ப்ரோ கபடி 2019, ஆட்டம் 64: தமிழ் தலைவாஸ் vs பெங்கால் வாரியர்ஸ், முன்னோட்டம், உத்தேச‌ ஆரம்ப 7

Tamil Thalivas vs Bengal Warriors
Tamil Thalivas vs Bengal Warriors

கடந்த 4 போட்டிகளில் வெற்றியை காணாத தமிழ் தலைவாஸ் ப்ரோ கபடி 7வது சீசனின் ஆட்டம் 64ல் பெங்கால் டைகர்ஸை எதிர்கொள்கிறது.

பெங்கால் வாரியர்ஸ் தற்போது 10 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றியும், 2ல் ட்ராவும் அடைந்து புள்ளிபட்டியில் 4வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தமிழ் தலைவாஸை வீழ்த்தினால் இரண்டாவது இடத்தை பெங்கால் வாரியர்ஸ் பிடிக்கும்.

மனீந்தர் சிங் சிறு இடைவெளியில் தனது அணிக்காக புள்ளிகளை வென்று அணி கரையேற உதவுகிறார். கே பிரபஞ்ஜனின் அற்புதமான ரெய்ட் மற்றும் நுணுக்கமான ஓட்டம் போன்றன மூலம் பெங்கால் வாரியர்ஸ் ரெய்டில் தலைசிறந்து விளங்குகிறது. இந்த சீசனில் அதிக ரெய்ட் புள்ளிகளை குவித்ததில் டாப் 10 இடங்களில் மனீந்தர் சிங் (83) மற்றும் கே பிரபஞ்ஜன் (65) உள்ளனர்.

மேலும் பெங்கால் வாரியர் அணியில் ஜீவா குமார் மற்றும் எஸ்மாயில் நபிபக்ஷ் ஆகியோர் டிபென்ஸீல் அணிக்கு பக்கபலமாக உள்ளனர். எனினும் இந்த அணியின் மூலையில் விளையாடும் வீரர்கள் சற்று தடுமாற்றத்தை கடந்த போட்டியில் சந்தித்தால் 1 புள்ளி வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இருப்பினும் இந்த அணியின் வீரர்கள் தங்களது தவற்றை திருத்திக் கொண்டு மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் திறன் கொண்ட வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்கால் வாரியர்ஸ் ஆட்ட முடிவு: வெற்றி, தோல்வி, வெற்றி, தோல்வி, வெற்றி, டிரா, வெற்றி, டிரா, வெற்றி, தோல்வி


தமிழ் தலைவாஸ் ஒரு சிறந்த வீரர்களைக் கொண்ட அணியாக திகழ்கிறது. மேலும் அதிகபடியான அனுபவ வீரர்களைக் கொண்ட அணியாகவும் உள்ள அணி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் பொறுப்பேற்று விளையாட வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் அசத்திய வீரர்களை கொண்ட தமிழ் தலைவாஸ் இந்த சீசனில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.

ராகுல் சௌத்ரி, அஜய் தாகூர் மற்றும் சபீர் பாபு போன்ற கபடி ஜாம்பவான்களைக் கொண்ட தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

கடந்த சீசனின் நாயகன் மோஹீத் சில்லர் இந்த சீசனில் சாதரணமாக வீழ்த்தப்படுகிறார். இடது மூலையில் ரன் சிங் சில புள்ளிகளை அணிக்காக பெறுகிறார். பவர் ஃபுல் அணியான பெங்கால் வாரியர்ஸை வீழ்த்த இவரது உதவி கண்டிப்பாக தமிழ் தலைவாஸிற்குத் தேவை‌.

மன்ஜீத் சில்லர் காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறிய பிறகு அந்த அணி ஒரு போட்டியில் கூட வெற்றியை ருசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில போட்டிகளின் நுனியில் தமிழ் தலைவாஸ் தோற்ற ஆட்டத்தில் இவர் இருந்திருந்தால் போட்டி முடிவு மாற வாய்ப்பிருந்திருக்கும். ஒட்டுமொத்தமாக தமிழ் தலைவாஸ் மிகவும் வலிமையான அணி. ஆனால் அவர்களிடமிருந்து அந்த சிறப்பான ஆட்டம் இதுவரை வெளிவரவில்லை.

தமிழ் தலைவாஸ் ஆட்ட முடிவு: வெற்றி, தோல்வி, தோல்வி, வெற்றி, டிரா, வெற்றி, தோல்வி, டிரா, தோல்வி, தோல்வி


ஆரம்ப 7

பெங்கால் வாரியர்ஸ்: K பிரபஞ்ஜன், மனீந்தர் சிங் (கேப்டன்), எஸ்மாயில் நபிபக்ஷ், விராஜ் லேண்ட்ஜ், ரின்கு நர்வால், பல்தேவ் சிங்

தமிழ் தலைவாஸ்: ராகுல் சௌத்ரி, அஜய் தாகூர் (கேப்டன்), V அஜீத் குமார், அஜீட், வினித் சர்மா, ரன் சிங், மோஹீத் சில்லர்.

Quick Links

Edited by Fambeat Tamil