2019 ஐபிஎல் மார்ச் 23 அன்று தொடங்கி விருவிருப்பான முறையில் நடைபெற்று வருகிறது. பல்வேறு வீரர்கள் தங்களின் பழைய ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருவதை இதற்கு சான்றாக கூறலாம். ஒவ்வொரு வீரர்களும் தங்களது அதிரடி ஆட்டத்தை தாங்கள் விளையாடும் அணிக்கு அளித்து வருகின்றனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தவிர மற்ற அனைத்து அணிகளும் தங்களது சிறந்த அணி கட்டமைப்பு மூலம் வெற்றியை குவித்து வருகின்றனர். பெங்களூரு அணி 6 போட்டிகளில் பங்கேற்று ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் புள்ளி அட்டவனையில் கடைசி இடத்தில் உள்ளது. இவ்வருட சீசனின் அதிரடி நட்சத்திர வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், ஆன்ரிவ் ரஸல் திகழ்கின்றனர். எவ்வகையான பந்துவீச்சாக இருந்தாலும் அதனை சமாளிக்கும் அளவிற்கு திறமை உடையவர்களாக இந்த ஐபிஎல் தொடரில் இவர்கள் திகழ்கின்றனர்.
அனைத்து வீரர்களும் தங்களது அணியின் வெற்றிக்காக தங்களது பங்களிப்பை ஒவ்வொரு போட்டியிலும் அளித்து வெற்றி பெற செய்கின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் தனித்திறனுடன் விளங்கும் சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் தங்களது அணியின் ஆடும் XI-ல் விளையாடும் வாய்ப்பு இல்லாமல் பரிதவிக்கின்றனர். இதற்கு காரணம் முந்தைய ஐபிஎல் தொடரில் இவர்களது சுமாரான ஆட்டத்திறனே ஆகும். நாம் இங்கு 2019 ஐபிஎல் தொடரில் ஐபிஎல் அணிகளால் ஆடும் XI-லிருந்து ஓரங்கட்டப்பட்ட 3 சர்வதேச நட்சத்திர வீரர்களை பற்றி காண்போம்.
#3 ஷகிப் அல் ஹாசன் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வரும் ஷகிப் அல் ஹாசன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் இந்த ஐபிஎல் சீசனில் தக்கவைக்கப்பட்டார். வங்க தேசத்தில் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக இவர் திகழ்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த ஐபிஎல் வரை இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் தனது பெரும் பங்களிப்பை அளித்து வந்தார். இவர் இதுவரை 61 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 22.15 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 7.46 எகானமி ரேட்டுடன் 58 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வங்க தேச அணியின் முன்னாள் கேப்டனான இவர் ஒரு சிறந்த அதிரடி ஹிட்டர் மற்றும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமது நபியின் சிறந்த ஆட்டத்திறனால்தான் ஷகிப் அல் ஹாசனின் ஆல்-ரவுண்டர் திறன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பயன்படாமல் போனது. பவர்பிளே ஓவரில் மிகவும் சிறப்பான முறையில் பந்துவீசுகிறார் முகமது நபி. எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை உருவாக்குகிறார் முகமது நபி. உலகின் சிறந்த ஆல்-ரவுண்டரான ஷகிப் அல் ஹாசனின் வரவை எதிர்நோக்கி கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.
#2 காலின் முன்ரோ - டெல்லி கேபிடல்ஸ்
நியூசிலாந்து அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக காலின் முன்ரோ விளங்குகிறார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த காலின் முன்ரோ 2018 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் அந்த அணியின் பேட்டிங் லைன் ஆப் கூடுதல் பலம் பெற்றது. ஐபிஎல் தொடரில் இவரது சராசரி 11.62 மட்டுமே ஆகும். ஆனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவரது பேட்டிங் மிகுந்த அதிரடியாக இருக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேக அரைசதத்தை விளாசிய முதல் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் காலின் முன்ரோ. யுவராஜ் சிங் 12 பந்துகளில் இங்கிலாந்திற்கு எதிராக அரைசதம் விளாசியுள்ளார். அதற்குப் பிறகு இலங்கைக்கு எதிராக 14 பந்துகளில் அரைசதம் விளாசியவர் காலின் முன்ரோ. உலகில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் டி20 தொடர்களில் பங்கேற்று 3500க்கு மேற்பட்ட ரன்களை குவித்து அனைவரின் மனம் கவர்ந்த வீரராக காலின் முன்ரோ திகழ்கிறார். சர்வதேச டி20யில் ரோகித் சர்மா (4 சதங்கள்)விற்கு பிறகு அதிக சதங்களை விளாசியோர் பட்டியலில் காலின் முன்ரோ 3 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் கூட காலின் முன்ரோ விளையாடவில்லை. டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்கம் தற்போது சிறப்பானதாக இல்லாத காரணத்தால் இனிவரும் போட்டிகளில் இவரை அணி நிர்வாகம் பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#1 மார்டின் கப்தில் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
இந்த வரிசையில் மற்றொரு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் மார்டின் கப்திலும் உள்ளார். கடந்த சில வருடங்களாக ஓடிஐ/டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியின் தூணாக மார்டின் கப்தில் உள்ளார். தனது அறிமுக போட்டியிலேயே சதம் விளாசிய முதல் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்டின் கப்தில். பிப்ரவரி 2019 வரையிலான புள்ளி விவரப்படி டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்தை வகிக்கிறார். இந்த பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.
சிறந்த தொடக்க வீரரான மார்டின் கப்திலுக்கு ஐபிஎல் தொடர் அவ்வளவு சிறப்பானதாக இருந்ததில்லை. 2 ஐபிஎல் சீசனில் பங்கேற்றுள்ள இவர் 10 போட்டிகளில் பங்கேற்று 1 அரைசத்துடன் 189 ரன்களை குவித்துள்ளார். மார்டின் கப்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 2019 ஐபிஎல் ஏலத்தில் 1 கோடிக்கு வாங்கப்பட்டார். ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரது அதிரடியான தொடக்கத்தால் மார்டின் கப்திலுக்கு தனது பயமில்லா ஆட்டத்திறனை வெளிபடுத்த வாய்ப்பு கிடைக்காமலே போனது. இவருக்கு ஏதேனும் ஒரு போட்டியில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சிறந்த ஆட்டத்திறனை இவர் வெளிபடுத்துவார். அந்த அளவிற்கு இவருக்கு திறமை உள்ளது.