ப்ரோ கபடி 2019, ஆட்டம் 55: தமிழ் தலைவாஸ் vs யு மும்பா, முன்னோட்டம், உத்தேச ஆரம்ப 7

Tamil Thalivas vs U Mumba
Tamil Thalivas vs U Mumba

ஆகஸ்ட் 23 அன்று ஜவஹர்லால் நேரு ஆடுகளத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ஆட்டம் 55ல் தமிழ் தலைவாஸ் மற்றும் யு மும்பா அணிகள் பல பரிட்சை நடத்த உள்ளன.

சொந்த களத்தில் தனது கடைசி போட்டியில் விளையாடும் தமிழ் தலைவாஸ் கண்டிப்பாக யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றியுடன் முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தலைவாஸ் அகமதாபாத் களத்தில விளையாடிய கடைசி லீக் போட்டியில் குஜராத் ஃபார்டியுன் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது. ஆனால் சொந்த களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டது தமிழ் தலைவாஸ்.

அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் புள்ளி பட்டியலில் தற்போது 6வது இடத்தில் உள்ளது. எனவே இதற்கு மேல் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க அதிக முயற்சி எடுக்க வேண்டும். 9 போட்டிகளில் பங்கேற்றுள்ள தமிழ் தலைவாஸ் 3ல் வெற்றியும், 4ல் தோல்வியும் மற்றும் 2ல் டிராவும் ஆகியுள்ளது.

நட்சத்திர ரெய்டர் ராகுல் சௌத்ரி தமிழ் தலைவாஸ் அணிக்காக முதல் சீசனில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்‌. ஆனால் அஜய் தாகூர் ரெய்டராக தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டார். இருப்பினும் கடந்த இரு போட்டிகளில் அஜய் தாகூரின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. ப்ரோ கபடி சீசனில் 900 ரெய்ட்களை ராகுல் சௌத்ரி கடந்துள்ளார். இந்த சீசனில் 9 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 58 புள்ளிகளை வென்றுள்ளார். ஆனால் ஒரு 5 ஸ்டார் ரெய்டர் இவ்வளவு குறைவான புள்ளிகளை வைத்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

அஜய் தாகூர் இந்த சீசனில் 40 ரெய்ட் புள்ளிகளை பெற்றுள்ளார். ப்ரோ கபடி வரலாற்றில் 300 டேக்கல் புள்ளிகளை வென்றுள்ள மன்ஜீத் சில்லர், இனிவரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். இந்த சீசனில் 7 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 26 டேக்கல் பெற்றுள்ளார். மோஹீத் சில்லர் 18 டேக்கல் புள்ளிகளும், ரன் சிங் 18 புள்ளிகளும் பெற்றுள்ளனர். இவர்கள் தொடர்ந்து தங்களது ஆட்டத்தை மேம்படுத்துதல் அவசியமாகும்.

தமிழ் தலைவாஸ் ஆரம்ப‌ உத்தேச 7:

அஜய் தாகூர் (கேப்டன்), ராகுல் சௌத்ரி, வி அஜீத் குமார், மன்ஜீத் சில்லர், மோஹீத் சில்லர், ரன் சிங், சகர்.

யு மும்பா, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக மிகவும் நெருக்கமாக சென்ற கடந்த போட்டியில் தோல்வியை தழுவியது. ரோஹீத் பல்யன் யு மும்பா அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். புள்ளிபட்டியலில் தங்களுக்கு ஒரு படி மேல் உள்ள தமிழ் தலைவாஸை வீழ்த்த யு மும்பா அணிக்கு கேப்டன் பாஸல் அட்ராச்சலி அதிக நம்பிக்கையை அளிக்க வேண்டும்.

யு மும்பா அணியின் டிபென்டர்கள் 9 போட்டிகளில் 69 டேக்கல் புள்ளிகளை வென்றுள்ளனர். அவர்களிடமிருந்து மேலும் அதிக புள்ளிகளை யு மும்பா அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது‌. யு மும்பா அணியின் ரெய்டர்கள் 359 ரெய்ட்‌ சென்று 106 புள்ளிகளை வென்றுள்ளனர். அபிஷேக் சிங் (7 போட்டிகளில் 41 ரெய்ட் புள்ளிகள்) யு மும்பா அணியின் சிறந்த ரெய்டராக வலம் வருகிறார்.

அர்ஜீன் தேஸ்வால் 8 போட்டிகளில் 29 ரெய்ட் புள்ளிகளை பெற்றுள்ளார். ரோஹீத் பல்யன் 9 போட்டிகளில் 29 புள்ளிகளுடன் 3வது சிறந்த ரெய்டராக உள்ளார். முன்னனி டிபென்டர் சுரேந்தர் சிங் 9 போட்டிகளில் 25 டேக்கல் புள்ளிகளை வென்றுள்ளார்.

யு மும்பா ஆர்ம்ப உத்தேச 7:

அபிஷேக் சிங், அர்ஜீன் தேஸ்வால், ரோஹீத் பல்யான், ஃபேஜல் அட்ராசெல், சுரேந்தர் சிங், சந்தீப் நர்வால், யங் சங் கோ.

Quick Links

Edited by Fambeat Tamil