பட்டிக்காடு முதல் பட்டினம் வரை இணைக்கும் ஒரே ஒரு விளையாட்டு என்றால் அது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி ஆகும். இத்தகைய விளையாட்டிற்கு அதிக மதிப்பளிக்கும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் "ப்ரோ கபடி லீக்" என நடைபெற்று வருகிறது. இத்தொடரில் உலகின் பல்வேறு கிராம மற்றும் நகர்ப்புற கபடி வீரர்கள் இடம்பெற்று தங்களது ஆட்டத்திறனிற்கேற்ப ஊதியத் தொகையை பெறுகின்றனர்.
தற்போது தமிழ் தலைவாஸ் அணியில் விளையாடி வரும் "மன்ஜீட் சில்லர்" 2017ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் பின்க் பாந்தர் அணியால் 75.5 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரு புதிய வரலாற்றை ப்ரோ கபடி லீக்கில் படைத்தார்.
மன்ஜீட் சில்லர் ஒரு குக்கிராமத்தில் பிறந்து தனது கடின உழைப்பால் இந்திய கபடி அணியில் விளையாடி வருகிறார். மன்ஜீட் சில்லர் சமீபத்தில் நடந்த நேர்காணலில் கூறியதாவது,
"கபடி வீரர்கள் தங்களின் ஆட்டத்திற்கு தகுதியான தொகைக்கு ப்ரோ கபடி லீக்கில் ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். இதனை காணும்போது மிகவும் அற்புத வளர்ச்சியை கபடி எட்டியுள்ளதாக நான் உணர்கிறேன். ஆரம்பத்தில் ஒரு கபடி அணியின் முழு பட்ஜெட் 2-3 கோடி மட்டுமே. ஆனால் தற்போது ஒரு வீரருக்கே 1 கோடிக்கு மேல் வழங்கும் வகையில் பன்மடங்கு ப்ரோ கபடி லீக் வளர்ச்சி பெற்றுள்ளது. கபடி தற்போது கிரிக்கெட் விளையாட்டுடன் கடும் போட்டி போடுகிறது. நீங்கள் கபடியை சரியாக பின்தொடர்ந்தால் அதன்பின் அதிலிருந்து மீண்டு வர இயலாது. அவ்வளவு சுறுசுறுப்பான விளையாட்டு கபடி. இதுவே விளையாட்டின் இயற்கை. ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் கபடியை கண்டால் வீரர்களுக்கு உத்வேகம் அதிகமாகி மேன் மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார்கள். மேலும் ப்ரோ கபடி தொடர் ஒரு நீண்டதாக இருப்பதால் வீரர்கள் தங்களது உடற்தகுதியை கட்டுக்கோப்பில் வைக்க பல பயிற்சிகளை மேற்கொள்வார்கள். தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நாட்களிலும் பயிற்சியை மேற்கொள்ள வீரர்கள் தவறுவதில்லை. ப்ரோ கபடி லீக்கில் கோப்பையை கைப்பற்ற கடும் போட்டி நிலவும்"
இந்திய கபடி அணியின் ஆல்-ரவுண்டர் மன்ஜீட் சில்லர் ப்ரோ கபடி லீக்கின் ஆரம்ப சீசனிலிருந்து விளையாடி வருகிறார். இவர் முதல் சீசனில் "பெங்களூரு புல்ஸ்" அணிக்காக விளையாடினார். அடுத்த இரு சீசனில் "புனேரி பல்தான்ஸ்" அணிக்காக பங்கேற்றார். அதன்பின் 2017ல் பின்க் பந்தர்ஸ் அணிக்காக விளையாடினார். அடுத்ததாக 2018ல் 20 லட்சத்திற்கும் தமிழ் தலைவாஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்போது வரை இதே அணியில் விளையாடி வருகிறார்.
6 லீக் போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் தற்போது புள்ளிபட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. மன்ஜீட் சில்லர் இந்த அணியில் சேர்ந்தபின் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தி வருகிறார்.
"கபடியில் வீரர்களின் கூட்டு முயற்சி மிக முக்கியம். ஆரம்பத்தில் சில இடங்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல புள்ளிகளை எதிரணிக்கு அளித்து வந்தோம். அதன்பின் எங்களது குறைகளை நாங்கள் கழைந்து கூட்டு முயற்சியால் வெற்றி பெற்றோம். தமிழ் தலைவாஸ் அணி சிறந்த வீரர்கள் கொண்ட கலவையாக உருவெடுத்துள்ளது. சில வீரர்கள் உள்ளூர் தொடர்களில் சரியான பயிற்சியை மேற்கொண்டு அதிகம் மேம்பட்டு உள்ளனர். ராகுல் சௌத்ரி சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ளார்." என கூறுகிறார் முன்னாள் ஆட்டநாயகன் ராகுல் சில்லர்.