நேற்று டெல்லியில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை குவித்தது. இதன் பின்னர், களம் புகுந்த டெல்லி அணி 128 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. மேலும், இந்த தொடரின் ஆறாவது வெற்றியை பெற்ற பெற்ற மும்பை அணி, புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது. இந்த வெற்றிக்காண இரு காரணங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
#1.ஒருங்கிணைந்த பேட்டிங்:
மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 30 ரன்களும் குயின்டன் டி காக் 35 ரன்களையும் குவித்து ஒரு சிறப்பான அடித்தளத்தை உருவாக்கினர். பின்னர், களமிறங்கிய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் மிடில் ஓவர்களில் விளையாடி 27 பந்துகளில் 26 ரன்களை குவித்தார். முதலாவது இன்னிங்சில் கடைசி கட்ட ஓவர்களில் களம் புகுந்த ஹர்திக் பாண்டியா மற்றும் குருனால் பாண்டியா ஆகிய இருவரும் இணைந்து அட்டகாசமாக விளையாடி தங்களது பார்ட்னர்ஷிப்பில் 54 ரன்களை குவித்தனர். இதில் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 32 ரன்களை குவித்தார். மேலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் ரேட் 200-ஐ தாண்டியது. மறுமுனையில், விளையாடிய குருனால் பாண்டியா 26 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் உட்பட மொத்தம் 37 ரன்களை குவித்தார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 168 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது.
#2.பந்துவீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்திய ரோகித் சர்மா:
நேற்றைய ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சில் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை தனது அபார வழிநடத்தலால் எதிரணி வீரர்களின் விக்கெட்களை வீழ்த்த செய்தார், கேப்டன் ரோகித் சர்மா. டெல்லி அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் மற்றும் பிருத்திவி ஷா ஒரு சிறப்பான தொடக்கத்தை அளித்திருந்தாலும் பின்னர் களம் புகுந்த டெல்லி பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க தவறினார்கள். இதற்கு முக்கிய காரணம் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களான பும்ரா மற்றும் ராகுல் சாகரின் கட்டுக்கோப்பான பந்து வீச்சே.
இரண்டாவது இன்னிங்சின் ஏழாவது ஓவரை வீச வந்த ராகுல் சாகர் இன்னிங்ஸின் முதல் விக்கெட்டை கைப்பற்றினார். இவரின் அடுத்தடுத்த இரு ஓவர்களிலும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். 20 ஓவர்களின் முடிவில் ராகுல் சாகர் 3 விக்கெட்களையும் உம்ரா இரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த நேர்த்தியான பந்துவீச்சில் தாக்குதலால் டெல்லி கேப்பிடல் 128 ரன்களை மட்டுமே. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேற்கூறியவையே மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு ஊன்று கோலாய் அமைந்தால் இரு காரணங்கள் ஆகும். .