பவான் செராவத் மிகவும் எளிமையாக மன்ஜீத் சில்லரை வீழ்த்தி ஆட்டத்தை பெங்களூரு வசம் மாற்றும் முயற்சியில் இறங்கினார். ஆரம்பத்தில் சொதப்பிய ரன் சிங், கடைசி நிமிடங்களில் பெங்களூரு புல்ஸ் அணிக்கு சவால் அளிக்கும் வகையில் ரோகித் குமாரை டிபென்ஸ் செய்து அசத்தினார். இதற்காக மேல்முறையீடு செய்தது பெங்களூரு புல்ஸ். ஆனால் அது தவறாக அமைந்தது.
இந்தக்கட்டத்தில் பெங்களூரு புல்ஸ் ஆல்-அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்த்தபோது. பெங்களூரு புல்ஸ் அணியில் இருந்த இரு வீரர்களால் அஜய் தாகூர் பிடிபட்டு சூப்பர் டேக்கலாக இரு புள்ளிகளை பெங்களூரு அணிக்கு வாரி இறைத்தார். அஜய் தாகூர் பிடிவீரர்களிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்தும் பலனில்லாமல் போனது. அதன் பின்னர் அன்கித் ரெய்ட் சென்று சிறப்பாக இரு புள்ளிகளை பெற்று ரோகித் மற்றும் பவானை உள்ளே அழைத்து வந்தார்.
சௌரப் நடால் தனது அறிமுக சீசனில் இரண்டாவது ஹ-பைவ் புள்ளிகளை பெற்று அசத்தினார். இப்போட்டியில் மன்ஜீத் சில்லர் ஒரு டேக்கல் புள்ளிகளை கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தலைவாஸ் இப்போட்டியில் மீண்டுமொருமுறை ஆல்-அவுட் ஆகி பெங்களூரு புல்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பை உறுதிபடுத்தியது. பவான் தொடர்சியாக 5வது சூப்பர் 10ஐ பெற்றார். இப்போட்டியில் பெங்களூரு புல்ஸ் 20-31 என வெற்றி பெற முண்ணனி காரணமாக பவான் திகழ்ந்தார்.
இப்போட்டியில் குறிப்பாக பவான் மற்றும் சௌரப் நடால் தங்கள் அணியின் வெற்றிக்கு அதிகமாக உழைத்தனர். பெங்களூரு அணியில் உள்ள சில வீரர்களுக்கு அதிக பயிற்சி அவசியமானதாகும்.
சொந்த மண்ணில் தமிழ் தலைவாஸிற்கு ஒரு எதிர்பாராத தோல்வியாகும். ராகுல் சௌத்ரி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே வெளியே உட்கார வைக்கப்பட்டு மாற்று வீரரை பயிற்சியாளர் களமிறக்கியது வழக்கத்திற்கு மாறானதாகும். இந்த முடிவு கூட தமிழ் தலைவாஸ் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்திருக்கலாம்.