு வீரராக கடந்த 15 ஆண்டுகளாக உள்ளார். 2016 ல் நடந்த கபடி உலகக்கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றியதுடன் சிறந்த டாப்-கிளாஸ் ரெய்டர் என்ற பட்டத்தையும் பெற்றார்.
அஜய் தாகூர் செய்துள்ள சாதனைகளுக்கு பல பதக்கங்களை வென்று குவித்துள்ளார். இவர் 2013ல் நடந்த ஆசிய உள்ளரங்க விளையாட்டிலும், மார்ஷீயல் ஆர்ட்ஸ் விளையாட்டு தொடரிலும் பதக்கங்களை வென்றுள்ளார். 2007ல் நடந்த ஆசிய உள்ளரங்க விளையாட்டு தொடர், 2014ல் நடந்த ஆசிய விளையாட்டுத் தொடர் மற்றும் 2017ல் நடந்த ஆசிய கபடி சேம்பியன் ஷீப் தொடர் ஆகியவற்றில் பதக்கங்களை வென்றுள்ளார்.
கதைக்கரு
அஜய் தாகூர் ப்ரோ கபடி லீக்கில் தற்போது தமிழ் தலைவாஸ் அணியை வழிநடத்தி இன்றைய நாள் வரை 787 புள்ளிகளை பெற்றுள்ளார். ப்ரோ கபடி லீக் தொடரின் ஆரம்ப சீசனிலிருந்து விளையாடி வரும் டாப் கிளாஸ் ரெய்டர் அஜய் தாகூர் முதல் சீசனில் பெங்களூரு புல்ஸ் அணிக்காக களம் கண்டார்.
ஆகஸ்ட் 18 அன்று போட்டியின் முடிவில் பத்திரிகையாளர்கள் உங்களுக்கு வழங்கப்பட உள்ள அர்ஜீனா விருது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் கூறியதாவது,
"உண்மையாகவா..?, எனக்கு இதுவரை தெரியாது. நான் காலையிலிருந்து மாலை 4 மணி வரை என்னுடைய கைப்பேசியில் அர்ஜீனா விருதுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டதா என்று தேடி பார்த்தேன். எனக்கு எந்த தகவலும் தெரியவில்லை. நான் தற்போது சென்று தேடிப் பார்கிறேன்! என கூறியுள்ளார்.
ஒரு மிகப்பெரிய விருதினை பெற அஜய் தாகூர் முழுவதும் தகுதியானவர் ஆவார். தன்னுடைய கபடி விளையாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் அஜய் தாகூர். விளையாட்டின் மீது மட்டுமே முழு கவனத்தையும் ஆட்டம் முடியும் வரை வைத்து விளையாடுவார். இவருடன் விளையாடும் இளம் வீரர்களுக்கு தகுந்த உத்வேகத்தை அளித்து அவர்களை முன்னேற்றுவதில் முக்கிய பங்குவகிக்கிறார்.
'இறப்பை பற்றி ஒரு போதும் நினைக்காதே" என்ற அனுகுமுறைய கொண்ட அஜய் தாகூர் ஆரம்ப காலங்களில் இந்திய கடற்படையில் இருந்தார். அத்துடன் ஹீமாச்சல் பிரதேசத்தின் துனை போலிஸ் சூப்பிரண்டாகவும் பதவி வகித்துள்ளார் அஜய் தாகூர்.
அடுத்தது என்ன?
அஜய் தாகூர் தற்போது 7வது ப்ரோ கபடி சீசனில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக விளையாடிக் கொண்டுள்ளார். இத்தொடர் ஜீலை 20 தொடங்கி அக்டோபர் 19 வரை நடைபெறுகிறது.