ஐபிஎல் 2019: கடைசி போட்டியில் வெற்றி பெற கொல்கத்தா அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் 

The KKR players (picture courtesy: BCCI/iplt20.com)
The KKR players (picture courtesy: BCCI/iplt20.com)

12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி ஆரம்பமாகி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தன. மீதம் இருக்கும் ஒரு இடத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் மல்லுக்கட்டுகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான் விளையாடிய முதல் 5 போட்டிகளில் 4இல் வென்று அசத்தியது. அதற்கு பின்பு தான் அந்த அணிக்கு பலத்த சோதனை காலமாக மாறிவிட்டது.

ஆம் அடுத்து விளையாடிய ஆறு போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியடைந்து தடுமாறியது. அதற்கு பின் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றை பற்றி நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலை வந்தது. இந்நிலையில் சுதாரித்துக் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அடுத்ததாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் எளிதாக வென்று பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நின்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நாளை நடக்கும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த ஊரான மும்பையில் சந்திக்கிறது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் இருக்க முடியும். இல்லையென்றால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி இருக்க வேண்டும். அப்படியே பெங்களூர் அணி ஐதராபாத் அணியை வீழ்த்தினாலும் அந்த அணியின் ரன்ரேட் விகிதம் அதிகமாக உள்ளது. அதனால் கண்டிப்பாக ஜெய்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. அதற்கு நாளைய போட்டியின் போதுது அணியில் சில கடினமான மாற்றங்களை செய்ய வேண்டி உள்ளது.

இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பார்மின்றி தவித்து வரும் ராபின் உத்தப்பாவிற்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை அணியில் நாளை வாய்ப்பளித்து பார்க்கலாம். குல்தீப் யாதவிற்கும் இந்த வருட ஐபிஎல் சீசன் நன்றாக அமையவில்லை, அவரது பந்துகளை பேட்ஸ்மேன்கள் நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த மாற்றம் தேவையற்றது என்று தோன்றலாம், ஆனால் கூர்ந்து நோக்கினால் அதன் நோக்கத்தை நாம் உணரலாம். மும்பை வான்கடே மைதானம் பொதுவாகவே பேட்டிங்கிற்கு ஒத்துழைக்க கூடியதாகும்.

கொல்கத்தா அணியிடம் ஏற்கனவே நிறைய பேட்ஸ்மேன் இருப்பதால் உத்தப்பாவிற்கு வேலை இருக்காது. குல்தீப் யாதவை அணியில் சேர்ப்பதன் மூலம் கேப்டன் தினேஷ் கார்த்திக்கு நிறைய பவுலரை தேர்ந்தெடுக்கும் சவுகரியமும் கிடைக்கும். குல்தீப் யாதவும் தன் திறமையை நிரூபிக்க காத்துக் கொண்டிருப்பார். எப்படி இருந்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியை கொல்கத்தா அணி வென்றே ஆக வேண்டும் .

Quick Links

App download animated image Get the free App now