WWE நிகழ்ச்சியில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் வீரராக வளம் வருபவர் ரோமன் ரெய்ங்ஸ். இப்படி பல ஆண்டுகளாக மல்யுத்த போட்டிகளில் கலக்கி வந்த இவரின் வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது கடந்த ஆண்டு இவரை லுகேமியா என்ற ரத்த புற்று நோய் தாக்கியதே. இதனால் இனி தாம் இந்த WWE போட்டிகளில் கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்து கண்ணீர் மல்க வெளியேறினார். அதன் பின் பல மாதங்கள் கழித்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து ரசிகர்களை சந்தோசப்படுத்திய இவர் தற்போதுவரை மல்யுத்த போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்த வேளையில் இவரின் நோய் தற்போது தீவிரமானதை தொடர்ந்து தற்போது இதன் பின்னும் இவர் WWE போட்டிகளில் பங்கேற்கலாமா என்பதை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ரோமன் ரெய்ங்ஸ்-ன் WWE எதிர்காலம் குறித்த தகவல்
ரோமன் ரெய்ங்ஸ் யுனிவர்சல் சேம்பியன்ஷிப் பதக்கத்தை கைப்பற்றி கிட்டதட்ட ஓராண்டாகி விட்டது. இந்நிலையில் அவர் WWE போட்டிகளிில் தனது எதிர்காலத்தை பற்றிய முக்கிய முடிவினை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ரியான் சாடின் மல்யுத்த நிறுவனத்தின் தகவலின் படி ரோமன் ரெய்ங்ஸ் புதிய நீண்ட கால ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தகவலின் படி ரெய்ங்ஸ் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
கடந்த மாதம் அவர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் அவர் இன்னும் பல ஆண்டுகளுக்கு WWE போட்டிகளில் தொடரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோமன் ரெய்ங்ஸ்-ன் ஒப்பந்தமானது எவ்வளவு காலம்:
ரோமன் ரெய்ங்ஸ் கையெழுத்திட்டுள்ள ப்ரோ மல்யுத்த ஒப்பந்தத்தில் நமக்கு அவ்வளவு தெளிவான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தாலும் சமீபத்தில் ரோமன் ரெய்ங்ஸ் தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு இது குறித்து பேட்டியளித்தார். அதன் மூலம் அவரின் ஒப்பந்தக்காலம் எவ்வளவு நாட்கள் என்பதனை நம்மால் யூகிக்கமுடிகிறது. அதில் அவர் கூறியவதாவது,
நான் இன்னும் குறைந்தது 5 ஆண்டுகளாவது முழு நேரமாக WWE போட்டிகளில் பங்கேற்பேன். இது மற்ற வாய்ப்புகளை காட்டிலும் எனக்கு சிறந்ததாக தெரிகிறது. இருந்தாலும் எனது உடல் நலத்தையும் நான் சரியாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
ரோமன் ரெய்ங்ஸ் WWE போட்டிகளிலிருந்து வெளியேறிய பின் என்ன செய்வார் ??
இந்த கேள்வியானது நம்மில் பலருக்கு தோன்றும். இதுவரை முழுநேர மல்யுத்த வீரராக விளங்கி வந்த இவர் திடீரென இந்த வகை போட்டிகளிலிருந்து வெளியேறினால் அடுத்து என்ன நடக்கும். உதாரணத்திற்கு பிரபல WWE வீரரான ராக் ஜான்சன் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று கொண்டிருக்கும் போது ரசிகர்கள் அனைவரின் மனதையும் வெகுவாக கவர்ந்தார். எனவே இவர் திரைத்துறையில் அறிமுகமாகும் போதும் இவர் எதிர்பார்த்த அளவுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அதே போல ரோமன் ரெய்ங்ஸ் இன்னும் 5 ஆண்டுகளுக்கு WWE போட்டிகளில் முழு நேரமாக பங்கேற்று வந்தாலும். அதன் பின்னர் இவர் கட்டாயம் அந்த நிகழ்ச்சிகளுக்கு ஓய்வு அளிப்பர். அப்போது இவர் ராக் மற்றும் ஜான் சீனா போல திரைத்துறைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோமன் ரெய்ங்ஸ்-ன் அடுத்த நிலை என்ன ?
ரோமன் ரெய்ங்ஸ் சமீபத்தில் WWE நிகழ்ச்சியின் அதிகாரப்பூரவ வீடியோ கேம் 2020-க்கும் ஒப்பந்தமாகியுள்ளார்.