தமிழ் தலைவாஸ் அணி தனது சொந்த மண்ணில் நடைபெறும் முதல் போட்டியில் அண்டை மாநில அணியான பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டியானது நேரு மைதானத்தில் ஆகஸ்ட் 17 அன்று இந்திய நேரப்படி 07:30 அன்று தொடங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் நடிகர் நிதின் ஜாம்வால் சிறப்பு விருந்தினர்களாக இப்போட்டிக்கு வருகை தர உள்ளனர்.
தமிழ் தலைவாஸ் தனது கடந்த போட்டியில் குஜராத் ஃபார்டியுன் ஜெயன்ட்ஸ் அணியை 34-28 என வீழ்த்தியதன் மூலம் புள்ளிபட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
இதற்கிடையில் பெங்களூரு புல்ஸ் தனது கடந்த போட்டியில் 33-35 என நூலிழையில் வெற்றியை யுபி யோதா அணியிடம் தவறவிட்டு புள்ளிபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
தென்பகுதியில் நடைபெறும் இந்தப்போட்டியானது ராகுல் சௌத்ரி மற்றும் பவான் செராவத் ஆகியோருக்கு மிகவும் ஸ்பெஷலான போட்டியாகும்.
தமிழ் தலைவாஸ் - அணித் தகவல்
குஜராத் அணியுடனான கடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் களத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தியது. இப்போட்டியில் அஜய் தாகூர் மீண்டும் தனது பழைய ஆட்டத்திற்கு திரும்பி 9 புள்ளிகளை பெற்றார், அதே சமயத்தில் ராகுல் சௌத்ரி 4 ரெய்ட் புள்ளிகளை மட்டுமே பெற்று ஏமாற்றமளித்தார். சபீர் பப்பு 3 புள்ளிகளை பெற்று ஓரளவு ஆட்டத்தை வெளிபடுத்தினார். எனவே இவர்கள் மூவரும் அணியில் தங்களது இடத்தை உறுதி படுத்திக் கொள்வார்கள்.
அஜீட் டிபென்ஸில் இரு பக்கங்களிலும் தடுமாறி வருகிறார். மன்ஜீட் சில்லர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அணியில் மாற்றமிருக்க வாய்ப்பில்லை.
உத்தேச ஆரம்ப 7:
அஜய் தாகூர் (கேப்டன்), ராகுல் சௌத்ரி, சபீர் பப்பு, ரன் சிங், மோஹீத் சில்லர், மன்ஜீட் சில்லர், மற்றும் அஜீட்.
பெங்களூரு புல்ஸ் - அணித் தகவல்கள்
பெங்களூரு புல்ஸ் அணி யுபி யோதாவிற்கு இறுதிகட்டத்தில் அதிக புள்ளிகளை வாரி இறைத்து விட்டது. இதற்கு முண்ணனி காரணம் பெங்களூரு அணியின் மோசமான டிபென்ஸ். மோஹீத் செராவத் வலதுபுற மூலையிலும், அமன் இடதுபுற மூலையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டனர்.எனவே தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோஹீத் செராவத்-ற்கு பதிலாக ஆஸீஸ் சங்வான்-வும், அமன்-ற்கு பதிலாக அமீத் செரோன்-வும் களம் காண்பார்கள் என நம்பப்படுகிறது.
கடந்த போட்டியில் பவான் செராவத் 12 ரெய்ட் புள்ளிகள் மற்றும் 3 டேக்கல் புள்ளிகளை பெற்று அசத்தினார். சுமீத் சிங் மற்றும் ரோகித் குமார் முறையே 5 மற்றும் 4 புள்ளிகளை பெற்று அணியில் தங்களது இடங்களை உறுதி படுத்திக் கொண்டனர்.
உத்தேச ஆரம்ப 7:
ரோகித் குமார் (கேப்டன்), பவான் செராவத், ஆஸீஸ் சங்வான், மஹீந்தர் சிங், அமீத் செரான், சுமீத் சிங் மற்றும் சௌரப் நடால்.
கனவு கலப்பு 7 யுக்திகள் :
கலப்பு
பரிந்துரை 1: பவன் செராவத், ராகுல் சௌத்ரி, சௌரப் நடால், மோஹீத் சில்லர், மன்ஜீத் சில்லர், அமீத் செரோன் மற்றும் சபீர் பப்பு
கேப்டன்: ராகுல் சௌத்ரி துனைக்கேப்டன்: மன்ஜீத் சில்லர்
கலப்பு பரிந்துரை 2: பவான் செராவத், அஜய் தாகூர், மஹீந்தர் சிங், சுமீத் சிங், மோஹீத் சில்லர், ரன் சிங், சௌரப் நடால்.
கேப்டன்: பவன் செராவத் துனைக்கேப்டன்: அஜய் தாகூர்.