"பயிற்சியாளர் என்னை முழுமையாக நம்பி, அதிக நம்பிக்கை அளித்ததால் மட்டுமே என்னால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த‌ முடிந்தது" கூறுகிறார் தமிழ் தலைவாஸ் அஜீத் குமார்

V Ajithkumar
V Ajithkumar

ப்ரோ கபடியின் 7வது சீசனில் சொந்த மண்ணில் புனேரி பல்தான்ஸ் அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் அணியின் இரண்டாவது போட்டியில் 31-31 என்ற புள்ளிகளைப் பெற்று நூலிழையில் டிரா ஆனது‌.

இப்போட்டி புனேரி பல்தான்ஸ் அணிக்கு சாதகமாக 31-30 என கடைசி 30 நொடிகளுக்கு முன்பு வரை இருந்தது. ஆனால் கடைசியாக மன்ஜீத் ரெய்ட் சென்ற போது தமிழ் தலைவாஸ் அணியால் டேக்கல் செய்யப்பட்டு போட்டி சமனில் முடிந்தது.

இப்போட்டியின் ஆட்டநாயகன் தமிழ் தலைவாஸ் அணியின் ரெய்டர் வி. அஜீத் குமார். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஒரு கட்டத்தில் தமிழ் தலைவாஸ் ஆல்-அவுட் ஆகி போட்டியை கோட்டை விடும் தருவாயில் இருந்தபோது அஜீத் குமார் கடைசி வீரராக ரெய்ட் சென்று 4 புள்ளிகளை பெற்று தன் அணியை பெரும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்டெடுத்தார். இவர் கடைசி ரெய்டராக 2 நிமிடங்கள் மீதமிருந்த போது சென்றார். அஜீத்குமாரின் சூப்பர் ரெய்டால் 29-29 என புள்ளிகள் மாறியது.

போட்டி முடிவில் அஜீத் குமார் கூறியதாவது,

"சொந்த மண்ணில் நான் சிறப்பான வெற்றியைப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அணியின் பயிற்சியாளர் என்னை முழுவதுமாக இன்று நம்பினார், அத்துடன் முழு நம்பிக்கையை எனக்கு அளித்தார். பயிற்சியாளர் நான் ரெய்ட் செல்வதற்கு முன்பாக, நான் எவ்வாறு விளையாடினால் சிறப்பான முடிவை பெற முடியும் என ஏற்கனவே என்னிடம் அறிவுறுத்தினார்".

தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் இ.பாஸ்கரன் இப்போட்டி ஒருகட்டத்தில் தோல்வியில் முடிவடையும் தருவாயில் இருந்த போது, சமனில் முடிந்ததை கண்டு ஒரு புதுவித நம்பிக்கை அணிக்கு கிடைத்துள்ளதாக காண்கிறார்.

"இப்போட்டியின் முடிவு அணிக்கு புதுவித நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கபடியில் கம்-பேக் அளிப்பது சாதாரண நிகழ்வல்ல. அஜித் குமார் மீண்டும் தமிழ் தலைவாஸை போட்டிக்கு எடுத்து வந்தார்" என பாஸ்கரன் தெரவித்துள்ளார்.

ராகுல் சௌத்ரி போட்டியின் ஆரம்பத்தில் சில சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் பாதியில் 5 அதிவேக ரெய்ட் புள்ளிகளை பெற்றார். ஆகஸ்ட் 17 அன்று பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராகுல் சௌத்ரி செய்த தவற்றை இப்போட்டியில் திருத்திக்கொண்டார்.

சனிக்கிழமை நடந்த போட்டியில் ராகுல் சௌத்ரி தடுமாற்றத்தை வெளிபடுத்தியதால் ஆட்டத்தின் பாதியிலேயே வெளியே அமர வைத்தேன். ஆனால் புனேரி பல்தான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது இயல்பான ஆட்டத்திற்கு திரும்புவேன் என என்னிடம் தெரிவித்திருந்தார். அதிரடி தொடக்கத்தை அளிக்க போவதாகவும் கூறினார். இவர் கூறியதுபோலவே செய்து காட்டி, தமிழ் தலைவாஸ் அணியை ஆரம்ப சரிவிலிருந்து மீட்டெடுத்தார்." எனக் கூறினார் பாஸ்கரன்

ராகுல் சௌத்ரி இப்போட்டியை பற்றி கூறியதாவது, "நான் என்னுடைய முழு சிறந்த ஆட்டத்திறனையும் வெளிபடுத்த தவறிவிட்டேன். நான் மட்டும் கடைநிலையில் இரு டேக்கல் புள்ளிகளை எதிரணிக்கு அளிக்காமல் இருந்தால் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றிருக்கும். எனவே நான் தற்போதைய ஆட்டத்தை விட மேன்மேலும் மேம்பட வேண்டும்."

Anup kumar
Anup kumar

புனே பயிற்சியாளர் அனுப் குமார், இப்போட்டியின் முடிவு வருத்தமளிக்கிறது எனக் கூறுகிறார். மிகவும் நெருக்கடியில் சென்ற இப்போட்டியில் புனேரி பல்தான்ஸ் செய்த சில தவறுகள் அனுப் குமாரை கோபமடையச் செய்தது.

"இப்போட்டியின் முடிவு எனக்கு வருத்தமளிக்கிறது. இரண்டாவது ஆல்-அவுட் புனேரி பல்தான்ஸ் நிகழ்த்தியிருந்தால் கண்டிப்பாக வென்றிருப்போம்". என கூறுகிறார் அனுப் குமார்.

இந்த போட்டியில் புனே கேப்டன் சுர்ஜீத் சிங் 7 டேக்கல் புள்ளிகளை பெற்றார். அனைத்து போட்டிகளிலும் இதே போன்ற ஆட்டத்திறனை இவர் வெளிபடுத்த வேண்டும் என புனேரி பல்தான்ஸ் பயிற்சியாளர் விரும்புகிறார்.

போட்டியின் கடைசி சில நிமிடங்களைப் பற்றி அனுப் குமார் கூறியதாவது, "நாங்கள் செய்த ஒரு சிறு தவறு ஆட்டத்தின் போக்கையே இறுதியில் மாற்றியது. இப்போட்டியில் நாங்கள் வெளிபடுத்திய அனைத்து சிறப்பான ஆட்டத்தையும் இது பாழாக்கியது".

Quick Links

App download animated image Get the free App now