ப்ரோ கபடி 7வது சீசனில் ஆகஸ்ட் 1 அன்று பெங்களூருவில் உள்ள ஶ்ரீ கந்தீரீவா களத்தில் ஆட்டம் 70ல் பெங்களூரு புல்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோத உள்ளன.
பெங்களூரு புல்ஸ் தனது சொந்த களத்தில் குஜராத் ஃபார்ட்யுன் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 23-32 என்ற கணக்கில் தோல்வியை தழுவியதால் இப்போட்டியில் வென்று மீண்டும் வெற்றிபாதைக்கு திரும்பும் முயற்சியில் இறங்கும். தமிழ் தலைவாஸ் அணியும் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 32-21 என தோல்வியை சந்தித்துள்ளது.
அணி செய்திகள்
பெங்களூரு புல்ஸ்
பெங்களூரு புலஸ் அணி கடைசியாக விளையாடிய போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ஏமாற்றியது. இந்த அணியின் நட்சத்திர ரெய்டர்களான பவன் செராவத் மற்றும் ரோகித் குமார் மொத்தமாக 3 ரெய்ட் புள்ளிகளை மட்டுமே வென்றனர். ஆரம்ப 7ல் இடம்பெறாத சுமித் சிங் 3 ரெய்ட் புள்ளிகளை பெற்றார். கடந்த போட்டியில் ஆரம்ப 7ல் இடம் பெற்றிருந்த பண்டி மீண்டும் சொதப்பி வந்தால் சுமித் சிங் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
கடந்த போட்டியில் டிபென்ஸீல் தலைசிறந்து விளங்கியது பெங்களூரு புல்ஸ். சௌரப் நந்தல் 8 டேகல் புள்ளிகளையும், மஹேந்தர் சிங் 4 டேக்கல் புள்ளிகளையும் கடந்த போட்டியில் வென்று அசத்தினர். வலது மூலையில் மோஹீத் செராவத் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே அந்த இடத்திலிருந்து அவரை மாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது.
உத்தேச ஆரம்ப 7:
ரோகித் குமார் (கேப்டன்), பவான் ஷேராவத், மோஹீத் ஷேராவத், மஹேந்தர் சிங், அமீத் செரோன், பன்டி/சுமித் சிங், சௌரப் நந்தல்.
தமிழ் தலைவாஸ்
தமிழ் தலைவாஸின் நட்சத்திர டிபென்டர் மன்ஜீத் சில்லர் காலத்திலிருந்து மீண்டு களத்திற்கு திரும்பினாலும் மற்ற டிபென்டர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். வலதுபுற மூலையில் இளம் அஜீட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் மற்ற இரு மூலைகளிலும் டிபென்டராக இருக்கும் ரன் சிங் மற்றும் மோஹீத் சில்லர் சொதப்பி வருகின்றனர்.
ரெய்டர்கள் பற்றி பார்க்கும் போது கடந்த போட்டியில் ராகுல் சௌத்ரி 11 புள்ளிகளை வென்று அசத்தினார். ராகுல் சௌத்ரி 3 புள்ளிகளை மட்டுமே எடுத்து ஏமாற்றினார். எனவே இவருக்கு மாற்று வீரரை அணி நிர்வாகம் களமிறக்க நினைத்தால் V அஜீத் குமாரை களம் காண வைக்கும். கடந்த போட்டியில் களம் கண்ட சபீர் பாபு 4 புள்ளிகளை குவித்தார். குஜராத் ஃபார்டயுன் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் தமிழ் தலைவாஸ் மீண்டுமொருமுறை களம் காண வாய்ப்புகள் உள்ளது.
உத்தேச ஆரம்ப 7:
அஜய் தாகூர் (கேப்டன்), ராகுல் சௌத்ரி, ரன் சிங், மோஹீத் சில்லர், மன்ஜீத் சில்லர், அஜீட், சபீர் பாபு.
கற்பனை கலப்பு 7:
பவான் ஷேராவத் (துனைக்கேப்டன்), மோஹீத் ஷேராவத், அஜய் தாகூர் (கேப்டன்), ரோகித் குமார், மஹேந்தர் சிங், ரன் சிங், அஜீட்