தனது சொந்த மண்ணில் நடந்த முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவிய தமிழ் தலைவாஸ்

Courtesy: Pro Kabaddi/Twitter
Courtesy: Pro Kabaddi/Twitter

7வது ப்ரோ கபடி லீக் சீசனில் தமிழ் தலைவாஸ் அணி தனது சொந்த மண்ணில் முன்னாள் சேம்பியன் பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொண்டது. தமிழ் தலைவாஸ் தான் விளையாடிய கடைசி போட்டியில் வெற்றி பெற்றதால் அந்த நம்பிக்கையுடனும் சொந்த ஊர் ரசிகர்களின் பேராதரவுடனும் களம் கண்டது.

மறுமுனையில் பெங்களூரு புல்ஸ் அணி இந்த சீசனில் தான் விளையாடிய கடைசி இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருந்தது. பவான் செராவத் அனைத்து போட்டிகளிலும் தனது இயல்பான மற்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுவதில்லை. தென்னிந்தியாவில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30ற்கு தொடங்ககியது.

ஆரம்ப 7

தமிழ் தலைவாஸ்: அஜய் தாகூர், ராகுல் சௌத்ரி, சபீர் பாபு, அஜீட், மோகித் சில்லர், மன்ஜீத் சில்லர், ரன் சிங்.

பெங்களூரு புல்ஸ்: ரோகித் குமார், பவான் குமார் செராவத், விஜய் குமார், சௌரப் நடால், அஜய், அமீத் செரோன், அன்கித்.

டாஸ் வென்ற தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸை ரெய்ட் வர பணித்தது.

இளம் வீரர் பவான் செராவத் பெங்களூரு புல்ஸ் அணியிலிருந்து முதல் ரெய்டராக வந்து சிறப்பாக ஒரு புள்ளியுடன் சென்றார். பச்சை நிற பட்டைக்கு சொந்த காரரான இவர் 2019 ப்ரோ கபடி லீக்கில் 87 புள்ளிகளை பெற்று டாப் ரெய்டராக திகழ்கிறார்.

ஓடிய வாக்கிலே மோகித் சில்லரை தொட்டு பெங்களூரு புல்ஸ் அணிக்காக புள்ளிகளை பெற்றார் பவன் செராவத். தமிழ் தலைவாஸின் நம்பிக்கை நட்சத்திரம் அஜய் தாகூரை பிடித்து பெங்களூரு புல்ஸ் முதல் டேக்கல் புள்ளிகளை பெற்றது. தேவையில்லாமல் எதிரணி வீரரை பிடிக்க முயன்று வெளியேற்றப்பட்டார் ராகுல் சௌத்ரி.

Ajay Takir
Ajay Takir

முதல் 6 நிமிட முடிவில் மன்ஜீத் சில்லர்-ஐ தவிர மற்ற அனைவரும் தமிழ் தலைவாஸ் அணியிலிந்து வெளியேற்றப்பட்டனர். 7வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணி ஆல்-அவுட் ஆகி 1-10 என ஒன்பது புள்ளிகள் பின்தங்கிய நிலையில் இருந்தது. மன்ஜீத் சில்லர் தன் அணிக்காக தான் சென்ற இந்த ரெய்டில் ஒரு போனஸ் புள்ளியை பெற்று முதல் புள்ளியை பெற்றுத் தந்தார்.

பவான்-ஐ அருமையாக டேக்கல் செய்து தனது முதல் டேக்கல் புள்ளியை இப்போட்டியில் பெற்றது தமிழ் தலைவாஸ். மண்ணின் மைந்தர்களான தமிழ் தலைவாஸ் மீட்டெழ முயற்ச்சிக்கும் வகையில் சில புள்ளிகளை வென்றது. சபீர் பாபு இரு புள்ளிகளை ஒரே ரெய்டில் பெற்று பெங்களூரு புல்ஸ் அணியின் புள்ளி வித்தியாசத்தை 6ஆக மாற்றினார்.

முதல் பாதி ஆட்டத்தில் 16-10 என அதிக புள்ளிகளை குவிக்கப்பட்ட முதல் பாதி ஆட்டமாக அமைந்து பெங்களூரு புல்ஸ் அணிக்கு சாதகமாக இருந்தது. இரண்டாவது பாதியில் அஜீத் தமிழ் தலைவாஸ் அணிக்காக மாற்று வீரராக களம் கண்டு சில புள்ளிகளைப் பெற்றார். தமிழ் தலைவாஸ் மெதுவாக புள்ளிகளை ஆரம்பித்திருந்தாலும் சிறந்த கம்-பேக் அளித்தது‌. 25வது நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் தனக்கு அளிக்கப்பட்ட ஒரு மேல்மூறையீட்டை செய்தது. ஆனால் அது தவறாக அமைந்தது‌.

Rahul chaudry
Rahul chaudry

பவான் செராவத் மிகவும் எளிமையாக மன்ஜீத் சில்லரை வீழ்த்தி ஆட்டத்தை பெங்களூரு வசம் மாற்றும் முயற்சியில் இறங்கினார். ஆரம்பத்தில் சொதப்பிய ரன் சிங், கடைசி நிமிடங்களில் பெங்களூரு புல்ஸ் அணிக்கு சவால் அளிக்கும் வகையில் ரோகித் குமாரை டிபென்ஸ் செய்து அசத்தினார். இதற்காக மேல்முறையீடு செய்தது பெங்களூரு புல்ஸ். ஆனால் அது தவறாக அமைந்தது.

இந்தக்கட்டத்தில் பெங்களூரு புல்ஸ் ஆல்-அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்த்தபோது. பெங்களூரு புல்ஸ் அணியில் இருந்த இரு வீரர்களால் அஜய் தாகூர் பிடிபட்டு சூப்பர் டேக்கலாக இரு புள்ளிகளை பெங்களூரு அணிக்கு வாரி இறைத்தார். அஜய் தாகூர் பிடிவீரர்களிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்தும் பலனில்லாமல் போனது. அதன் பின்னர் அன்கித் ரெய்ட் சென்று சிறப்பாக இரு புள்ளிகளை பெற்று ரோகித் மற்றும் பவானை உள்ளே அழைத்து வந்தார்.

சௌரப் நடால் தனது அறிமுக சீசனில் இரண்டாவது ஹ-பைவ் புள்ளிகளை பெற்று அசத்தினார். இப்போட்டியில் மன்ஜீத் சில்லர் ஒரு டேக்கல் புள்ளிகளை கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தலைவாஸ் இப்போட்டியில் மீண்டுமொருமுறை ஆல்-அவுட் ஆகி பெங்களூரு புல்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பை உறுதிபடுத்தியது‌. பவான் தொடர்சியாக 5வது சூப்பர் 10ஐ பெற்றார். இப்போட்டியில் பெங்களூரு புல்ஸ் 20-31 என வெற்றி பெற முண்ணனி காரணமாக பவான் திகழ்ந்தார்.

இப்போட்டியில் குறிப்பாக பவான் மற்றும் சௌரப் நடால் தங்கள் அணியின் வெற்றிக்கு அதிகமாக உழைத்தனர். பெங்களூரு அணியில் உள்ள சில வீரர்களுக்கு அதிக பயிற்சி அவசியமானதாகும்.

சொந்த மண்ணில் தமிழ் தலைவாஸிற்கு ஒரு எதிர்பாராத தோல்வியாகும். ராகுல் சௌத்ரி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே வெளியே உட்கார வைக்கப்பட்டு மாற்று வீரரை பயிற்சியாளர் களமிறக்கியது வழக்கத்திற்கு மாறானதாகும். இந்த முடிவு கூட தமிழ் தலைவாஸ் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்திருக்கலாம்.

Quick Links

Edited by Fambeat Tamil