யு மும்பா கேப்டன் ஃபேஜல் அட்ராஜாலி கிடைத்த மற்றோரு வெற்றியின் மூலம் சிறந்த நம்பிக்கையுடன் உள்ளார். டிபென்ஸில் இவர் சிறந்த விளங்கி 11 டேக்கல் புள்ளிகளைப் பெற்றார். தமிழ் தலைவாஸ் 6 டேக்கல் புள்ளிகள் மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது. 4 டிபென்டர்களும் குறைந்தது இரு டேக்கல் புள்ளிகளை பெற்றனர். விளையாடிய 5 டிபென்டர்களுமே குறைந்தது ஒரு டேக்கலை செய்து அசத்தினர்.
இது குறித்து யு மும்பா கேப்டன் கூறியதாவது, "அணிக்கு ஒரு முக்கியமான வெற்றி கிடைத்தது. என்னுடைய 3 டேக்கல் புள்ளிகள் அணிக்கு பெரும் பங்களிப்பை அளித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இப்போட்டியில் யு மும்பா அணியின் நட்சத்திர ரெய்டர் எம்.எஸ் அதுல் 6வது ப்ரோ கபடி சீசனில் தமிழ் தலைவாஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். இரு அணிகளையும் ஒப்பிடும் போது 7 ரெய்ட் புள்ளிகளுடன் சிறந்த வீரராக வலம் வந்தார். தமிழ் தலைவாஸ் அணியின் டிபென்ஸ் படைக்கு கடும் நெருக்கடியை தன்னால் அளிக்க முடியும் என நிருபித்துள்ளார்.
இது குறித்து அதுல் கூறியதாவது, "இப்போட்டியில் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் எனக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தனர். நாங்கள் யார் யார் இன்று விளையாடப் போகிறோமோ அவர்கள் அனைவரும் இனைந்து சரியான திட்டத்தை வகுத்துக்கொண்டோம். இதுவே நான் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த காரணமாக இருந்தது.
யு மும்பா கேப்டன் ஃபேஜல் கூறியதாவது, "இந்த போட்டியில் பல விதமாக எதிர்பாரா நுணுக்கங்கள் அணிக்கு கிடைத்தன. கடந்த வருடம் சித்தார்த் தேசாய், ரோகித் பல்யான் போன்றோர் சிறப்பான ரெய்ட் புள்ளிகளை வென்றனர். எனவே அனைத்து அணிகளும் அவர்களை குறி வைத்தே செயல்படும். ஆனால் நாங்கள் சற்று மாற்றி வித்தியாசமான கோணத்தில் யோசித்தோம். எங்கள் ரெய்டர்கள் அனைவரும் சிறந்த பங்களிப்பை அளித்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு போட்டியில் அர்ஜீன் தேஷ்வால் சிறப்பாக விளையாடினால் அடுத்த போட்டியில் அதுல் சிறப்பாக விளையாடுகிறார். மற்றொரு போட்டியில் அபிஷேக் சிங் சிறந்த ஆட்டத்தை வெளிகொணருகிறார்.
இந்த வெற்றியின் மூலம் யு மும்பா 29 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் 8வது இடத்தில் 25 புள்ளிகளுடன், முன்னதாக நடந்த போட்டியில் வென்ற குஜராத் ஃபார்டியுன் ஜெயன்ட்ஸ் அணியுடன் பகிர்ந்து கொண்டது.