இந்த வார ராவின் ஆரம்பம் டபுள்யூ டபுள்யூ ஈ ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அதற்கு காரணம் யுனிவர்சல் சாம்பியன் ரோமன் ரைன்ஸ் தனது பெல்டை சரண்டர் செய்தது தான். கண்களில் கண்ணீர் மல்க தன் பேச்சைத் தொடங்கிய ரோமன் தன்னை பாதித்திருக்கும் லுகீமியா நோய் பற்றிக் கூறி பெல்டை சரண்டர் செய்வதாக அறிவித்தார். இதை கேட்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ரோமன் ரைன்ஸை புரோ ரெஸ்லிங் ரசிகர்கள் வரும் நாட்களில் நிச்சயம் மிஸ் பண்ணுவார்கள் . அதற்கான மூன்று முக்கிய காரணங்கள்.
3. ரோமனின் இன் ரிங் பெர்பார்மன்சஸ்
ரோமனின் இன் ரிங் திறமை நிச்சயமாக விவாதத்திற்குரிய ஒரு தலைப்பு தான். ஆனால், கடந்த சில மாதங்களாகவே , அவரின் பெர்பார்மன்சஸ் பாராட்டதக்க வகையில் இருந்துள்ளது. அவரின் ரெஸ்லிங் ஸ்டைலும் அனைவரையும் ஈர்த்தது. அப்படி இருக்க நிச்சயமாக ஒரு நல்ல போட்டியாளரை புரோ ரெஸ்லிங் உலகம் மிஸ் பண்ணும்.
2. தி ஷீல்டு
புரோ ரெஸ்லிங் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த அணிகளில் ஷீல்டும் ஒன்று. அது ஆம்ப்ரோஸ் , ராலின்ஸ், ரோமன் மூவரும் இணைந்த பொழுது ரசிகர்கள் எழுப்பிய பெரும் கரகோஷத்தில் இருந்தே தெரிந்தது. ஆனால், ஷீல்டின் முதுகெலும்பான ரோமன் இல்லாத காரணத்தால், ஸ்க்ரிப்ட் எழுதும் குழு ஷீல்டை மீண்டும் பிரிக்கும் முடிவை எடுத்துள்ளது. ரோமன் இருந்திருந்தால் ஷீல்டு மீண்டும் புரோ ரெஸ்லிங் உலகின் அசைக்க முடியாத சக்தியாக உருவாகி இருக்கும்.
1. ரோமனின் ஸ்டார் மதிப்பு
ரோமன் ரைன்ஸின் இன் ரிங் பெர்பார்மன்சஸை பலரும் விமர்சனம் செய்வர். ஆனால், யாராலும் மறுக்க முடியாத ஒரு விஷயம் ரோமன் ஒரு மிகப் பெரிய ஸ்டார் என்பது தான். அவர் பெல்டை சரண்டர் செய்வதற்கு முன் கூறிய வார்த்தைகள், " உங்களில் பலருக்கு என்னைப் பிடிக்காது என்று தெரியும். ஆனால், அது என்னை பாதித்தில்லை. காரணம் நாம் ஆடுவதை இவ்வளவு மக்கள் பார்க்கிறார்கள் என்பதே எனக்கு பெரும் மகிழ்வை தருகிறது".
ரோமன் இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம் அவரின் கடின உழைப்பே ஆகும். அவர் இதிலிருந்து மீண்டு வந்து சாதிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை.