ப்ரோ கபடியின் 7வது சீசனில் ஜெய்ப்பூர் பின்க் பேந்தர்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் மோதிய போட்டியில் 26-28 என நூலிலையில் தமிழ் தலைவாஸ் தோல்வியை தழுவியது. இப்போட்டியில் கள நடுவர்களின் தவறான முடிவு குறித்து ப்ரோ கபடி சீசனில் பல்வேறு முதல்முறையாக கேள்வி எழுப்பப்பட்டது.
ஜெய்பூர் பின்க் பேந்தர்ஸ் ஒரு முறை ஆல்-அவுட் ஆகியிருந்தாலும், கிடைத்த டேகல் புள்ளிகள் மற்றும் போனஸ் புள்ளிகளை சரியாக பயன்படுத்தி கொண்டு நூழிலையில் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாவது பாதியில் 4 நிமிடங்கள் மீதமிருந்த போது தமிழ் தவைவாஸ், ஜெய்ப்பூர் பின்க் பேந்தர்ஸை ஆல்-அவுட் செய்து 17-17 என சமன் செய்தது. ஆனால் அதன்பின் ஜெய்பூர் அணி டூ-ஆர்-டை சரியாக பயன்படுத்தி கொண்டு 22-25 என மாற்றியது. இந்த சமயத்தில் வழங்கப்பட்ட புள்ளிகள் பெரும் விவாதத்திற்கு உள்ளானது.
தீபக் நர்வால், ரன் சிங்-ஆல் டேக்கல் செய்யப்பட்டார். கள நடுவர்களும் ஆல்-அவுட் வழங்கினர். ஆனால் அஜய் தாகூர் ரெய்டின் போது கோட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார் என ஜெய்ப்பூர் பின்க் பேந்தர்ஸ் மேல் முறையீடு செய்தது. ரீ-பிளே செய்து பார்த்தபோது தீபக் நர்வால், ரன் சிங்கை தொட்ட பிறகே அஜய் தாகூர் எல்லை வெளி கோட்டின் மேல் கால் வைத்துள்ளார். ஆனால் டிவி அம்பையர் அஜய் தாகூர் அவுட் எனவும், ரெய்டர் அவுட் இல்லை எனவும் தனது முடிவை அறிவித்தது.
இதனால் அஜய் தாகூர் மிகுந்த கோபத்துடன் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்ததால், வார்னிங் செய்யப்பட்டார். ஆட்ட முடிவில் எதிரணி வீரர்களுக்கு கை கொடுக்க இவர் வரவில்லை. மிகுந்த ஏமாற்றத்துடன் அமர்ந்திருந்தார்.
இதுகுறித்து ஆட்டநேர முடிவில் தமிழ் தலைவாஷ் பயிற்சியாளர் இ.பாஸ்கரனிடம் கேள்வி எழுப்பிய போது அவர் பதிலளித்தவதாவது, "இது கண்டிப்பாக 100 சதவீதம் தவறான முடிவாகும்".
"ரன் சிங் எதிரணி ரெய்டரை பிடித்த பின்னரே அஜய் தாகூர் எல்லை வெளிகோட்டில் கால் வைத்தார். இந்த ரெய்டை முழுமையாக சோதனை செய்யப்படாதது ஏன்? ஆரம்பத்தில் அவுட் வழங்கி விட்டு பின்னர் அந்த குறிப்பிட்ட நிகழ்வை முழுமையாக சோதனை செய்யாமல் தவறான முடிவை அளித்தது ஏன்? என பாஸ்கரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, 'ஆட்டநேர இடைவெளியில் நடுவர்களில் ஒருவர் வந்து இது தவறான முடிவுதான் என ஒப்புக்கொண்டனர்".
இந்தப் போட்டியில் நிகழ்த்தப்பட்ட ஒரே ஆல்-அவுட் தமிழ் தலைவாஸால் செய்யப்பட்டதாகும். இந்த ஆல்-அவுட் ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம். ஆனால் ஜெய்ப்பூர் அணி சூப்பர் டேக்கலில் கிடைத்த புள்ளிகள் மற்றும் ரெய்டர்களின் போனஸ் புள்ளிகளாள் முன்னிலை வகித்தது.
"போனஸ் புள்ளிகளே இப்போட்டியில் வெற்றி மற்றும் தோல்வியை தீர்மானித்தது. எதிரணியை ஆல்-அவுட் செய்த தமிழ் தலைவாஸ் போனஸ் புள்ளிகளை எடுக்கத் தவறியது"என பாஸ்கரன் கூறியுள்ளார்.
சூப்பர் டேக்கலில் தமிழ் தலைவாஸ் சொதப்புவது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது பாஸ்கரன் தெரிவித்தவதாவது: "நாங்கள் இதற்காக பல பயிற்சி மேற்கொண்டோம். ராகுல் சௌத்ரி இந்த சூழ்நிலைக்கு சரியான வீரர். அஜய் தாகூர் அதிக வீரர்கள் களத்தில் இருக்கும்போது ரெய்ட் செல்ல சரியான வீரர். ஆனால் சில நெருக்கடியினால் ஆட்டம் மாறுகிறது. இந்த ஒரு பகுதியில் மட்டும் கண்டிப்பாக நாங்கள் மேம்படுத்த வேண்டும்."
இந்தப் போட்டியில் தோல்வி ஏற்பட்டாலும் எதிரணியின் பயிற்சியாளர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்திற்கு பதிலடி தரும் விதத்தில் தமிழ் தலைவாஸ் விளையாடியதற்கு பாஸ்கரன் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தார்.
"ஒட்டுமொத்தமாக அணியை பற்றி எந்த குறையும் இன்று நான் தெரிவிக்க மாட்டேன். அஜய் தாகூர் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிகொண்டுவந்தார். மிகவும் சுதந்திரமாக எந்த நெருக்கடியும் இல்லாமல் விளையாடினார். மேலும் எங்கள் அணி மன்ஜீத் சில்லர் இல்லாமலே சிறப்பாக டிபென்ஸ் செய்தது. ஒரு சில நிகழ்வுகளில் தவறுகள் இருந்தாலும் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தப் போட்டியில் நிறைய புதிய விஷயங்களை கற்று கொண்டோம். இதனை எங்களது சொந்த களத்தில் நடைபெறவுள்ள கடைசி போட்டியில் வெளிபடுத்துவோம்." என பாஸ்கரன் நேர்காணலை முடித்தார்.