சொந்த களத்தில் ஒரு போட்டியில் கூட ஜொலிக்காத "தமிழ் தலைவாஸ்"

U Mumba defeated Tamil Thalaivas in the heated encounter
U Mumba defeated Tamil Thalaivas in the heated encounter

ப்ரோ கபடி லீக்கில் ஆட்டம் 55ல் தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்ததை அடுத்து சொந்த களத்தில் நடந்த போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி வாய்ப்பை பெறவில்லை. கடைசியாக நடந்த போட்டியிலாவது வெற்றி பெறலாம் என்ற நோக்கத்துடன் இருந்த தமிழ் தலைவாஸிற்கு கிடைத்தது ஏமாற்றமே.‌

யு மும்பா அணியானது தனது கடந்த போட்டியில் ராகேஷ் குமாரின் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. தற்போது தோல்வியிலிருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.

யு மும்பா மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோதிய போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்திய நேரப்படி இரவு 8:30ற்கு தொடங்கியது.

யு மும்பா அணியிலிருந்து முதலில் ரெய்ட் வந்த அபிஷேக் தமிழ் தலைவாஸ் டிபென்ஸ் படையினரால் பிடிக்கப்பட்டார். அடுத்தாக ராகுல் சௌத்ரி ரெய்ட் சென்று ஒரு புள்ளிகளை எடுத்து வந்தார். மேலும் சற்று பரபரப்பை ஏற்படுத்தி அடுத்த ரெய்டில் மீண்டும் ராகுல் சௌத்ரி இரு புள்ளிகளை எடுத்தார்.

அர்ஜீன் தேஸ்வால் ரெய்ட் சென்று ரன் சிங்கை தொட்டு யு மும்பா அணிக்காக முதல் புள்ளியை எடுத்துகொடுத்தார். அதன் பின் இரு அணிகளும் போர்களத்தில் மோதியது போல் தவறுகளை களைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கின.

தமிழ் தலைவாஸ் ஆட்டத்தின் ஒரு பாதி இடைவெளிக்கு முன்பாக ஒரு தவறான மேல்முறையீட்டை கேட்டது. இருப்பினும் முதல் பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 12-10 என இரு புள்ளிகள் முன்னிலை வகித்தது.

இடைவெளிக்குப் பின்னர் ரெய்ட் வந்த சந்தீப் நர்வால் பிரம்மாண்டமாக இரு புள்ளிகளை எடுத்து வந்தார். இதைத்தொடர்ந்து எம்.எஸ். அதுல் இரு புள்ளிகளை நுணுக்கமாக விளையாடி எடுத்து வந்தார். இதன் மூலம் சற்று நீண்ட நேரத்திற்கு பின்னர் யு மும்பா 1 புள்ளி முன்னிலை வகித்தது.

அதுல் மேலும் சில சிறப்பான ரெய்டு சென்று தமிழ் தலைவாஸ் அணியை ஆல்-அவுட் செய்தார். தமிழ் தலைவாஸ் மிகவும் அற்புதமான தொடக்கத்தை அளித்தும் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் செய்த சிறு சிறு தவறால் பின்னடைவை சந்தித்தது.

இப்போட்டியில் கடைசி 3 நிமிடங்களில் கூட யார் வேண்டுமானலும் வெற்றியாளராக வரலாம் என்ற நிலையில் தான் சென்று கொண்டிருந்தது. தமிழ் தலைவாஸ் தனது தவற்றை களையாமல் தொடர்ந்து சொதப்பி வந்த காரணத்தால் யு மும்பா ஒரு பெரிய புள்ளிகளில் முன்னிலை வகித்தன.

இரு அணிகளுமே கடும் நெருக்கடியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் டிரா ஆகும் என நினைத்திருந்தனர். ஆனால் மண்ணின் மைந்தர்கள் தமிழ் தலைவாஸ் ஆட்டத்தின் இடையே செய்த சிறு சிறு தவறு அவர்களை கடைநிலையில் அதிகமாகவே பாதித்தது. இறுதியில் 24-29 என மீண்டுமொருமுறை தோல்வியை தழுவியது தமிழ் தலைவாஸ்.

எதிர்பாராத விதமாக தமிழ் தலைவாஸ் தனது சொந்த களமான சென்னையில் விளையாடிய 4 போட்டிகளில் 3ல் தோல்வியும் 1ல் டராவும் ஆகி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மறுமுனையில் யு மும்பா ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சரியாக டிபென்ஸ் செய்து எதிரணியின் பலத்தை குறைத்து வெற்றி பெற்றுள்ளது.

Quick Links

Edited by Fambeat Tamil