WWE பாஸ்ட்லேன் 2019: நாம் தெரிந்துகொண்ட 5 முக்கிய நிகழ்வுகள்

தி ஷீல்டு 
தி ஷீல்டு 

ரெஸில்மேனியாவில் என்ன நடக்க போகிறது என்று இன்று(11/03/2019) நடைபெற்ற பாஸ்ட்லேன் ஈவென்ட் மூலம் நாம் அறிந்து கொண்டோம். இதுவரை நடந்த பாஸ்ட்லேன்களில் மிக சிறப்பான ஈவென்ட் ஆக இது கருதப்படுகிறது. ஸ்மாக் டவுனின் தலைப்பு செய்தியாக கெவின் ஓவென்ஸ் டேனியல் பிரையனை wwe சாம்பியன்ஷிப் போட்டிக்காக சவால் விட்டது. அதை போன்று ராவுக்கான தலைப்பு செய்தியாக மீண்டும் ஷீல்டு ஒன்றிணைந்து. இவர்கள் மீண்டும் இணைந்து பரோன் கார்பின், பாபி லாஷ்லே மற்றும் மகின்டயர் ஆகியோரை 6 பேர் பங்குபெறும் டேக் டீம் போட்டியாக எதிர்கொண்டனர்.

டைட்டில் போட்டிகள், கடைசி நிமிட சுவாரசியமான போட்டிகள் என இந்த வருட பாஸ்ட்லேன் அனைத்து wwe ரசிகர்களையும் கவர்ந்தது. பெக்கி லிஞ்சின் கடைசி டைட்டில் வாய்ப்பாக நடைபெற்ற பெண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் வெற்றி பெறுவாரா என ரசிகர்கள் இருக்கையின் நுனியில் இருந்து ரசிக்கும் படியாக இருந்தது. ஸ்மாக் டவுனுக்கான பெண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியை தவிர அனைத்துமே சுவாரசியம் குறையாமல் இருந்தது என சொல்லலாம். இவ்வருட பாஸ்ட்லேனின் 5 முக்கிய நிகழ்வுகளை கீழே வரும் தொகுப்பில் காணலாம்.

#5 தி மிஸ் மற்றும் ஷான் ஓ மேக்கின் மோதல்

தி மிஸ் மற்றும் ஷான் ஓ மேக்
தி மிஸ் மற்றும் ஷான் ஓ மேக்

ஆரம்பத்தில் மிக மெதுவாக இந்த போட்டி தொடங்கினாலும் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் இறுதியில் எது நடக்கும் என்று எதிர் பார்த்தமோ அது நிறைவேறியது. தி மிஸ் மற்றும் ஷான் ஓ மேக்கின் இடையே இருக்கும் கருத்து வேறுபாடு அனைவரும் அறிந்ததே. அதை தாண்டி இவ்விருவரும் இணைந்து டேக் டீம் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டி தி உசோஸிற்கு எதிராக நடைபெற்றது. மீண்டும் டேக் டீம் சாம்பியன்ஷிப்பை தன் வசமாக்கும் முனைப்பில் களமிறங்கிய உசோஸ், மீண்டும் பட்டத்தை வென்றனர்.

இதனால் தி மிஸ் மற்றும் ஷான் ஓ மேக் இடையே மோதல் ஏற்பட்டது. ரெஸில்மேனியா 35 தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கின்ற வேலையில் இவ்விருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் ரெஸில்மேனியாவின் முக்கியமான போட்டிகளில் ஒன்றாக நடைபெற அதிக வாய்ப்புள்ளது. இல்லை மீண்டும் இவ்விருவரும் இணைந்து டேக் டீம் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டியில் பங்கேற்பார்களா என பார்க்கலாம்.

#4 தி ஷீல்டு

தி ஷீல்டு
தி ஷீல்டு

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட மீண்டும் நடக்குமா நடக்காதா என யோசிக்க வைத்த ஒரு நிகழ்வு சென்ற வார ராவில் அரங்கேறியது. பரோன் கார்பின், பாபி லாஷ்லே மற்றும் மகின்டயர் ஆகியோரை எதிர்த்து மீண்டும் ஒருங்கிணைந்த தி ஷீல்டு பாஸ்ட்லேனில் டேக் டீம் போட்டிக்கான சவாலை எதிர்கொண்டது. அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்தது போல வெறியோடு மோதிய ஷீல்ட், எதிரணியை பந்தாடியது. இத்துடன் இந்த கூட்டணி உடைந்து விட கூடாது என்பதே ரசிகர்களின் ஏக்கம். ஷீல்டின் அடுத்த மிக முக்கியமான போட்டி எது என்பதை காலம் தான் கூற வேண்டும். ரெஸில்மேனியாவில் பிராக் லெஸ்னர் மற்றும் ரோல்லின்ஸ் இடையே நடக்க உள்ள சாம்பியன்ஷிப் போட்டி கவனத்தை ஈர்த்தாலும், அம்ப்ரோஸ் மற்றும் ரோமன் ரெய்ன்ஸ் இடையே ரெஸில்மேனியா 35 இல் போட்டி நடைபெறுமா என்பதும் ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது.

#3 மீண்டும் பழைய சமோவா ஜோவாக மாறினார்

சமோவா ஜோ
சமோவா ஜோ

WWE இல் மிகவும் திறமை வாய்ந்த வீரர்களுள் ஒருவர் சமோவா ஜோ. இவர் பெரும்பாலும் முக்கியமான ஈவெண்ட்களில் வெற்றியை தவற விட கூடியவர். ஆனால் பாஸ்ட்லேன் மூலம் சரியான நேரத்தில் மீண்டும் பார்முக்கு வந்துள்ளார். ரே மிஸ்டேரியோ மற்றும் ஆண்ட்ரேட் இடையே நடைபெற இருந்த போட்டி யுனைடெட் ஸ்டேட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியாக மாறியது. இவ்விருவருடன் முன்னாள் யுனைடெட் ஸ்டேட்ஸ் சாம்பியன் ஆர் ட்ரூத் மற்றும் தற்போதைய சாம்பியன் சமோவா ஜோவும் இணைந்து நால்வர் மோதும் சாம்பியன்ஷிப் போட்டியாக மாறியது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சமோவா ஜோ, சாம்பியன்ஷிப்பை தக்க வைத்து கொண்டார். கடந்த இரண்டு வாரமாக சிறப்பாக சண்டையிட்டு வரும் ஜோ, வருங்கால wwe சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றால் ஆச்சிராயம் இல்லை.

#2 WWE சாம்பியன்ஷிப் போட்டியில் முஸ்தபா அலி

முஸ்தபா அலி
முஸ்தபா அலி

கெவின் ஓவென்ஸ் மற்றும் டேனியல் பிரையன் இடையே நடைபெற இருந்த wwe சாம்பியன்ஷிப் போட்டி, வின்ஸ் மேக்மஹானால் ட்ரிபிள் த்ரெட் போட்டியாக அறிவிக்கபட்டது. இவ்விருவருடன் யாரும் எதிர்பார்க்காத விதமாக முஸ்தபா அலி சண்டையிட்டார். ஆனால் அரங்கில் இருந்த அனைவரும் கோஃபி கிங்ஸ்டன் பேரையே கூச்சலிட்டு கொண்டிருந்தனர். கோஃபியின் பெயர் அரங்கம் அதிர உச்சரித்த போதும், மூவரும் சளைக்காமல் சண்டையிட்டு கொண்டனர். ஓவென்ஸ் மற்றும் பிரையன் மிகப்பெரிய வீரர்களை எதிர்கொண்டவர்கள். பல சிரமமான போட்டிகளை வென்றவர்கள். இருப்பினும் அவர்களுக்கு நான் சளைத்தவன் இல்லை என்பது போல் முஸ்தபா அலி கடைசி வரை போராடினார்.

தோல்வியை சந்தித்தாலும் இது இவருக்கு ஒரு பாடம். வருங்காலங்களில் முஸ்தபா அலி அனைவரும் போற்ற கூடிய ரஸ்ட்லெராக வருவதற்கான அனைத்து திறமையும் உள்ளது.

#1 கோஃபி கிங்ஸ்டனின் ரெஸில்மேனியா 35 வாய்ப்பு

கோஃபி கிங்ஸ்டன்
கோஃபி கிங்ஸ்டன்

பாஸ்ட்லேனின் முதல் போட்டியாக இருந்தது நியூ டே மற்றும் ஷின்ஸுக்கே ருசேவ் கூட்டணிக்கான டேக் டீம் போட்டி. கோஃபி கிங்ஸ்டன் சண்டையிட வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மேக்மஹன் அலுவலகத்தில் இருந்தார். கோஃபி நினைத்தது போல் தான் ரசிகர்களும் எதிர்பார்த்திருப்பர். ஆனால் நடந்ததோ வேறு. சாம்பியன்ஷிப் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த கோஃபிக்கு ஷேமாஸ் மற்றும் சீசரோ உடன் மோதக்கூடிய 2-1 ஹாண்டிக்கப் போட்டி நடைபெற்றது. எதிர்பார்த்தது போல் தோல்வியை கண்டார் கோஃபி.

ஆனால் இதில் இருந்து நாம் யூகித்து கொள்ளலாம், கோஃபி ரெஸில்மேனியாவில் பிரையினை எதிர்த்து wwe சாம்பியன்ஷிப் போட்டி மோத உள்ளார் என்று. ஏனென்றால் wwe பொறுத்த வரையில் ஒரு ரஸ்ட்லெர் வின்ஸின் பிடியால் தொல்லை செய்யபட்டால்,அவர் வருங்காலத்தில் ஏதோ பெரிய போட்டியை சந்திக்க உள்ளார் என்று. வின்ஸின் இந்த செயலால் பிரைன் மற்றும் கோஃபியின் ரெஸில்மேனியா 35 போட்டி முடிவாகிவிட்டது.

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications