ஒவ்வொரு அணியும் தனது சொந்த களத்தில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த விரும்பும். ஆனால் தமிழ் தலைவாஸ் தனது சொந்த களத்தில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்களது ரசிகர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றத்தை அளித்து வருகிறது. ஆகஸ்ட் 21 அன்று ஆட்டம் 52ல் தமிழ் தலைவாஸ் அணியும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை வகிக்கும் ஜெய்ப்பூர் பின்க் பேந்தர்ஸ் அணியுடன் பலபரிட்சை நடத்த உள்ளது.
புனேரி பல்தான்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் வெற்றிக்கு விளிம்பில் சென்று கடைநிலையில் சொதப்பியதால் டிரா ஆனது. அனுபவ வீரர்களை கொண்ட தமிழ் தலைவாஸ் அணியை, தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் ஜெய்பூர் பின்க் பேந்தர்ஸ் அணி வீழ்த்த மிகவும் கடின உழைப்பு தேவை.
ஜெய்பூர் பின்க் பேந்தர்ஸ் யுபி யோதா அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 24-31 என தோல்வியடைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த தோல்வியிலிருந்து மீண்டு புள்ளிபட்டியலில் தனது முதல் இடத்தை தக்கவைக்க ஜெய்ப்பூர் பின்க் பேந்தர்ஸ் கண்டிப்பாக போராடும்.
இந்த அணியின் டாப் ரெய்டரான தீபக் நிவாஷ் ஹேடா 8 போட்டிகளில் 69 புள்ளிகளை பெற்றுள்ளார். ஆனால் பின்க் பேந்தர்ஸ் அணியின் வெற்றிக்கு முழு காரணமாக இருந்தவர்கள் "டிபென்டர்கள்". இந்த அணியின் சந்தீப் தல் இடதுபுற மூலையில் விளையாடி 8 போட்டிகளில் 32 டேக்கல் புள்ளிகளை பெற்றுள்ளார்.
வெற்றி, தோல்வி, டிரா என 3றையும் பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் மீண்டெழ வேண்டுமெனில் அந்த அணியின் நட்சத்திர ரெய்டர் ராகுல் சௌத்ரி பெரும் பங்களிப்பை அளித்தல் அவசியம். இவர் 8 போட்டிகளில் 57 புள்ளிகளை மட்டுமே பெற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது தமிழ் தலைவவாஸ் அணிக்கு பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது.
இந்த அணியின் நட்சத்திர டிபென்டர் மன்ஜீத் சில்லர் கடந்த சில போட்டிகளாக சொதப்பி வருகிறார். 7 போட்டிகளில் 27 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளார். கவர் திசையில் மன்ஜீத் சில்லர் அணியை சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்பது ரசிகர்களின் தலையாய விருப்பமாகும்.
அணிகளின் தகவல்கள்
தமிழ் தலைவாஸ்
இந்திய கபடி அணியில் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அனுபவ வீரர்களை கொண்டுள்ள தமிழ் தலைவாஸ் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து சீராக வெளிபடுத்த தவறுகிறது.
இந்தாண்டு ப்ரோ கபடி சீசனில் ராகுல் சௌத்ரி மற்றும் அஜய் தாகூர் இருவரும் இணைந்து மொத்தமாக 92 புள்ளிகளை பெற்றுள்ளனர். இவர்கள் மீண்டும் தங்களது இயல்பான ஆட்டத்திற்கு திரும்பி, மிகவும் வலிமையான டிபென்ஸீவ் அணியாக வலம் வரும் ஜெய்பூர் பின்க் பேந்தர்ஸ் அணிக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை தமிழ் தலைவாஸ் அணிக்காக அளிக்க வேண்டும்.
சபீர் பாபு சமீப காலமாக தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனவே இவரது இடத்தில் இளம் மற்றும் அதிரடி ரெய்டர் வி.அஜீத் குமாரை அணியில் சேர்க்க வேண்டும்.
உத்தேச ஆரம்ப 7: அஜய் தாகூர் (கேப்டன்), ராகுல் சௌத்ரி, வி அஜீத் குமார், மன்ஜீத் சில்லர், ரன் சிங், மோஹீத் சில்லர் மற்றும் அஜீட்
ஜெய்பூர் பின்க் பேந்தர்ஸ்
ஜெய்பூர் பின்க் பேந்தர்ஸ், யுபி யோதா அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சரியான டிபென்ஸீவ் அணியாக ஜொலிக்கவில்லை. இளம் வீரர் விஷால் மட்டுமே 4 புள்ளிகளை கைப்பற்றினார். மற்ற டிபென்டர்கள் அவ்வளவாக சிறப்பான ஆட்டத்தை அளிக்கவில்லை.
அந்த அணியின் கேப்டன் தீபக் நிவாஷ் ஹேடா தனி ஒருவராக நின்று வழக்கம்போல தடுமாற்றத்தில் இருந்த தன் அணியை மீட்டெடுக்க முயற்சித்தார். அதிக அனுபவ டிபென்டர்களை கொண்ட தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக பின்க் பேந்தர்ஸ் கேப்டன் சற்று கவனமாக விளையாடுதல் அவசியமாகும்.
பவன் TR-க்கு பதிலாக சுனில் சித்காவாலி களம் காண்பார்.
உத்தேச ஆரம்ப 7: தீபக் நவாஷ் ஹோடா (கேப்டன்), தீபக் நர்வால், நீதின் ரவால், சந்தீப் தல், நிதீன் ரவால், அமீத் ஹோடா, சுனில் சித்தகாவாலி, விஷால்.