2019 ப்ரோ கபடி சீசனில் ஆட்டம் 70ல் பெங்களூலரு புல்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் பெங்களூருவில் உள்ள கன்டீரவா ஆடுகளத்தில் பலபரிட்சை நடத்தின.
பெங்களூரு புல்ஸ் தனது சொந்த களத்தில் மன்பீரித் சிங் தலைமையிலான குஜராத் ஃபார்ட்டியுன் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை தழுவியது. தமிழ் தலைவாஸ் அணியும் பெங்களூரு புல்ஸை விட சிறந்தது என கூறி விட முடியாது. டெல்லி களத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் தோல்வியை தழுவியிருந்தது.
தமிழ் தலைவாஸ் ஆரம்ப 7:
ராகுல் சௌத்ரி, அஜய் தாகூர், மோஹீத் சில்லர், மன்ஜீத் சில்லர், சகார், ரன் சிங், அஜீட்.
பெங்களூரு புல்ஸ் ஆரம்ப 7:
பவான் ஷேராவத், ரோகித் குமார், அமீத் ஷேரோன், மோஹீத் ஷேராவத், மஹேந்தர் சிங், சுமித் சிங், சௌரப் நதால்.
அர்ஜீனா விருதினை வென்ற தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜய் தாகூர் முதல் ரெய்ட் சென்று புள்ளிகள் ஏதும் எடுக்காமல் திரும்பினார். பெங்களூரு அணி கேப்டன் ரோகித் குமார் ரெய்ட் சென்று இரு புள்ளிகளுடன் திரும்பினார். கடந்த சில போட்டிகளில் சொதப்பிய ராகுல் சௌத்ரி தனது முதல் ரெய்டில் ஒரு போனஸ் புள்ளியை வென்றார்.
ஆரம்ப விநாடிகளிலிருந்து த்ரில்லராக சென்று கொண்டிருந்த இப்போட்டியில், தமிழ் தலைவாஸ் போனஸிற்காக மேல் முறையீடு செய்தனர். ஆனால் அது பயனில்லாமல் போனது. தமிழ் தலைவாஸ் நட்சத்திர டிபென்டர் மன்ஜீத் சில்லர் எதிரணியின் பவான் ஷேராவத்-ஐ தனி ஒருவராக பிடித்து அசத்தினார்.
இப்போட்டி மிகவும் பரபரப்பாகவே சென்று கொண்டிருந்தது. இரு அணியும் தங்களது சிறு தவறு கூட நிகழ்த்தாமல் விளையாடிக் கொண்டிருந்தது. அத்துடன் இரு அணிகளின் நட்சத்திர வீரர்களிடமிருந்து சிறப்பான ஆட்டம் வெளிபட்ட வண்ணம் இருந்தது.
பெங்களூரு புல்ஸ் மோஹீத்-ற்கு சாதகமான மேல்முறையீடு ஒன்றை செய்தது. ஆனால் அது தவறாக அமைந்தது. பின்னர் பவான் ஷேராவத் ரெய்ட் சென்று மன்ஜீத் சில்லர் மற்றும் அஜீட் ஆகியோரை அவுட் செய்தார். முதல் பாதி ஆட்ட முடிவில் பெங்களூரு புல்ஸ் 14-13 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் மோஹீத் ஷேராவத், அஜய் தாகூரை சூப்பர் டேக்கல் செய்தார். இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட பவான் ஷேராவத் மீண்டுமொரு முறை இரு புள்ளிகளை ஒரு ரெய்டில் வென்று 7வது சீசனில் தனது 7வது சூப்பர் 10 வென்று அசத்தினார்.
பவான் ஷேராவத்-ஐ சகார் ஒரு அற்புதமான டேஸ் செய்து சூப்பர் டேக்கலை நிகழ்த்தினார். அதன்பின் ரோகித் குமாரை மீண்டுமொருமுறை சூப்பர் டேக்கல் செய்தார் மோஹீத் சில்லர்.
அதன்பின் ரெய்ட் வந்த பவான் மீண்டுமொருமுறை இரு புள்ளிகளை வென்று 5 புள்ளிகளில் பெங்களூரு புல்ஸை முன்னிலை பெறச் செய்தார். அதே நேரத்தில் தமிழ் தலைவாஸ் இக்கட்டான நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. எதிர்பாராத விதமாக தமிழ் தலைவாஸ் ஆல்-அவுட் ஆனது.
முதல் பாதி ஆட்டத்தில் ஜொலித்த ராகுல் சௌத்ரி இரண்டாவது பாதியில் சொதப்பினார். இதனால் வெளியே அமர்த்தப் பட்டார். மேலும் இரண்டாவது பாதியில் அவரது ஆட்டத்திறன் வெகுவாக குறைந்தது.
பெங்களூரு புல்ஸ் தனது அற்புதமான ஆட்டத்தால் மேன்மேலும் முன்னிலை வகித்தது. தமிழ் தலைவாஸ் 33-27 என மீண்டுமொருமுறை தோல்வியை தழுவியது. பவான் ஷேராவத் மற்றும் அமீத் ஷேரோன்ஸ் ஆகியோர் இந்த ஆட்டத்திற்கு முக்கிய வெற்றிக்கு காரணமானார். இதனைப் பற்றி பெங்களூரு புல்ஸ் பயிற்சியாளரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது:
இந்த ஆட்டத்தில் நாங்கள் வென்று விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. பவான் மற்றும் ரோகித் இருவரும் அசத்தினர். பவான் மற்றும் ரோகித் தங்களது பணியை சிறப்பாக செய்து என்னுடைய நம்பிக்கையை காப்பாற்றினர். இருப்பினும் தமிழ் தலைவாஸ் அணியின் டிபென்ஸ் சிறப்பாக இருந்தது.
களத்தில் இறங்கும் முன்பு பவானின் மனநிலை எவ்வாறு இருந்தது என்று கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது,
குஜராத் அணியுடனான போட்டி முடிவிற்கு பின்னர் பயிற்சியாளர் நாங்கள் செய்த தவற்றை எடுத்துரைத்தார். என்னுடைய ஆட்டத்திறனிற்கு 3 புள்ளிகளை நீங்கள் எடுக்கலாமா என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்.
என்னுடைய பயிற்சியை காலை முதலே கவனித்து வந்தார் பயிற்சியாளர். என்னுடைய சிறப்பான ஆட்டத்திற்கான முழு காரணமாகவும் பயிற்சியாளர் விளங்குகிறார். 17 ரெய்ட் புள்ளிகளை எடுக்க எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தவர் எங்கள் அணியின் பயிற்சியாளர்.